ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் - ஆவியில் வாழ்க்கைமாதிரி

Oswald Chambers: Peace - Life in the Spirit

30 ல் 18 நாள்

நாம் இயேசுவானவரின் சமாதானத்தை குறித்து பேசுகிறோம், ஆனால் அது எத்தகையது என்பதை என்றாவது அனுபவித்துள்ளோமா? அவருடைய வாழ்க்கை கதையை படியுங்கள், அதில் முப்பது வருடம் நாசரேத்தில் அமைதியும், மூன்று வருட ஊழியமும், அவதூறுகளும் வதந்திகளும், அவர் தாங்கிக்கொண்ட துரோகங்களும் பகைகளும், அனைத்தும் நாம் என்றுமே அனுபவிக்க கூடியதை விட மோசமானது; ஆனாலும் அவருடைய சமாதானம் அசைக்கப்படவும், மீறுதலும் அடையவில்லை. அத்தகைய சமாதானத்தையே கர்த்தர் நமக்கு அவருடைய பிரகாரங்களில் வெளிப்படுத்துகிறார். வாழ்க்கையின் பரபரப்பில், வாழ்வதற்காக நாம் செய்யும் வேலைகளில், மாம்சத்திற்குறிய வாழ்க்கையின் தன்மைகளில், எத்தகைய நிலையிலும் கடவுள் சூழ்நிலைகளை - "என் சமாதானம்" எனும் இயேசுவின் ஊடுறுவமுடியாத, மீற இயலாத அமைதியால் ஒவ்வொரு நுன்னிய வாழ்வின் பகுதிகளிலும் நிறைக்கிறார்.

உம்முடைய தொடுதல் ஆதியிலிருந்த அதே வல்லமையை கொண்டுள்ளது. கர்த்தரே நான் உம்முடைய சமாதானத்திலும் சந்தோஷத்திலும் ஒளிவிசும்படியாக என்னை உமது அரவனைப்பிற்கு உள்ளாக தொடும்.

மனதில் பிரதிபலிக்கவேண்டிய கேள்விகள்: புரட்டுகளும் வெறுப்புகளும் கொண்ட தாக்குதல்களை தாங்கும்படியான சமாதானத்தை நான் பெற்றுள்ளேனா? என் அமைதியை எளிதாக இடையூறு செய்யகூடிய காரணம் எது? ஏன்?

வாசகங்கள் Our Brilliant Heritage and Knocking at God’s Door, © Discovery House Publishers இலிந்து எடுக்கப்பட்டது

வேதவசனங்கள்

நாள் 17நாள் 19

இந்த திட்டத்தைப் பற்றி

Oswald Chambers: Peace - Life in the Spirit

சமாதானம்: லைஃப் இன் தி ஸ்பிரிட் என்பது உலகின் மிக பிரியமான ஆவிக்குரிய தியான எழுத்தாளரும் மை உட்மோஸ்ட் ஃபார் ஹிஸ் ஹைஸ்டெஸ்ட்டின் ஆசிரியருமான ஓஸ்வால்ட் சேம்பர்ஸின் படைப்புகளின் மேற்கோள்களின் தூண்டுதலான கருவூலமாகும். தேவனில் இளைப்பாறுதலைக் கண்டுபிடித்து, உங்கள் வாழ்க்கையில் தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய டிஸ்கோவெரி ஹவுஸ் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.utmost.org க்கு செல்லவும்