ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் - ஆவியில் வாழ்க்கைமாதிரி

Oswald Chambers: Peace - Life in the Spirit

30 ல் 7 நாள்

தேவனைப் பற்றிய அறிவில் உங்களை அதிகம் வளர்த்த நாட்கள்- பிரகாசமான, அமைதி மற்றும் செழிப்பு நாட்களை என்று கேட்டால் ஒருபோதும் இல்லை! துன்பத்தின் நாட்கள், திணறல் நாட்கள், திடீர் ஆச்சரியங்களின் நாட்கள், இந்த பூமிக்குரிய வீட்டு கூடாரத்தின் எல்லைக்குள் திணறிய நாட்கள், “போ” என்ற ஆர்வத்தின் அர்த்தத்தை நீங்கள் கற்றுக்கொண்ட நாட்களில் தான் அதிகம் நீங்கள் தேவனை அறிந்திருக்க முடியும். இயற்கை உலகில் எந்தவொரு பெரிய பேரிடரும்-மரணம், நோய், இறப்பு-வேறு எதுவும் இல்லாத அளவிற்கு ஒரு மனிதனை மனதளவில் எழுப்புகிறது. நாம் எப்போதுமே தெளிவான பாதுகாப்பின் இடத்தில் இருந்தால் “இருளின் பொக்கிஷங்களை” நாம் ஒருபோதும் அறிய மாட்டோம்.

நம்முடைய அசுத்த உணர்வு அனைத்தையும் மீறி, உலக வேலைகளில் நம்முடைய அவசரமும் ஆர்வமும் இருந்தபோதிலும், நம்முடைய தர்க்கங்கள் அனைத்தையும் மீறி, தேவனின் உள்ளார்ந்த அன்பு உணர்வு வந்து நம் வாழ்வின் அன்றாட அமைதியைக் குலைக்கும்.

பிரதிபலிப்பிற்கான கேள்விகள்: அமைதி பற்றி அமைதியின்மை எனக்கு என்ன கற்பிக்கிறது? என் வாழ்க்கையில் குறுக்கிட நான் தேவனை வரவேற்கிறேனா அல்லது என் வாழ்க்கையின் வாசலில் “தொந்தரவு செய்யாதே” அடையாளத்தை வைத்திருக்கிறேனா?

The Philosophy of Sin என்பதிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள், © டிஸ்கவரி ஹவுஸ் பப்ளிஷர்ஸ்

வேதவசனங்கள்

நாள் 6நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

Oswald Chambers: Peace - Life in the Spirit

சமாதானம்: லைஃப் இன் தி ஸ்பிரிட் என்பது உலகின் மிக பிரியமான ஆவிக்குரிய தியான எழுத்தாளரும் மை உட்மோஸ்ட் ஃபார் ஹிஸ் ஹைஸ்டெஸ்ட்டின் ஆசிரியருமான ஓஸ்வால்ட் சேம்பர்ஸின் படைப்புகளின் மேற்கோள்களின் தூண்டுதலான கருவூலமாகும். தேவனில் இளைப்பாறுதலைக் கண்டுபிடித்து, உங்கள் வாழ்க்கையில் தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய டிஸ்கோவெரி ஹவுஸ் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.utmost.org க்கு செல்லவும்