இயேசுவினுடைய உவமைகள்மாதிரி

The Parables of Jesus

36 ல் 11 நாள்

கனிகொடாத மரம்

மத்தேயுவிலும் மாற்கிலும் ஒரேமாதிரியாக இயேசு கனிகொடாத மரம் ஒன்றை சபிப்பதை காண்கிறோம், அதைப்போலவே ஒரு மனிதன் மரம் நட்டு அந்த மரமோ தக்க கனிகொடாமல் இருப்பதை லூக்காவில் காணலாம். மூன்று கதைகளுமே ஒரே கதையை சொல்லவில்லை என்றாலும், அவை கனி தர வேண்டிய ஒரு மரத்தையும் அது பலன் ஒன்றும் தரவில்லை என்பதையும் குறிக்கின்றன.

மத்தேயு மற்றும் மாற்க்கின் கதைகளில் மரத்தில் இலைகள் இருந்தன, அது மரத்தின் ஆரோக்யத்தை குறிக்கிறது, இருப்பினும் அந்த மரம் கனி ஒன்றும் தரவில்லை. நிறைய முறை சுவிசேஷங்களில் நாம் நம் வாழ்க்கையில் கனிகொடுக்க வேண்டும் என்கிற சவால்களும் எதிர்பார்ப்புக்களும் உள்ளன. நாம் பட்டுபோய்விடாமல், இருப்பதிலும், அல்லது ஆரோக்கியமாய் தெரிவதிலும் மட்டுமன்றி, நம் வாழ்க்கையில் உண்மையாகவே பலன் தரவேண்டும்.

நாம் மாற்றமடைந்த வாழ்க்கைக்கு உரிய கனிகளை தான் தருகிறோமா, சீடர்களை உருவாகும் கனிகளை தருகிறோமா, தொலைந்து போனவர்களை சந்திக்கும் கனிகளை தருகிறோமா என்பதை சோதித்து அறியவேண்டும்.
நாள் 10நாள் 12

இந்த திட்டத்தைப் பற்றி

The Parables of Jesus

இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்!

More

We would like to thank Trinity New Life Church for this plan. For more information, please visit: http://www.trinitynewlife.com/