நவீன யுகத்தில் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதுமாதிரி
துணைதேடுதலில் முக்கியமானவை (பகுதி 2)
நேற்றைய தியானத்தில், துணை தேடுதலில் சுய அதிகாரம் எந்தளவில் முக்கியம் என்று பார்த்தோம் - ஒரு விசுவாசி, மற்றொரு விசுவாசியையே மணந்து கொள்ள வேண்டும். திருமணத்தில் இணைக்கப்படுகிற இருவருமே விசுவாசிகளாக இருக்கிற பட்சத்தில், தேவனை தொழுதுகொள்கிற காரியத்தில், இருவருமே ஒரே "விதிகளுக்கு" கட்டுப்பட்டு வருவார்கள். இதன் அடிப்படையில் நாம் படிக்க போகும் அடுத்த காரியம்: பாலியல் உறவில் பரிசுத்தம்.
நவீன காலத்தில், பாலியல் சுத்தம் என்பது பார்க்கவே அரிதாகிப்போன ஒரு காரியமாக மாறிவிட்டது. ஆனாலும், இது இன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததே. உடலுறவு என்பது வெறுமனே உடலால் மாத்திரம் இருவர் இணைவது அல்ல. இருவர் கூடி வரும்போது, மிகவும் ஆழமான பிணைப்பு இருவருக்குள்ளும் உருவாகிறது. உங்கள் துணை உங்களது சிறந்த நண்பராக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் நட்பில் உடலுறவை சீக்கிரமாகவே புகுத்தினால், உங்கள் துணை உங்களுக்கு நல்ல நண்பராக இருக்க கூடியவரா இல்லையா என்பதையே உங்களால் கணிக்க முடியாதவாறு போய் விடும். திருமணத்திற்கு முன்பதாகவே உடலுறவுக்கு சிலர் இடம்கொடுப்பதால், தவறான உறவுகளிலும் அதிக நாட்கள் நீடிக்க வேண்டிய காட்டாயத்திற்குள் சிலர் தள்ளப்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஞானமற்ற துரித உறவுகளின் பிரிவுகள் அதிக வேதனையை வலியை கொடுக்கும்.
துணை தேடுதலில் மற்றொரு முக்கியமான காரியம்: துணைதேடுதலில் நீங்கள் சந்திப்பவர்கள், தேவனுடைய பிள்ளைகள் என்பதை மறந்துவிடாதிருங்கள். நீங்கள் யார் என்பது தான் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நிர்ணயிக்கும். எனவே, உங்கள் துணையாக கூடிய அந்த நபரும் தேவனுடைய பிள்ளை என்ற கோணத்திலேயே பாருங்கள். அவர்களும் உங்களை தேவனுடைய பிள்ளையாகவே பார்க்க விரும்புவார்கள். அதற்கேற்றாற்போல நடந்து கொள்ளுங்கள். பரலோக ராஜாவின் பிள்ளையை நீங்கள் எவ்வாறு நடத்த விரும்புவீர்கள்? அன்புடன், சாந்தத்துடன், கனத்துடன், மரியாதையுடன் நடத்துவீர்கள் அல்லவா! நீங்கள் பங்குபெறும் எந்த ஒரு உறவிலும் உங்கள் பிரசன்னம் அவர்களுக்குள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மற்றவர் தேவனுக்குள்ளாக வளர்வதற்கு, விசுவாசத்தில் அன்பிலும் பெருகுவதற்கு உங்களோடு உறவில் இருப்பவரை ஊக்குவியுங்கள்.
உங்கள் நோக்கம் அவர்களை ஈர்ப்பதில் அல்ல, அவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்குவதிலேயே இருக்க வேண்டும். எனவே, அந்த நபரை குறித்து அதிகமாக புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களை குறித்தும் வெளிப்படையாக பேசுங்கள். ஒருவரையொருவர் ஈர்க்கும் நோக்கில் அல்ல, ஒருவரை ஒருவர் பபுரிந்துகொள்ளவே! உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் ஒத்துபோகின்றனவா என்பதை மதிப்பாய்வு செய்து பாருங்கள். கூர்மையாக கவனியுங்கள், நல்ல கேள்விகளை கேளுங்கள், உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் நேர்மையாக இருங்கள். ஒருவரையொருவர் பாராட்டுங்கள், ஊக்குவியுங்கள். அன்பான வார்த்தைகளை பரிமாறிக்கொள்ளுங்கள். மற்றவரை ஈர்க்கும் எண்ணத்தில் உங்களுக்கு நீங்களே அழுத்தம் கொடாதிருங்கள். துணை தேடுதல் ஒரு ஆசீர்வாதமான பயணமாக இருக்கும்.
அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காரியம்: ஒருவர் மேல் உங்களுக்கு நம்பிக்கை வந்த பிறகே, திருமணத்திற்கு பிறகான காரியங்கள் குறித்து பேசுங்கள். காதல் வயப்பட்ட உணர்வுகள், தன்னிலை மறக்க செய்யும். உங்களால் சரியான காரியங்களை பேச இயலாது போய் விடும். தவறான நபருடன் அதிக நேரம் செலவிடுவதை தவிர்ப்பதற்கு, முதலில் சரியான காரியங்களை பேசுங்கள். நேர்மையாக தங்கள் உணர்வுகளை எண்ணங்களை பிரதிபலிக்காத நபர்களை துணையாக தேர்ந்தெடுக்காதிருங்கள். நல்ல ஆவிக்குரிய ஆலோசனைகளுக்கு திறந்தவர்களாகவே இருங்கள்.
கடைசியாக நாம் பார்க்க இருக்கும் காரியம்: பொறுமையாக இருப்பது. உங்களுக்குள் நட்பு வளர்வதற்கு போதிய நேரம் கொடுங்கள். திருமண மேடைக்கு காரியங்களை துரிதப்படுத்தாதிருங்கள். ஒருவரையொருவர் புரிந்துகொள்ள கால அவகாசம் கொடுங்கள். சிலர் ஆரம்பத்தில் சிறந்தவர் போல தோன்றலாம், ஆனால் காலப்போக்கில் அவர்களின் உண்மை நிறம் வெளிவரலாம். சிலரது தோற்றம் எதிர்மறையான உணர்வை கொடுக்காலம். ஆனால், காலப்போக்கில் அவரது நற்குணங்கள் வெளியே தென்படலாம். எனவே, திருமண மேடைக்கு செல்லும் முன், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள போதிய கால அவகாசம் கொடுங்கள்.
சரியான துணையை உங்களால் தேர்வு செய்ய முடியுமா என்பது எனக்கு தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாய் கூற முடியும். தேவன் உங்களுக்கு அவருடைய ஞானத்தையே சார்ந்து கொள்ள கொடுத்திருக்கிறார். துணை தேடலின் பிரயாணத்தில் அவரையே நீங்கள் சார்திருப்பீர்கள் என்றால், உங்கள் திருமண வாழ்வு ஆசீர்வாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் துணை தேடல், தேவனை மையப்படுத்தினதாகவே இருக்கட்டும். தேவனே உங்களுக்கு உதவி செய்து, உங்கள் தேவைகளை சந்தித்து, சரியான நபரிடம் உங்களை நடத்திச்செல்ல உங்களுக்காக நான் தேவனிடம் பிராத்திக்கிறேன்.
சிந்திக்க
திருமணத்திற்கு முந்தைய வாழ்வில், பாலியல் பரிசுத்தம் எந்தளவில் முக்கியம்? திருமணத்திற்கு பின்பதான உங்கள் உறவை வளமாக்க, திருமணத்திற்கு முன் பாலியல் கட்டுப்பாடு எவ்வாறு உதவும்?
நீங்கள் மற்றவரை நடத்தும் விதம் உங்கள் குணத்தை பற்றி கூறுவது என்ன? மற்றவரை தேவனுடைய பிள்ளையாக கருதுவது ஏன் முக்கியம்?
துணை தேடலின்போது ஆவிக்குரிய ஆலோசனைகளுக்காக நீங்கள் சார்ந்திருக்கும் அந்த நபர் யார்? அவரது ஆலோசனைக்கு நீங்கள் எந்தளவு திறந்த உணர்வோடு இருக்கிறீர்கள்?
எப்படிப்பட்ட சூழ்நிலைகளில், உறவுகளில் பொறுமையாக இருப்பது உங்களுக்கு கடினம்? காலப்போக்கில் நீங்கள் ஒருவரை பற்றி என்னென்ன காரியங்களை தெரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறீர்கள்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது என்றவுடன் சிலருக்கு மனதில் பதட்டமும் மிக பெரிய எதிர்பார்ப்பும் ஏற்படும். தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்த இந்த காலகட்டத்திலும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வது மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. ஒரு தனிப்பட்ட மனிதர் திருமணத்திற்கு தயாராகி, வாழ்க்கை துணையை சரியாய் தேர்வு செய்து, திருமண வாழ்க்கைக்குள் நுழைவதை குறித்து இந்த 7 நாள் தியான திட்டம் அமைந்திருக்கும். வாழ்வின் இந்த கட்டத்தில், தேவனுடைய வழிநடத்தலில் பிரயாணிப்பது பற்றி போதகர் பென் ஸ்டூவர்ட் அவர்கள் நமக்கு கற்று தர இருக்கிறார்கள். வாழ்க்கை துணையை முடிவு செய்வதில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன, அதை எவ்விதத்தில் கையாளுவது போன்ற வழிமுறைகளையும் யுக்திகளையும் அவர்கள் நமக்கு போதிக்க இருக்கிறார்கள். Breakaway ஊழியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரான போதகர் பென் அவர்கள், தற்போது வாஷிங்டன் பட்டணத்தில் உள்ள Passion சிட்டி சபையின் போதகராக பணியாற்றி வருகிறார்கள். Texas A&M campus மூலமாக ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களுக்கு வாராந்திர வேதபாட வகுப்புகளையும் நடத்தி வருகிறார்கள்.
More