மனதின் போர்களம்மாதிரி

மனதின் போர்களம்

100 ல் 73 நாள்

குறை காணும் மனம்

“சந்தேகம்” என்ற வரம் உள்ளவர்கள் யாரையாவது நீங்கள் பார்த்திருக் கிறீர்களா? அது எல்லா இடத்திலும்...ஏன் சபைகளில் கூட இருக்கிறது. தன் சர்ச்சிலுள்ள ஒரு அப்படிப்பட்ட சகோதரியைக் குறித்து சமீபத்தில் ஒரு மனிதன் கருத்து கூறினான். அவள் எப்பவுமே, எல்லோரைக் குறித்தும் மோசமாகத்தான் பேசுவாள். யாராவது தயாளக்குணத்தோடு, தாராளமாக எதையாவது கொடுத்தால், “இதனால் அவருக்கு என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார். நாமெல்லாரும் அவருடைய காலில் விழவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்று நான் நினைக்கிறேன்,” என சொல்லுவாள்.

ஒரு முறை, ஒருவர் ஆலயத்திலிருந்த உதவியாளர் எவ்வளவு நன்றாக சந்தோஷமாக, நண்பரைப்போல பழகுகிறார் என்று சொன்னார். உடனே அந்தப் பெண், “அது பொதுவான இடத்திற்கென்று அவர் வைத்துக் கொள்ளும் முகம்,” என்று சொன்னாள். “அவர் எப்பொழுதும் சிரித்த முகத்துடன்தான் இருப்பார், ஆனால் வீட்டுக்கு போனால், ஒருவரும் அவரைப் பார்த்ததில்லை; அவர் இப்படி சிரிக்க மாட்டார் என்று நான் சொல்லுகிறேன்,” என்றாள்.

அவளுடைய இப்படிப்பட்ட நடத்தையைக் குறித்து, ஒருவரும் அவளைக் கண்டித்ததில்லையா என்று கேட்டதற்கு; அவளுடைய பதில், “நான் எதை எப்படி பார்க்கிறேனோ, அதை அப்படியே பேசிவிடுகிறேன். ஆனால், நீங்களெல்லாம் எதையாவது சொல்ல வேண்டுமானால், அதை இன்னும் நன்றாக சொல்ல நினைத்து, பாலிஷ் போட்ட மாதிரி பேசுகிறீர்கள்”.

கடைசியில் அந்த மனிதர், இனிமேல் இந்த பெண் இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் கூட நாம் இருக்கக்கூடாது என்று நினைத்தார். அவளை விட்டு கொஞ்ச கொஞ்சமாக தள்ளிப்போக ஆரம்பித்தார்.

இந்த மனிதர் ஒரு நல்ல முடிவைத்தான் எடுத்தார் என்று நான் நினைக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக நான் ஊழியத்தில் கண்டுக்கொண்ட காரியம், அப்படிப்பட்ட, குற்றம் சாட்டுகிற ஆவியோடு வரும் ஒரு நபர், ஒரு கூட்டத்திற்கு வரும்போது, மற்றவர்களும் அந்த நபரை போல மாறுவதற்கு அதிக நேரம் பிடிப்பதில்லை. இது, ஒரு அழுகின ஆப்பிள் பழம், கூடை முழுவதும் உள்ளவற்றை கெடுத்துவிடும் என்ற ஒரு சொல்லை, எனக்கு ஞாபகப்படுத்தகிறது.

எத்தனையோ ஆண்டுகளுக்கு மேலாக, இப்படிப்பட்ட மனிதர்களை நான் என் ஊழியத்தில் பார்த்திருக்கிறேன். அவர்கள், மற்றவர்களை தீர்ப்பு சொல்லுலி, குறை கூறும், சந்தேகப்படும் மனதுள்ளவர்களாயிருப்பதால், துன்பத்திற்கு ஆளாவதையும் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய வார்த்தைகளினால் எத்தனையோ உறவுகள் முறிந்து போயிருக்கின்றன.

மத்தேயு 7:18 “கெட்ட கனி” என்று கூறுவது, அந்த “மரத்தைப்” பற்றி சொல்கிறது. ஆனால், மற்றவர்களை நியாயந்தீர்க்க அதற்கு அதிகார மில்லை. நாம் யாருமே பூரணமானவர்கள் அல்ல என்பதை நாம் நினைவுகூறவேண்டும். ஒவ்வொருவரும் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான். அப்படிப்பட்டவர்களோடு நெருங்கிப் பழகாமல் இருப்பது புத்தியுள்ள செயல். அதே நேரத்தில், நம்முடைய ஆவிக்குரிய நிலை, நம்மடைய நம்பிக்கை; இவற்றை வைத்து நாம் அவர்களை நியாயந்த்தீர்த்துவிடாமலிருக்க கவனமாக இருக்கவேண்டும். நாம் ஒரு தெய்வீக போக்குள்ளவர்களாக, அப்படிப்பட்டவர்களுக்காக ஜெபிக்கவேண்டும்.

அன்பும், கரிசனையும் கொண்ட ஒரு விசுவாசியின் வேலை என்ன தெரியுமா? நாம் வாழும் இந்த வாழ்க்கையை, நாம் பார்க்கும் கண்ணோட்டத்துடன் மற்றவர்களும் பார்க்க மாட்டார்கள், என்பதை உணரவேண்டும். நாம் அனைவருமே, ஒரே வித ஆவிக்குரிய முதிர்ச்சி யின் நிலையில் இருப்பதில்லை. ஆனால், ஒன்று நமக்கு கட்டாயம் தெரியும், தேவன் சகலத்தையும், நம்மனைவரைப்பற்றியும் அறிந்தவர். ஆகையால், எல்லாவிதமான நியாயந்தீர்க்கும் காரியத்தையும், நீதியுள்ள நியாயாதி பதியாகிய - இயேசு கிறிஸ்துவிடம் நாம் விட்டு விட வேண்டும்.

யாக்கோபு, “(என்) சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய் பேசி, தன் சகோதரனை குற்றப்படுத்துகிறவன், நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப் பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனா யிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.

நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும், அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?” (யாக்கோபு 4:11, 12).

“மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிற தற்கு, நீ யார்?அவன் நின்றாலும் விழுந்தாலும், அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே” என்று பவுல் கேட்கிறதைப் நாம் பார்க்கிறோம். 


அன்புள்ள பரலோக பிதாவே, மற்றவர்களை நான் பழித்ததற்காக என்னை மன்னியும். நீர் ஒருவரே நியாயந்தீர்க்க வல்லவர் என்பதை அறிவேன். நானும், மற்றவர்களும் உமக்கு கணக்கொப்புவிக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தும். நல்ல கனிகளை என் வாழ்க்கையில் நான் கொடுக்கவும், உம்முடைய நாமத்தை அதன் மூலம் மகிமைப்படுத்தவும் எனக்கு உதவும். ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 72நாள் 74

இந்த திட்டத்தைப் பற்றி

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/