ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் - ஆவியில் வாழ்க்கைமாதிரி

Oswald Chambers: Peace - Life in the Spirit

30 ல் 19 நாள்

ஒளியைக் குறித்த அற்புதமான காரியங்கள் உண்டு, பயங்கரமான காரியங்களும் உண்டு. தேவனில்லாமல் இருந்தும் குறையில்லாத மகிழ்ச்சியும் சமாதானமும் கொண்டிருக்கும் ஒரு இருதயத்திற்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் எந்த ஒரு கணம் தேவ ஆவியானவருடைய ஒளியானது நுழைகிறதோ, அப்போது அத்தகையதிற்கு நரகம் போல இது தோன்றும். ஒளியானது குழப்பத்தையும் கேட்டையும் கொண்டுவந்துவிடும். ஒளி வரும்போது இருளுக்குரிய எல்லா விஷயங்களும் நடுக்கத்திற்குள்ளாகும். நாகரீகமற்ற புறஜாதியருக்குரியவற்றின் இரவு, நாகரீகத்தின் நுழைவினால் அல்ல, மாறாக தேவனிடம் உண்மையோடு இருக்கும் ஆண் பெண்களின் சாட்சிகளால் பிரிக்கப்படுகிறது.

பரிசுத்த ஆவியானவரால் சரிப்படுத்தப்பட்ட ஒரு மனிதனுடைய மனசாட்சியின் அடையாளமாக கண்ணை நமது ஆண்டவர் பயன்படுத்துகிறார். தேவன் வெளிச்சத்தில் இருப்பதுபோல நாமும் ஒளியில் நடந்தால், அது நம் கண்களை நோக்கமாக வைத்திருக்கும், மேலும் மெதுவாகவும் நிச்சயமாகவும் சரியான உறவிற்குள்ளாக நமது செயல்கள் அனைத்தும் போக துவங்கும், பின் அனைத்துமே நல்லிணக்கமும் எளிமையும் சமாதானமும் நிறைந்தவையாக மாறும்.

எண்ணிப்பார்க்க வேண்டிய கேள்விகள்: எந்த குழப்பமிக்க, வருத்தமளிக்கும் அல்லது தெளிவற்ற ஒன்றை தேவனின் வெளிச்சம் எனக்கு வெளிப்படுத்தியுள்ளது? தேவனை மையமாகக் கொண்டிருப்பது தெளிவற்ற அனைத்தையும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் ஒருங்கிணைந்த பார்வைக்கு எவ்வாறு கொண்டு வருகிறது?

மேற்கோள்கள் So Send I You and Studies in the Sermon on the Mount, © Discovery House Publishers புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை

வேதவசனங்கள்

நாள் 18நாள் 20

இந்த திட்டத்தைப் பற்றி

Oswald Chambers: Peace - Life in the Spirit

சமாதானம்: லைஃப் இன் தி ஸ்பிரிட் என்பது உலகின் மிக பிரியமான ஆவிக்குரிய தியான எழுத்தாளரும் மை உட்மோஸ்ட் ஃபார் ஹிஸ் ஹைஸ்டெஸ்ட்டின் ஆசிரியருமான ஓஸ்வால்ட் சேம்பர்ஸின் படைப்புகளின் மேற்கோள்களின் தூண்டுதலான கருவூலமாகும். தேவனில் இளைப்பாறுதலைக் கண்டுபிடித்து, உங்கள் வாழ்க்கையில் தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய டிஸ்கோவெரி ஹவுஸ் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.utmost.org க்கு செல்லவும்