ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் - ஆவியில் வாழ்க்கைமாதிரி

Oswald Chambers: Peace - Life in the Spirit

30 ல் 13 நாள்

இருளான இதயம் ஒரு கொடிய விஷயம், ஏனென்றால் இருண்ட இதயம் ஒரு மனிதனை அமைதியடையச் செய்யலாம். ஒரு மனிதன் சொல்கிறான் - “என் இதயம் கெட்டதல்ல, நான் பாவத்திற்கு தண்டனை பெறவில்லை; மறுபடி பிறந்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிறதை பற்றிய இந்த பேச்சு எல்லாம் மிகவும் அபத்தமானது. ” இயற்கையான இருதயத்திற்கு இயேசுவின் சுவிசேஷம் தேவை, ஆனால் இதயம் அதை விரும்புவதிநல்லை, அது அதற்கு எதிராகப் போராடும், மேலும் கண்டித்து உணர்த்தும் ஆவியானவரால் தான் ஆண்களும் பெண்களும் தங்கள் இருதயங்களில் கிருபையின் தீவிரமான வேலையை அனுபவிக்க வேண்டும் என்பதைத் தெரியப்படுத்த கூடும்.

சில நேரங்களில் நம் உள்ளான சமாதானம் புறக்கணித்தலின் அடிப்படையில் உள்ளது; ஆனால் வாழ்க்கையின் தொல்லைகளுக்கு பார்க்கும்போது, ​​ அது முன்பை விட அதிகமாக உயர்ந்து அச்சுறுத்தி ஒரு பய பந்தாகும் போது, நம் தேவனிடமிருந்து பெறப்படாவிட்டால் உள் அமைதி சாத்தியமில்லை. நம் தேவன் சமாதானத்தை பேசியபோது, ​​அவர் சமாதானம் செய்தார்/ உருவாக்கினார். அவர் பேசியதை நீங்கள் எப்போதாவது பெற்றிருக்கிறீர்களா?

பிரதிபலிப்பு கேள்வி: எனக்கு என்ன விதமான அமைதி இருக்கிறது: நான் யார் என்பதை ஒப்புக்கொள்வதிலும், தேவனோடு சமரசம் செய்வதிலிருந்து வரும் வகையா அல்லது நான் யார் என்பதை புறக்கணித்து மறுப்புடன் வாழ்வதிலிருந்தோ வரும் வகையா?

விவிலிய உளவியல் மற்றும் கிறிஸ்தவ ஒழுக்கம், © டிஸ்கவரி ஹவுஸ் பப்ளிஷர்ஸ் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள்

வேதவசனங்கள்

நாள் 12நாள் 14

இந்த திட்டத்தைப் பற்றி

Oswald Chambers: Peace - Life in the Spirit

சமாதானம்: லைஃப் இன் தி ஸ்பிரிட் என்பது உலகின் மிக பிரியமான ஆவிக்குரிய தியான எழுத்தாளரும் மை உட்மோஸ்ட் ஃபார் ஹிஸ் ஹைஸ்டெஸ்ட்டின் ஆசிரியருமான ஓஸ்வால்ட் சேம்பர்ஸின் படைப்புகளின் மேற்கோள்களின் தூண்டுதலான கருவூலமாகும். தேவனில் இளைப்பாறுதலைக் கண்டுபிடித்து, உங்கள் வாழ்க்கையில் தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய டிஸ்கோவெரி ஹவுஸ் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.utmost.org க்கு செல்லவும்