இயேசுவினுடைய உவமைகள்மாதிரி
திராட்சைத் தோட்டத்திலுள்ள பணியாளர்கள்
இதைப் படிக்கும்போது, நீங்கள் யாருடன் இருக்க விரும்புகிறீர்கள் நில உரிமையாளரிடமா அல்லது தொழிலாளர்களுடனா? ஊதியங்கள் சமமாக இருக்கக்கூடாது என்று நீங்கள் வாதிடுகிறீர்களா, அல்லது நில உரிமையாளரை அவர் சொன்னபடியே கூலி செலுத்தியதை ஆதரிக்கிறீர்களா?
இந்த உவமை நம்முடைய முயற்சிகள் மற்றும் கடவுளின் ஏற்றுக்கொள்ளல் பற்றிய நமது உணர்வுகளை அம்பலப்படுத்த உதவுகிறது. எபேசியர் 2: 9 நமக்கு, "இரட்சிப்பு என்பது நாம் செய்த நல்ல காரியங்களுக்கான வெகுமதி அல்ல, எனவே நம்மில் யாரும் இதைப் பற்றி பெருமை கொள்ள முடியாது." என்பதை நினைவூட்டுகிறது. ஆயினும், பலர் தேவனுக்காக தாங்கள் செய்த வேலையைப் பற்றி பெருமையாகப் பேசுவதற்கும், அத்தகைய "நல்ல" வேலைக்கு "நியாயமான" ஊதியம் கோருவதற்கும் மிகவும் ஆர்வமாக உள்ளனர்!
இந்த கதையில் நில உரிமையாளர் நியாயமானவர், நீதியுள்ளவர்; அவர் ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவர் வாக்குறுதியளித்தபடியே கொடுக்கிறார், அவர் பொருத்தமாக இருப்பதையே தருகிறார். கடவுள், அதேபோல், நம்முடைய முயற்சிகளால் அல்ல, அவருடைய அன்பின் காரணமாகவே கிருபையையும் கருணையையும் வழங்குகிறார். ஆனால் நாம் என்ன வகையான தொழிலாளர்கள்? நம்முடைய வேலைகளை மற்றவர்களுடையதை விட பெரியதாக நாம் கண்டு, அதிக பலனை எதிர்பார்க்கிறோமா? மற்றவர்கள் குறைவாகச் செய்து, நம்மைப் போன்ற அருளைப் பெறுவதை கண்டு கால்களை தரையில் மிதித்து எதிர்ப்பு தெரிவிக்க விரும்புகிறோமா?
அல்லது எல்லாரையும் ஏற்றுக்கொண்டதற்காக நம் தேவனுக்கு நன்றி கூறுகிறோமா? அவர் நமக்கு ஒன்றும் கடன்பட்டிருக்கவில்லை, ஆனால் எல்லாவற்றையும் நமக்குத் தருகிறார் என்பதை நாம் நினைவில் கொள்கிறோமா? தேவனின்ன் கிருபைக்கும் இரக்கத்திற்க்கும் அளவு இல்லை, எனவே நாம் பொறாமைப்படவோ அல்லது விரக்தியடையவோ கூடாது. மாறாக, தேவன் நம்மைத் தேர்ந்தெடுப்பதை நினைத்து தொடர்ந்து களிகூருவோம்!

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்!
More
We would like to thank Trinity New Life Church for this plan. For more information, please visit: http://www.trinitynewlife.com/