ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் - ஆவியில் வாழ்க்கைமாதிரி

Oswald Chambers: Peace - Life in the Spirit

30 ல் 10 நாள்

"தேவனுக்குள் அமைதியாக இருப்பது" என்பது வெறும் உணர்விற்குள் நகர்வது, அல்லது புத்திசாலித்தனமாக மூழ்குவது என்று அர்த்தமல்ல, ஆனால் வேண்டுமென்றே விஷயங்களின் மையத்தில் தேவனையே மையமாக கொண்டு இறங்குவது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாவநிவிர்த்தி மூலம் நீங்கள் தேவனோடு உறவுக்குள் கொண்டு வரப்பட்ட நீங்கள், அவரிடம் கவனம் செலுத்தும்போது, ​ ஒற்றுமையின் அற்புதமான நேரங்களை அனுபவிப்பீர்கள். தேவனின் இரட்சிப்பின் புகழ்பெற்ற திட்டவட்டங்களில் நீங்கள் கவனம் செலுத்துகையில், தேவனின் தூக்க நிலை அமைதி உங்களுக்குள் வரும், அவர் தம்முடைய சித்தத்தின்படி அனைத்தையும் செய்கிற இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதில் உறுதியாக இருப்பீர்கள்.

நம்முடைய இரட்சகர் நமக்கு அளிக்கும் அமைதி என்பது ஒரு மனித ஆளுமை அனுபவிக்கக்கூடிய ஆழமான விஷயம், அது சர்வவல்லமையுள்ளது, எல்லா புரிதல்களையும் கடந்து செல்லும் அமைதி.

பிரதிபலிப்பிற்கான கேள்வி: தேவன் அளிக்கும் "தூக்க நிலை அமைதிக்குள்" நீங்கள் நுழைந்திருக்கிறீர்களா?, அங்கு முழு ஓய்வில் இருக்கிறீர்களா?, தேவனுக்காக நீங்கள் வேலை செய்யாமல் அவரே உங்கள் மூலமாக செயல்படுகிறார் என்பதை அறிந்திருக்கிறீர்களா?

உதவி வரும் இடம் என்பதிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள், © டிஸ்கவரி ஹவுஸ் பப்ளிஷர்ஸ்

வேதவசனங்கள்

நாள் 9நாள் 11

இந்த திட்டத்தைப் பற்றி

Oswald Chambers: Peace - Life in the Spirit

சமாதானம்: லைஃப் இன் தி ஸ்பிரிட் என்பது உலகின் மிக பிரியமான ஆவிக்குரிய தியான எழுத்தாளரும் மை உட்மோஸ்ட் ஃபார் ஹிஸ் ஹைஸ்டெஸ்ட்டின் ஆசிரியருமான ஓஸ்வால்ட் சேம்பர்ஸின் படைப்புகளின் மேற்கோள்களின் தூண்டுதலான கருவூலமாகும். தேவனில் இளைப்பாறுதலைக் கண்டுபிடித்து, உங்கள் வாழ்க்கையில் தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய டிஸ்கோவெரி ஹவுஸ் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.utmost.org க்கு செல்லவும்