மனதின் போர்களம்மாதிரி
ஒருவர் தவறு செய்தால்
பவுலில் இந்த வார்த்தைகளை வாசிக்கும்போது, “நான் செய்வது போல செய்யாதே - நான் சொல்வது போல் செய்” என்று நான் அடிக்கடி கேள்விப்படும் சொற்றொடர்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. இப்படி சொல்லுகிற ஜனங்கள், மற்றவர்கள் நெறி தவறாதவர்களாக வாழ வேண்டும் என்று அறிவுரை கூறுவார்கள். ஆனால், தாங்களோ, அந்த நெறிமுறைகளை பின்பற்ற, சற்றும் விருப்பம் இல்லாதவர் களாயிருப்பார்கள்.
புதிதாய் இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள், நிலைதடுமாறுவதும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லாததுபோல் உணர்வதும் இதனால்தான். தவறான காரியங்களை சபையின் தலைவர்கள் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள், செய்வதை இந்த புதிய விசுவாசிகள் பார்க்கும்போது, இவ்வளவு முதிர்ந்த விசுவாசிகளே இப்படி நடந்துகொள்ளும்போது ...நான் அப்படி நடந்தால் பரவாயில்லை என்று நினைக்கத் தூண்டும். இந்த போக்கு, அதே காரியத்தை இவர்களையும் செய்யவைக்கும்; அல்லது கர்த்தரை விட்டு ஒரேயடியாக திரும்பி விட செய்துவிடும்.
ஒரு காரியத்தை நாம் நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும், நம்முடைய செய்கைகளுக்கு நாம்தான் பொறுப்பு என்று கர்த்தர் சொல்லி விட்டார். நம்முடைய ஒவ்வொரு சிந்தனை மற்றும் செயல்பாடுகளுக்கு நாம் கணக்கொப்புவிக்கும் பொறுப்பை, தேவன் நமக்கு தந்திருக்கிறார். ஆனால், நம்முடைய பொறுப்பு அதோடு முடிந்து விடுகிறதில்லை. மற்றவர்கள் தவறும்போது, அவர்களுக்கு உதவி செய்து, தூக்கிவிடுவது நம்முடைய கடமையாகும்.
கலாத்தியர் 6:1-3ல் பவுல் தெளிவாக மூன்று முக்கிய அம்சங்களை, பிசாசானவன் கிரகிக்க விரும்பாததை கூறுகிறார். இந்த பகுதியில் சொல்லப்படுவது போல, இந்தக் காரியம் வேறு எந்த இடத்திலும் சொல்லப் படவில்லை. முதலாவதாக யாராவது ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ, யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நாம், நம்மால் முடிந்ததை செய்து, அவர்களை சீர்பொருந்தச் செய்ய வேண்டும். “யாராவது ஒருவர் குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர் களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப் பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும் தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத் தானே வஞ்சிக் கிறவனாவான். அவனவன் தன் தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக் கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும் போதல்ல, தன்னையே பார்க்கும்போது, மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்,” என்றும் பவுல் தொடர்ந்து எழுதுகிறார்!
உங்களில் யாராவது ஒருவர் தவறு செய்தார்கள், என்று சொல்லும்போது, வேண்டுமென்றே தவறு செய்தார்கள் என்றோ, தெரிந்து பாவம் செய்தார்கள் என்றோ சொல்லிவிடமுடியாது. ஒரு பனிச்சறுக்கலில் ஒருவர் நடக்கிறார், அவர் திடீரென்று வழுக்கி விழுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இதே போலத்தான், நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலும் -அனைவருமே, எப்பொழுதாவது தவறுவோம்.
இப்படி தவறும்போது, நம்முடைய போக்கு எப்படி இருக்கவேண்டும்? நாம் உடனே அவர்களுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும். ஐஸ்கட்டியில் யாராவது வழுக்கி விழப்பார்த்தால், இயற்கையாகவே நாம் என்ன செய்வோம்? ஓடிப்போய் தூக்குவோம். அதுதான் கிறிஸ்தவ நெறிமுறை. ஆனால் பிசாசு, நீங்கள் சரியான காரியத்தை செய்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருப்பான். “அந்த திசையிலேயே நீ திரும்பிப் பார்க்காதே. அலட்சியம் பண்ணு. நீ ஏன் அவளுக்கு உதவி செய்யவேண்டும்? ஏன்? உனக்கு அவளை தெரியவேத் தெரியாது,” என்று உங்கள் காதில் இப்படியாக சொல்லுவான். தேவையில் இருப்பவர்களை கவனிக்காமல் சென்று விடுவது ரொம்ப சுலபம்.
“சீர்பொருந்தப்பண்ணுங்கள்,” என்று மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் பொருள், திரும்பவும் பழைய நிலைக்கு கொண்டு வருதல் என்பதாகும். இதை மருத்துவர்கள், தாங்கள் செய்யப்போகும் அறுவை சிகிச்சையின் முறையை விவரிக்க பயன்படுத்தும் வார்த்தையாகும். சரீரத்திலுள்ள ஒரு வளர்ச்சியை அகற்றவோ, அல்லது உடைந்த எலும்புகளை சரிசெய்யவோ, அப்படி சொல்லுவார்கள். இதன் நோக்கம்- மனிதர்களை தண்டிப்பதல்ல; அவர்களை குணப்படுத்துவதாகும்.
பவுல் சொல்லும் இரண்டாவது குறிப்பு: இப்படி தவறிப் போனவர்களைக் குறித்து நாம் கேள்விப்படும்போது, விரல்களை நீட்டி, சுட்டிக்காட்டுவது, அல்லது அவர்களை தாழ்வாக நினைப்பதற்கு பதிலாக, நாம் நம்மையே சோதித்துப் பார்க்கவேண்டும். பிசாசு நம்மையும் கூட சோதித்து அவர்களைப் போல அல்லது இன்னும் மோசமான வேறு எதையாவது செய்ய வைத்திருக்கலாம். எனவே, நாம் மனதுருக்கத்தோடு தவறு செய்தவர்களை பார்த்து, “கர்த்தருடைய கிருபையில்லாவிட்டால் நானும் அப்படி ஆகியிருப்பேன்” என்று, நமக்கு நாமே ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக,நாம் எதையாவது செய்யும்போது பெருமையில்லாமல் அதை செய்யவேண்டும். நாம் “ரொம்ப ஆவிக்குரியவர்கள்” என்று நினைத்தால், நம்மை நாமே வஞ்சித்துக்கொள்ளுவோம். நீதிமொழிகள் 16:18, இந்த எச்சரிப்பை நமக்கு தருகிறது. “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.”
நம்முடைய சாதனைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்காமல்; அதற்கு பதிலாக, நான் செய்யக்கூடியதை எல்லாம் உண்மையிலேயே செய்திருக்கிறேனா, என்று நினைத்துப் பார்க்கவேண்டும். தவறு செய்கிறவர்களோடு நம்மை நாமே ஒப்பிட்டுப் பார்த்து, நாம் அவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று நினைக்கும்போது, சாத்தான் பெருமிதம் கொள்வான். ஆனால், இயேசு நமக்கு முன் வைத்திருக்கும் தரத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், நாம் பெருமைப்படவோ அல்லது அகந்தையாக இருப்பதற்கு, வாய்ப்பே கிடையாது. அதற்கு பதிலாக, கர்த்தர் நம்முடைய வாழ்வில் கிரியை செய்கிறார் என்று தாழ்மையுடன் அவருக்கு நன்றி சொல்லுவோம்.
அன்புள்ள பரலோக பிதாவே, தவறு செய்கிறவர்களுக்கு உதவி செய்ய எனக்கு கற்றுத்தாரும். உம்முடைய கிருபை இல்லையென்றால் நானும் தவறிப்போவேன் என்பதை எனக்கு ஞாபகப்படுத்தும். எல்லாவற்றிற்கும் மேலாக, நீர் எப்பொழுதும் என்னோடிருந்து, பிசாசானவனை மேற்கொள்ள எனக்கு உதவி செய்வீர் என்பதை எனக்கு நினைவுபடுத்தும். எல்லாவற்றிற்காகவும் உம்மை துதிக்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/