மனதின் போர்களம்மாதிரி

மனதின் போர்களம்

100 ல் 70 நாள்

பரிசுத்த பயம்

யோசபாத் ராஜாவாகும்போது, யுதா ஒரு சிறிய தேசமாக இருந்தது. அதைச் சுற்றியிருந்த தேசங்கள், எளிதில் அதை ஜெயித்துவிட முடியும். ராஜாவாகிய யோசபாத் நிறைய சீர்திருத்தங்களைச் செய்தான் என்று அறிகிறோம். “இதற்கு பின்பு, மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோட அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷரும் கூட, யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள்” என்று வேதம் நமக்குக் கூறுகிறது (2 நாளாகமம் 20:1).

இந்த சூழ்நிலையில், எந்த ஒரு ராஜாவும் செய்யும் புத்தியுள்ள காரியம், என்னவென்றால், உடனே சரண் அடைந்து, அவர்களுடன் சமாதானமாய் போவதுதான். மனுஷீகமாக பார்த்தால், அவ்வளவுப் பெரிய படைய வீழ்த்த, இந்த சிறிய தேசத்தால் முடியாது. அப்பொழுது யோசபாத் பயந்து ...அவனால் எப்படி பயப்படாமல் இருக்கமுடியும்? ஆனால், பயப்படுவதோடு அவன் நிறுத்திவிடவில்லை.

பயப்படுவதில் தவறில்லை, அது நமக்கு ஒரு அபாய எச்சரிப்பின் குரலைப்போன்றதாகும். ஆனால், அதை மீறி, பயத்தை நாம் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கவேண்டும். நாம் ஒருவேளை செயல்படுவோம், நம்முடைய மானத்தை விட்டு கெஞ்சுவாம், அல்லது அலட்சியம் செய்து விடுவோம். ஆனால், யோசபாத் ராஜாவோ, சரியான காரியத்தை செய்தான். “கர்த்தரை தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு...” (வ.3) இந்த சூழ்நிலையில் அவன் வேறு எந்தத் தீர்மானமும் செய்யவில்லை. இவ்வளவு சிறிய படையை வைத்து, எதிரிகள் மேல் வெற்றிபெற நினைப்பது முட்டாள்தனம். பிசாசுக்கு எதிராக உள்ள நம்முடைய போராட்டங்களிலேயும், நாம் கற்றுக் கொள்ளவேண்டிய முக்கியமான பாடம் இது. நம்முடைய எதிராளியாகிய பிசாசானவனை, நம்முடைய சுயபெலத்தினால் நாம் மேற்கொள்ளலாம் என்று நினைத்தால், அது முட்டாள்தனம், நாம் பெரிய தவறு செய்துவிடுவோம்.

ராஜா ஜெபித்ததோடு மட்டுமல்லாமல், யூதாவெங்கும் உபவாசத்தை கூறுவித்தான். அது மட்டுமல்லாமல், அவன் ஜனங்களின் நடுவே எழுந்து நின்று விடுதலைக்காக ஜெபித்தான் என்று வேதம் சொல்லுகிறது. “இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்கு பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால், எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது,” என்றான். 

இப்படிப்பட்ட ஜெபத்தைத்தான் கர்த்தர் கேட்க விரும்பினார். நாங்கள் செய்யவேண்டியது, இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை என்று ஜனங்களனைவரும் ஒத்துக்கொண்டார்கள். அவர்கள் வெற்றிபெற, அவர்களின் ஒரே நம்பிக்கை, தேவனிடத்திலிருந்து வரும் விடுதலைதான்.

அப்பொழுது, கர்த்தருடைய ஆவியானவர் யகாசியேல் எனும் மனிதனின் மேல் இறங்கினார். அவன் சொன்னது: “சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடைய தல்ல; தேவனுடையது” (வ.15). அவன் மேலும் சொன்னது; “இந்த யுத்தத்தை பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்து நின்று, கர்த்தர் உங்களுக்கு செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்;” (வ.17).

அதன் பிறகு, ஜனங்கள் கர்த்தரைப் பாடி துதிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் அப்படிச் செய்தபோது; யூதாவுக்கு விரோதமாய் பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும் ஒருவருக்கு விரோதமாக ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால், அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.

உங்கள் விரோதிக்கு எதிராக யுத்தத்தில் ஜெயிக்க, இதுதான் மிகப் பெரிய இரகசியமாக இருக்கிறது. நீங்கள் உங்கள் பயத்தை ஒத்துக்கொள்ள வேண்டும் - நீங்கள் அதை ஒரு “பரிசுத்த பயம்” என்றும் அழைக்கலாம்; ஏனென்றால், நீங்கள் கர்த்தரை தேடுவதற்கு, இந்த “பரிசுத்த பயம்” உங்களை உந்தித் தள்ளுகிறதாயிருக்கிறது. நீங்கள் உண்மையாகவே பயந்து போய், பிரச்சனையை உங்களைவிடப் பெரிதாக பார்க்காத வரைக்கும், உங்களுக்கு உதவி செய்யும்படி, நீங்கள் ஏன் தேவனை அழைக்கப்போகிறீர்கள்? அது கட்டுப்படுத்த முடியாமல் போகும்போதுதான், தெய்வீக ஒத்தாசை எனக்கு தேவை என்பதை நீங்கள் உணருகிறீர்கள். ஏசாயா இவ்வாறு கூறுகிறார்: “வெள்ளம் போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்” (ஏசாயா 59:19).


தேவனே, எனக்கு பயம் என்றால் என்னவென்று தெரியும். அடிக்கடி நான் பயத்தில் கவனம் செலுத்தியிருக்கிறேன். உம்மை நோக்கி கூப்பிட்டால், உம்முடைய விடுவிக்கும் கரத்தால் என்னை நீர் விடுவிக்க, இது ஒரு சந்தர்ப்பம் என்பதை மறந்து விட்டேன். எனக்கு “பரிசுத்த பயத்தைத்” தாரும். அப்பொழுது கஷ்டத்தின் மத்தியிலும் நான் உம்மை நோக்கி கூப்பிடுவேன். இயேசுவின் நாமத்தினால் கேட்கிறேன். ஆமென்.

நாள் 69நாள் 71

இந்த திட்டத்தைப் பற்றி

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/