மனதின் போர்களம்மாதிரி
நிலையற்ற நியாயந்தீர்ப்பது
தங்களுடைய பலவீனங்களை மறைக்க, மற்றவர்களையே சுட்டிக்காட்டி நியாயந்தீர்ப்பது சிலருடைய வழக்கம். “உன் மேல் குற்றம் சுமத்த மற்றவர்களுக்கு தருணம் கிடைப்பதற்கு முன், நீ அவர்கள் மேல் குற்றம் சுமத்திவிடு,” என்பது அவர்களுடைய தத்துவம். எங்கள் வீட்டுப்பக்கத்தில் வாழ்ந்த ஒரு பெண், எப்பொழுதும் குண்டாக இருப்பவர்களை சுட்டிக்காட்டி, கடுமையாக அவர்களைக் குறித்துப் பேசுவது எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. அவள் தன்னை மேன்மையாக்கி, மற்றவர்கள் அவள் எடையை கவனித்து ஏதாவது சொல்லிவிடுவதற்கு முன்பு, அவள் மற்றவர்களை பகைத்துக்கொண்டிருந்தாளோ என்று எனக்கு தோன்றுகிறது.
குற்றம் சாட்டுவதையும், பழி சுமத்துவதையும், வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கொண்ட குடும்பத்தில் நான் வளர்ந்து வந்தேன். அதனால், மற்றவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று தீர்மானிப்பதில், நான் தேறினவளாக இருந்தேன். மற்றவர்களுடைய குறை, குற்றங்களை, நாம் மனதிலே, நியாயந்தீர்க்க நம்மை மும்முரமாக செயல்படவைப்பவன் பிசாசு. எப்பொழுதும் மற்றவர்களிடம் குற்றம் கண்டு பிடிப்பதால், அவர்கள் குறைகளை எளிதில் நாம் சுட்டிக்காட்ட முடிகிறது.
ஒரு காலத்தில், ஷாப்பிங்-மாலில் உட்கார்ந்து; வந்து போகிறவர்களை, வேடிக்கை பார்த்துக்கொண்டே; குற்றும் சாட்டும் மனப்பான்மையுடன், ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒன்று சரியில்லை என்பதை, பார்த்த பார்வையிலேயே கண்டுபிடித்து விடுவேன். ஒருவர் தலை முடி சரியில்லை, வேறொருவருடைய உடை நாகரீகமாக இல்லை, மற்றும் வெவ்வேறு பிரச்சனைகளையும், இப்படிப்பட்ட நியாயந்தீர்க்கும் கண்ணோட்டத்தில் இருப்பவர் கண்டுபிடிக்கக்கூடும். இதற்கு கடைசியில் முடிவே இராது.
மற்றவர்களை நியாயந்தீர்க்க, அல்லது குறைகூற விரும்புபவர்கள் என்ற சொற்றொடரை நான் உபயோகித்திருப்பதை கவனியுங்கள். நானும் அதைத்தான் செய்துக்கொண்டிருந்தேன். ஆனால், மற்றவர்கள் என்னை குறை கூறுபவள், மற்றவர்களை பழிப்பவள் என்று அடையாளம் காட்டியிருந்தால், உடனே அதை மறுத்திருப்பேன். ஏனெனில், என்னுடைய பிற்போக்கான செயலை என்னை அறியாமலேயே செய்பவளாக நான் இருந்தேன். இப்படிப்பட்ட நினைவுகளுக்கு இடங்கொடாமல் இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியாததால், நான் இப்படி மற்றவர்களை குறை கூறுவதையும், அவர்கள் தவறுகளை சுட்டிக்காட்டி புண்படுத்துவதையும், என்னுடைய களங்கமற்ற ஒரு போக்காக எண்ணினேன்.
மற்றவர்களைக் குறித்த என் அபிப்பிராயங்கள், தேவையற்றது என்பதை நான் நினைக்கவில்லை. மற்றவர்களுடைய குறைகள் என்று நினைத்து, என் நண்பர்களிடம் நான் சுட்டிக்காட்டிய காரியங்கள், ஒருவருக்கும் எந்த பயனையும் அளிக்கவில்லை. நாம் எதை சிந்திக்க வேண்டுமோ, அதை நாம் சரியாகத் தெரிந்துகொண்டு, அதில் நாம் கவனம் செலுத்தவேண்டும் என்பதை, நான் இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன். நம்முடைய மனதில் நினைவலைகள் எழும்பும்போதே, நாம் எதை சிந்திக்கலாம், என்று நம்மால் தேர்வு செய்யமுடியாது, ஆனால் அந்த நினைவுகளை நாம் நம்முடைய மனதில் தங்கவைத்துக்கொள்ளவோ, அல்லது தள்ளிவிடவோ நம்மால் முடியும்.
பிசாசு, மற்றவர்களை புண்படுத்தும் அளவுக்கு இப்படிப்பட்ட கொடூரமான, கடுமையான, நியாயந்தீர்க்கிற எண்ணங்களை, என் மனதில் கொண்டு வரும்போது, எனக்குள் கொஞ்ச நேரம் போராட்டம்தான், முடிவில் கர்த்தருடைய வார்த்தையை பயன்படுத்தி அந்த எண்ணங்களை விரட்டிவிட்டேன். நம்முடைய சிந்தனைகளை சீர்படுத்த, பிலிப்பியர் 4:8ஐ விட பொருத்தமான வசனம் இல்லை என்று நினைக்கிறேன்.
“கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ள வைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவை களெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்”.
மற்றவர்களை நியாயந்தீர்த்ததினால், என் வாழ்க்கையில் அநேக ஆண்டுகளை வேதனையில் கழித்தேன். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்களின் தோற்றம், அதைக்குறித்து சொல்வது என்னுடைய வேலையில்லை; என்று எனக்கு நானே சொல்லிக்கொள்ளவேண்டும் என்று விரும்பினேன். அது என்னுடைய வேலை இல்லைதான் - அந்த கெட்ட சிந்தனைகளை, நல்ல சிந்தனைகளாக மாற்ற, எனக்கு நீண்ட நாட்களாயிற்று.
மற்றவர்களை குற்றவாளியென்று தீர்க்கிற என்னுடைய அந்த நடத்தைக்கு, நான் கணக்கொப்புவிக்கவேண்டும் என்று கர்த்தர் என்னிடம் பவுலின் வார்த்தைகளை சுட்டிக்காட்டி பேசினார்: “இப்படியிருக்க, நீ உன் சகோதரனை குற்றவாளியென்று தீர்க்ககிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே. ஆதலால், நம்மில் ஒவ்வொரு வனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.
இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிக ளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாக, தடுக்கலையும், இடறலையும், போடலாகதென்றே தீர்மானித்துக் கொள்ளுங்கள் (ரோமர் 14:10,12,13).
நாம் யார்? நாம் கர்த்தருடைய பிள்ளைகள். விசுவாசிகளாக, ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள்தான் - இது தேவனுடைய குடும்பம். நம்முடைய குடும்ப அங்கத்தினர்களையே நாம் கண்டனம் செய்யாமல், அதற்கு பதிலாக, நாம் அவர்களை நேசித்து, பாதுகாக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
தேவனே, நான் அவ்வப்போது மற்றவர்களோடு என்னை ஒப்பிட்டு அவர்களை நியாயந்தீர்த்திருக்கிறேன். அது தவறு என்று நான் அறிவேன். ஒவ்வொரு பொல்லாத குற்றம் சாட்டுகிற, நியாயந்தீர்க்கிற பிசாசின் நினைவுகளை, வல்லமையுள்ள இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தோற்கடிக்க எனக்கு உதவி செய்யும். உம்முடைய உதவியினாலும், உம்முடைய வார்த்தையாலும் நான் மேற்கொள்ள முடியும் என்று அறிந்திருக்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/