ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் - ஆவியில் வாழ்க்கைமாதிரி

Oswald Chambers: Peace - Life in the Spirit

30 ல் 22 நாள்

சகாப்தங்களும் நாகரிகங்களும் ஒரு காலத்திற்குப் பிறகு தேவனால் குப்பை குவியல் போல் விசித்திரமாக கவனக்குறைவாகப் புறக்கனிக்கப்படுகின்றன. யுகங்களின் பதிவில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு யுகமும் வெளிப்படையான பேரழிவில் முடிகிறது. தேவன் ஆட்சி செய்கிறார் என்பதையும், மேகங்கள் பிதாவின் கால்களின் தூசு என்பதும், பயப்படத் தேவையில்லை என்பதும் தேவ பிள்ளைகளுக்குத் தெரியும். இந்த பேரழிவு நிகழ்வுகள் தற்செயலானவை என்றும், இதன் மூலம் அதிக அமைதியும் தூய்மையான தன்மையும் நிரந்தர விளைவாக இருக்க வேண்டும் என்றும் அவர் உறுதியளிக்கிறார். வரலாறு எல்லா தீர்க்கதரிசனமும் நிறைவேற்றுகிறது என்பதற்கான சான்று.

நமக்கு சமாதானத்தின் பாதை என்னவென்றால், நம்மை தேவனிடம் ஒப்படைத்து, நம்மைத் தேடும்படி அவரிடம் கேட்பது, நாம் என்ன நினைக்கிறோம், அல்லது மற்றவர்கள் நாம் என்ன நினைக்கிறோம், அல்லது நாம் என்னவாக இருக்கிறோம் அல்லது இருக்க விரும்புகிறோம், "தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்."

பிரதிபலிப்பிற்கான கேள்விகள்: சர்வாதிகாரிகளின் வீழ்ச்சி மக்கள் மீது சுமத்தப்படும் அமைதியினைப் பற்றி என்ன குறிக்கிறது? சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான மனித முயற்சிகளைப் பற்றி வரலாறு என்ன கற்பிக்கிறது?

God’s Workmanship and Biblical Psychology என்பதிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள், © டிஸ்கவரி ஹவுஸ் வெளியீட்டாளர்கள்

வேதவசனங்கள்

நாள் 21நாள் 23

இந்த திட்டத்தைப் பற்றி

Oswald Chambers: Peace - Life in the Spirit

சமாதானம்: லைஃப் இன் தி ஸ்பிரிட் என்பது உலகின் மிக பிரியமான ஆவிக்குரிய தியான எழுத்தாளரும் மை உட்மோஸ்ட் ஃபார் ஹிஸ் ஹைஸ்டெஸ்ட்டின் ஆசிரியருமான ஓஸ்வால்ட் சேம்பர்ஸின் படைப்புகளின் மேற்கோள்களின் தூண்டுதலான கருவூலமாகும். தேவனில் இளைப்பாறுதலைக் கண்டுபிடித்து, உங்கள் வாழ்க்கையில் தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய டிஸ்கோவெரி ஹவுஸ் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.utmost.org க்கு செல்லவும்