மனதின் போர்களம்மாதிரி
பாழான வாழ்க்கை
மனதின் போர்களம் என்ற என்னுடைய புத்தகத்தில்; என்னால் எதுவுமே செய்ய முடியாத காரியங்களுக்காக கவலைப்படுவதிலேயே, நான் அநேக ஆண்டுகளை செலவழித்துவிட்டேன், என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு மட்டும் அந்த வருடங்கள் திரும்பவும் கிடைத்தால், அதை வித்தியாசமானஅணுகுமுறையுடன் கழிப்பேன். கர்த்தர் கொடுத்த காலங்களை நாம் வீணாக கழித்து விட்ட பிறகு, நான் திரும்பவும் அதை பெற்றால் பிரயோஜனமாக செலவழிப்பேன் என்று நினைப்பது, முடியாத காரியமாகும்.
இயேசுவின் சமாதானம் நமக்காக எப்பொழுதும் தயாராக காத்திருக்கிறது என்பதை பல ஆண்டுகளாக நான் உணரவில்லை. அவருடைய சமாதானம் ஆவிக்குரியதாயிருந்து; பிரச்சினை, கூச்சல் மற்றும் குழப்பத்தின் மத்தியிலும் நமக்கு தேவனுடைய இளைப்பாறுதலைத் தருகிறது. வாழ்க்கையில் புயலே இல்லையென்றால், எல்லாம் நன்றாக இருக்கும் என்று நாம் அடிக்கடி நினைக்கிறோம். ஆனால், அது உண்மையே அல்ல. புயல்களை கடந்து, வாழ்க்கையின் போராட்டங்களை ஜெயிக்கும் போதுதான், நமக்கு உண்மையான சமாதானம் இருப்பதை நாம் உணருவோம்.
பல ஆண்டுகளுக்கு முன், மிகவும் வயது முதிர்ந்த ஒருவருடைய அடக்க ஆராதனையில் நான் கலந்துகொண்டேன். அந்த சவப்பெட்டிக்கு அருகில், தனது கணவரை பறிகொடுத்த எண்பத்து நான்கு வயது விதவை நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் வீடு நெருப்பினால் முழுவதும் எரிந்துப்போனதினால், அவர்களுடைய கணவரும் அதில் இறந்து போனார். இந்த விதவையோ, எப்படியோ உயிர் பிழைத்தாள். இதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான், அவர்களுடைய மகன் புற்றுநோயினால் காலமானார். மேலும், அவர்களுடைய மகளும், ஒரு அநியாயமான கார் விபத்தில் பலியானாள். இரண்டே வாரங்களில் தனக்கு அருமையானவர்களையெல்லாம் இழந்தாள்.
“இதையெல்லாம் எப்படி எடுத்துக்கொள்ளுகிறீர்கள்? ஒரே ஆளாக எப்படி இவ்வளவையும் தாங்கிக்கொள்ளுகிறீர்கள்?” என்று யாரோ கேட்பது என் காதில் விழுந்தது. கலங்கின கண்களுடன் அவர்கள் உறுதியாக பதிலளித்தார்கள். “அது எளிதாக இருக்கவில்லை. ஆழமாகிக்கொண்டே போகும் ஒரு ஆற்றை கடப்பது போல நான் உணர்ந்தேன். நான் மூழ்கி விடுவேன் என்று நிச்சயமாக எனக்குத் தெரிந்தது. தேவனடைய உதவிக்காக நான் அவரை நோக்கி கதறினேன். என்ன நடந்தது தெரியுமா? என் பாதங்கள் ஆற்றின் தரையை தட்டியது. ஆனால், என் தலையோ தண்ணீருக்கு மேல்தான் இன்னும் இருந்தது. நான் மறு கரையை சென்று அடைந்தேன். தேவன் என்னோடு இருந்தார். நான் நிச்சயமாக மூழ்கி விடுவேன் என்று இருந்தாலும், ‘தேவனுடைய சமாதானமே’ என்னை முன்னேற வைத்தது,” என்று அவர்கள் சொன்னார்கள்.
தேவனுடைய சமாதானம் இப்படியே கிரியை செய்வதாலும், இயேசு நம்மோடு இருப்பதாலும், நாம் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை என்பதை அவரே தெளிவாய் சொல்லியிருக்கிறார். தண்ணீர் எவ்வளவு ஆழமாக இருந்தாலும், இயேசு நம்மோடு தான் இருக்கிறார்!
இந்த தேவ சமாதானம் இன்றி, கவலையுடன் நான் வாழ்ந்த நாட்களை நினைத்துப் பார்த்தேன். ஒரு விசுவாசியாக நான் இருந்தபடியால், எனக்கு தெரிந்த விதத்தில் எல்லாம் தேவனை பின்பற்ற முயன்றேன். இருப்பினும், அந்த நாட்களிலே எங்களுக்கு பணம் ஒரு பெரிய பிரச்சனையாகவே இருந்தது. எங்கள் செலவுகளையெல்லாம் சந்திக்க எங்களால் முடியுமா என்று அநேகந்தடவை கவலைப்பட்டேன்.
என் கணவர் டேவோ, எதைக்குறித்தும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்தக் கவலையினால் என் தலையே சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால், அவரோ இன்னொரு அறையில், பிள்ளை களுடன் விளையாடிக்கொண்டிருப்பார். ஒரு தடவை வெறுப்பாக “பிள்ளைகளுடன் விளையாடுவதற்கு பதிலாக எனக்கு வந்து உதவி செய்யலாமே,” என்று நான் கேட்டுவிட்டேன்.
“நான் என்ன செய்யவேண்டும் என்று நீ விரும்புகிறாய்?” என்று அவர் கேட்டார்.
எனக்கு என்ன பதில் சொல்வதென்றேத் தெரியவில்லை. அவர் செய்தவற்கு ஒன்றுமில்லை, அதுவும் எனக்குத் தெரியும். ஆனால், பணக்கஷ்டமே இல்லாதது போல அவர் விளையாடி க்கொண்டேயிருந்தது, என்னை கோபப்படுத்தியது. ஆனாலும், அதே நேரத்தில் நான் ஒரு வெளிப்பாட்டை பெற்றுக்கொண்டேன்.
எங்கள் செலவுகளையெல்லாம் எப்படி சந்திக்கப்போகிறோம் என்று ஒரு மணி நேரமாவது, சமையலறையில் கவலைப்பட்டு நான் புலம்பி யிருப்பேன். நான் என்ன தான் செய்தாலும், அந்த மாதம் போதுமான அளவுக்கு பணமில்லை. டேவுக்கு இந்த பிரச்சனை புரியாமலில்லை. அது அவருக்கும் பிடிக்கவில்லை. இருந்தும் என்னைப் போல் புலம்பவில்லை. இந்த நிலைமையை மாற்ற இனியும் அவரால் எதுவும் செய்ய முடியாது என்பதை அறிந்திருந்தார்.
“நம்மால் எதையும் மாற்ற முடியவில்லை என்றால், நீ மாற்றியமைக்க முயற்சி செய்து, உன் வாழ்க்கையை நீ ஏன் வீணடிக்கவேண்டும்?” என்று அவர் சொல்லாமல் சொல்வது போல இருந்தது.
என் கடந்த காலத்தை யோசித்துப் பார்க்கும்போது, நான் வெட்கப்படுகிறேன். திருமணமான ஆரம்ப வாழ்க்கையை என் கணவருடனும், பிள்ளைகளுடன் அனுபவிப்பதை விட்டு விட்டு, என்னால் இயலாதவைகளையே முயன்று, முயன்று, வீணடித்துவிட்டேன்.
ஆனால், தேவனோ, அற்புதமாக எங்கள் பணத் தேவைகளை சந்தித்தார். நான் கவலைப்பட்டதினால் ஒரு பிரயோஜனமும் இல்லை. எனக்கு தேவன் அளித்த அற்புதமான, நிறைவான ஜீவனின் ஒரு பகுதியை; வீணடித்து விட்டேன். இப்பொழுது நான் அதை பெற்று, அதற்கு நன்றியுள்ளவளாகவும் இருக்கிறேன். ஆனால், இதற்கு முன்பு இன்னும் அதிக அளவில் அந்த பரிபூரணமான ஜீவனை நான் அடைந்து வாழ்ந்திருக்கக்கூடும். எனக்கு கொஞ்சக் காலம் ஆனது. ஆனாலும், கடைசியில், என் பரமபிதாவின் உண்மையை அனுபவிக்க இப்பொழுது கற்றுக்கொண்டேன்.
சமாதானத்தின் தேவனே, உம்முடைய பிரசன்னத்தை நான் அறிந்து அனுபவிக்கவும், உம்முடைய ஆசீர்வாதங்களுக்காக நன்றியுள்ளவனாக இருக்கவும் எனக்கு உதவி செய்யும். நீர் உம்முடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் காரியங்களை, நான் செய்ய முடியாமல் கவலைப்பட்டு நேரத்தை வீணடிக்காமல் இருக்க எனக்கு உதவும். என்னை கவலையிலிருந்து விடுவிக்கும்படி இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/