ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் - ஆவியில் வாழ்க்கைமாதிரி

Oswald Chambers: Peace - Life in the Spirit

30 ல் 9 நாள்

பாவத்தை அகற்றும் நோக்கத்திற்காக தேவனே இயேசு கிறிஸ்துவாக இந்த உலகிற்கு வந்தபோது, ​​மனிதர்கள் அவரிடம் எதையும் காணவில்லை. ஆனால் ஒரு பாவியின் இதயம் அவரைக் கண்டபோதோ, ​​அந்த சிலுவை மரணம் ஏன் அவசியம் என்பதைப் புரிந்துகொள்ளக்கூடிய அளவில் அவனது இதயமும் மனமும் இருந்தது. ஒரு மனிதன் எப்போதும் இருப்பதைவிட இருக்கக்கூடிய மிக மோசமான நிலை என்னவென்றால், ஒருபோதும் தனது பாவத்தை உறுதிப்படுத்தவோ அல்லது உறுதியாகவோ சொல்ல முடியாமல், எல்லார்க்கும் முன்பும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருப்பினும், இயேசுவை பிரதிநிதித்துவப்படுத்தும் விஷயங்களுக்கு முற்றிலும் மனதளவில் இறந்தும் இருப்பர்.

நம்மில் பெரும்பாலோர் மேலோட்டமானவர்கள், உண்மையை பற்றி நாம் பெரும்பாலும் சிந்திப்பதில்லை. இங்கு இருக்கும் நிம்மதியுடனும், எளிதான சமாதான காரியங்களால் நாம் ஆட்கொள்ளப்படுகிறோம், தேவனுடைய ஆவியானவர் வந்து நம் வாழ்வின் சமநிலையைத் தொந்தரவு செய்யும் போது, ​​அவர் வெளிப்படுத்துவதை புறக்கணிக்க விரும்புகிறோம்.

பிரதிபலிப்பிற்கான கேள்விகள்: தவறான அமைதி ஏன் மிகவும் ஆபத்தானது? எளிதான அமைதி ஏன் தற்காலிகமானது? ஆறுதல் ஏன் அமைதியின் எதிரி?

Bringing Sons into Glory and The Psychology of Redemption என்பதிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள், © டிஸ்கவரி ஹவுஸ் பப்ளிஷர்ஸ்

வேதவசனங்கள்

நாள் 8நாள் 10

இந்த திட்டத்தைப் பற்றி

Oswald Chambers: Peace - Life in the Spirit

சமாதானம்: லைஃப் இன் தி ஸ்பிரிட் என்பது உலகின் மிக பிரியமான ஆவிக்குரிய தியான எழுத்தாளரும் மை உட்மோஸ்ட் ஃபார் ஹிஸ் ஹைஸ்டெஸ்ட்டின் ஆசிரியருமான ஓஸ்வால்ட் சேம்பர்ஸின் படைப்புகளின் மேற்கோள்களின் தூண்டுதலான கருவூலமாகும். தேவனில் இளைப்பாறுதலைக் கண்டுபிடித்து, உங்கள் வாழ்க்கையில் தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய டிஸ்கோவெரி ஹவுஸ் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.utmost.org க்கு செல்லவும்