மனதின் போர்களம்மாதிரி
![மனதின் போர்களம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F11489%2F1280x720.jpg&w=3840&q=75)
நிஜமான பிரச்சனைகள்
நிஜமான பிரச்சனைகளுக்கும், கற்பனையான பிரச்சனைகளுக்கும், வித்தியாசமுண்டு. ஒருவேளை, இப்படிப்பட்ட பிரச்சனைகளை நாமும் கூட நம்முடைய வாழ்க்கையில் எப்போதாவது சந்தித்திருப்போம். இதைப்பற்றிய சுவாரஸ்யமான ஒரு சம்பவத்தை நான் கேட்க நேர்ந்தது. அந்த சம்பவத்தில், வேதாகமக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்றுக்கொண்டிருந்த ஒரு மாணவன், பணக்கஷ்டத்தால் எப்படித் தன்னுடைய செலவுகளை சமாளிப்பது, கல்லூரி படிப்புக்கு கட்டணம் செலுத்துவது என்று தெரியாமல் தவித்தான். அவனுக்கு என்று குடும்பம் இருந்தது. மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கப் போகிற அவளுடைய உடல்நிலையின் காரணமாக, படுக்கையில் ஓய்வு எடுக்க மருத்துவர் சொல்லியிருந்தார். கடைசியில், அந்த மாணவன் பண விஷயங்களில் உதவி வழங்கும் ஒரு அலுவலகத்திற்கு சென்றான்.
அவன் ஒரு வித அச்சத்தோடு நடந்து போய் அங்கு உட்கார்ந்தான். அவனுக்கு முன்பாக மேஜையில் அமர்ந்திருந்தவர் ஒரு சுவாரஸ்யமான கேள்விகளைக் கேட்டார், “உங்களுக்கு பணம்தான் உண்மையிலேயே பிரச்சினையா, அல்லது வேறு ஏதாவதா...?
அந்தக் கேள்வி அவன் வாழ்க்கையை மாற்றிற்று. ஏன் தெரியுமா? அவன் பணத்தைதான்; தன்னுடைய மிகப்பெரிய பிரச்சனையாகவும், தீர்க்கமுடியாத ஒன்றாகவும் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய செலவுகளும், பணத்தேவைகளுமே தொடர்ந்து அவன் மனதில் இருந்தது. பணம் ஒன்றுதான், அவன் வாழ்க்கையில் பிரதானமான காரியமாக மாறியிருந்தது.
இந்த இளம் மாணவன் எதையும் சொல்ல ஆரம்பிப்பதற்கு முன், அந்த ஆலோசகர் சிரித்துக்கொண்டே, “பெரும்பாலான மாணவர்கள் பணம் தேவைபடுவதால் இங்கு வருகிறார்கள். பணத்தை அவர்கள் வாழ்க் கையில் முக்கியமானதாக கருதுவதால், அது அவர்கள் வெற்றியையும் சமாதானத்தையும் திருடிவிடுகிறது,” என்று சொன்னார்.
அந்த மனிதர் தன்னுடைய மனதிலுள்ளதை அப்படியே சொல்வது போல் இருந்தது அந்த மாணவனுக்கு. அந்த நிமிடம் வரை, அந்த மனிதர் சொன்ன மாணவர்களில் ஒருவனாகத்தான் இருந்தான் இவனும். எப்படி எல்லா தேவைகளையும் சந்திப்பது என்ற நாட்டத்தில், வெற்றியும் சமாதானமும் அவனைவிட்டு சென்று விட்டன.
அந்த ஞானமுள்ள, கெட்டிகார ஆலோசகர், சில சுவாரஸ்யமான விஷயங்களை அன்று கவனித்தார். அவர், “மகனே, பிரச்சனை பணம் அல்ல; விசுவாசம். நாங்கள் உனக்கு பணத்தை கடனாக கொடுக்கலாம். ஆனால், அது உன் பிரச்சனையை தீர்க்காது. உன்னுடைய பிரச்சனை உன் தலையிலும், உன் இருதயத்திலும் இருக்கிறது. அதை சரியாக உன்னால் வரிசைப்படுத்த முடியுமானால், பணம் உன் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்காது,” என்றார்.
இதற்கு முன்பாக ஒருவரும் அந்த மாணவனிடத்தில் இப்படி பேசியதில்லை.“அந்த ஆலோசனையைக் கூறியவர், என் வாழ்க்கையைப் பற்றியும் - எதற்கு முதல் இடம் கொடுப்பது என்பதை பற்றியும், நான் மறுபடியும் சிந்திக்க தூண்டியதுமல்லாமல், அவர் சரியான திசையை எனக்குக் காட்டினார்,” என்று சொன்னான்.
அந்த ஆலோசகர் தன் வேதாகமத்தை எடுத்து அந்த மாணவனை அவர் ஏற்கனவே கோடிட்டு வைத்திருந்த வசனங்களை வாசிக்கச் சொன்னார். “நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின் மேல் அவர் பிரியமாயிருக்கிறார். அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.
நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும், நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை” (சங்கீதம் 37:23-25).
“அதனால் உன்னை, நீயே பார் மகனே,” என்றார் அந்த ஆலோசகர். “நீ ஒரு நல்ல மனிதனா? “நீதிமானா? அப்படியானால் மேலே சொன்ன வசனம் உன்னைக் குறித்தும், கர்த்தரோடு உள்ள உன் உறவைக் குறித்தும் என்ன சொல்லுகிறது?”
அந்த மாணவன், இரண்டு முறை சத்தமாக அந்த வசனங்களை வாசித்தான். அந்த வசனங்கள் அவனைப்பற்றியது என்று உணர்ந்தான். அவன் விழுந்து போனவனைப் போல, சோர்வுற்று விட்டுக்கொடுக்க ஆயத்தமாக இருந்தான். ஆனால், அவன் அந்த வேதாகம கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது கர்த்தரின் சித்தம், என்று மட்டும் அவனுக்கு தெரியும்.
அந்த பண உதவி செய்யும் அலுவலகத்தை அவன் விட்டு செல்லும் போது, அங்கிருந்து எந்த உதவியோ, கடனோ பெற்றவனாக இல்லா விட்டாலும்; கர்த்தரின் சித்தம் இல்லாமல், அவன் அந்தப் பள்ளியை விட்டு செல்ல வேண்டாம் என்ற உறுதியுடனும் சென்றான். இதன் பிறகு, அவன் தாமதமாக, மெள்ள, தன்னுடைய கட்டணங்களை சிரமப்பட்டுத்தான் செலுத்திக் கொண்டிருந்தான். சில நேரங்களில், அவனுக்கு அந்த கல்லூரி நிர்வாகிகள் கட்டணம் செலுத்த காலத்தவணைக் கொடுத்தனர். ஆனாலும், அவன் கடைசிவரை தங்கி இருந்து தன் படிப்பை முடித்தான். இன்றைக்கு அவன், முழுநேரமாக பாஸ்டரின் ஊழியத்தை செய்கிறான்.
தேவன் தமக்கு சொந்தமானவர்களை, அவர் பொறுப்பெடுத்துக் கொள்ளுகிறார். உன்னையும் அவர் கவனிப்பார். நம்மை நாமே எப்படி கவனித்துக்கொள்ளப்போகிறோம் என்று கலங்கி, பணத்தின் மேல் நம்முடைய கவனத்தை வைக்கவேண்டாம் என்று எபிரெயர் 13:5 தெளிவாக நமக்கு கூறுகிறது. தேவன் நம்மை விட்டு விலகமாட்டேன், கைவிடவும் மாட்டேன் என்று வாக்களித்திருக்கிறாரே, இதற்கு மேல் வேறு என்ன சொல்ல முடியும்?
விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களின் தேவனே, நான் பணத்தையோ அல்லது மற்ற காரியத்தையோ முக்கியமாக வைத்து என்னுடைய நோக்கத்தை இழந்து விட்டேன். அதற்காக வெட்கப்படுகிறேன். என்னுடைய பிரச்சனை பணமல்ல, உம்மேலுள்ள என்னுடைய விசுவாசம்தான். நான் உம்முடைய வார்த்தைகளை தியானிக்கையில், உம்முடைய வார்த்தையை நீர் கட்டாயம் என் வாழ்வில் நிறைவேற்றுவீர் என்ற விசுவாசத்தை எனக்குத் தாரும். இயேசுவின் நாமத்தில், ஜெபிக்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![மனதின் போர்களம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F11489%2F1280x720.jpg&w=3840&q=75)
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12698%2F320x180.jpg&w=640&q=75)
“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!
![உங்கள் வாழ்வின் மிகப் பெரிதான தீர்மானம்!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12604%2F320x180.jpg&w=640&q=75)
உங்கள் வாழ்வின் மிகப் பெரிதான தீர்மானம்!
![குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12656%2F320x180.jpg&w=640&q=75)
குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!
![1 தெசலோனிக்கேயர்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F15412%2F320x180.jpg&w=640&q=75)
1 தெசலோனிக்கேயர்
![பொறுப்பு (கணக்கு ஒப்புவித்தல்)](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12157%2F320x180.jpg&w=640&q=75)
பொறுப்பு (கணக்கு ஒப்புவித்தல்)
![Walk With Jesus - வாழ்க்கையில் மகிழ்ச்சி](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F15616%2F320x180.jpg&w=640&q=75)
Walk With Jesus - வாழ்க்கையில் மகிழ்ச்சி
![கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F25512%2F320x180.jpg&w=640&q=75)
கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்
![கசப்பு உன்னைக்கொல்ல விடாதே!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F14002%2F320x180.jpg&w=640&q=75)
கசப்பு உன்னைக்கொல்ல விடாதே!
![கவலைகளை மேற்க்கொள்ளுதல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12592%2F320x180.jpg&w=640&q=75)
கவலைகளை மேற்க்கொள்ளுதல்
![தேவனுக்கே முதலிடம் கொடுங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12720%2F320x180.jpg&w=640&q=75)