நவீன யுகத்தில் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதுமாதிரி

Dating In The Modern Age

7 ல் 2 நாள்

 

பிரயாணத்திற்கு ஒரு மாலுமி

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் களத்தில் பிரியாணிக்கும் அநேகருக்குள்ளாக இன்று பயம் இருப்பதை காண முடிகிறது. தவறாக தேர்ந்தெடுத்துவிடுவோமோ என்கிற பயம். புறக்கணிக்கப்படுவோமோ என்ற பயம். வாய்ப்புகளை இழந்துவிடுவோமோ என்ற பயம். வேறு சிலருக்குள் பெருமை - தங்களுடைய இஷ்டபோக்கிலே போகவேண்டும். அவர்கள் உரிமையிலே ஒருவரும் தலையிட முடியாது என்று யாருக்கும் வளைந்து கொடுக்காத கர்வம். இன்னும் வேறு சிலருக்குள் காம இச்சை - தங்களது துணையின் சரீரத்திற்காக மாத்திரம் அவர்களை நேசித்து உறவு கொள்வது. பயம், பெருமை, காம இச்சை இவைகளை தான் வாழ்க்கைத் துணை தேர்தெடுப்பில் அநேகர் தவற காரணமாகும் வேர்களாக கருதுகிறேன்.

இந்த மூன்று வகை மாலுமிகளாலும் உங்கள் வாழ்க்கைத் துணை தேர்ந்தெடுக்கும் பிரயாணத்தை சரியான திசையில் நடத்த முடியாது. அன்பு இவர்களது குறிக்கோளாக இல்லை. பயம் எளிதில் பின்னடைவை சந்திக்கும். ஆனால், அன்போ விட்டுக்கொடுத்து முன்னேறும். பெருமை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் காரியங்களில் பின்னடைவை சந்திக்கும், அன்பு மற்றவரை முன்னிலை படுத்தி சகலவற்றையும் பகிர்ந்து கொள்ளும். காம இச்சை மற்றவரிடம் தனக்கு வேண்டிய சில பகுதிகளை மட்டும் எடுத்துக்கொள்ளும். ஆனால் அன்போ, அந்த நபரின் உயர்விலும் தாழ்விலும், பெலவீனங்களிலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்.

பயம், பெருமை, இச்சை ஆகியவை உங்கள் பிரயாணத்தின் மாலுமிகளாக இருக்கின்ற வரையிலும் உங்களால் ஓர் ஆரோக்கியான அன்பின் உறவை அனுபவிக்க முடியாது. இவைகள் உங்களை தனிமையிலோ, அல்லது தேவனுக்கு பிரியமில்லாத ஆழமற்ற மேலோட்டமான உறவுகளில் உங்களை கொண்டுபோய் நிறுத்திவிடும். இப்படிப்பட்ட சூழல்களை தான் இன்று அநேக குடும்பங்களில் நம்மால் காண முடிகிறது. இப்படிப்பட்ட தவறான மாலுமிகளால் நடுக்கடலில் பாதையை தவறவிட்ட கப்பல்களை போல இன்று பல குடும்பங்களை நான் காண்கிறேன். அலைகளின் சீற்றத்தாலும், கடும் புயலினாலும் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

நவீன தொழில்நுட்ப கருவிகள் கண்டுபிடிக்கபடுவதற்கு முந்தைய காலகட்டங்களில், தனக்கு அதிகம் பரிட்சயம் இல்லாத பகுதிகளுக்குள் செல்லும்போது, பாதையை தவறவிட்ட உணர்வோ அல்லது தவறான பாதையில் செல்கின்ற உணர்வோ அந்த கப்பலோட்டிக்கு ஏற்பட்டால், அந்த கப்பலோட்டி தனக்கு "ஒரு மாலுமி தேவை" என்று கப்பலின் உச்சியில் ஒரு கொடியை பறக்க விடுவார். அந்த இடத்தை நன்கு அறிந்த ஏதேனும் மாலுமிகள் அந்த கொடியை தூரத்தில் காணும்பட்சத்தில், சிறுபடகின் உதவியோடு அந்த கப்பலை வந்தடைந்து வழிகாட்டி செல்லுவார்.

இவ்வாறு அந்த சுற்றுவட்டாரத்தை நன்கு அறிந்த மாலுமி, அந்த கப்பலை பாறைகள், தடைகள் இல்லாத சீரான வழியில் நடத்தி சென்று துறைமுகம் சேர்ப்பார். "எங்களுக்கு மாலுமி தேவை" என்ற அந்த கொடியை பார்த்து அநேகர் குழம்பாதபடிக்கு, ஒரு மாலுமி வந்தவுடன், "எங்களிடம் இப்போது மாலுமி உண்டு" என்று அர்த்தங்கொள்ளும் பாதி வெள்ளையும் பாதி சிவப்புமான மற்றொரு கொடியை பறக்க விடுவார்கள். அதை காணும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள், அந்த கப்பலும் அதிலுள்ளவர்களும் பாதுகாப்பாக தான் இருக்கிறார்கள் என்று திருப்தி கொள்வார்கள்.

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கிற இந்த முயற்சியில், ஒருவேளை நீங்கள் செய்வதறியாது திகைக்கும் நேரங்களில், உங்களுக்கு எந்த நேரத்திலும் உதவ ஒரு மாலுமி இங்கு உண்டு என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள். "வழி அறியாமல் திகைத்து நிற்கின்றேன். எனக்கு உதவி தேவை" என்ற கொடியை அசைத்து நீங்கள் தேவனுக்கு உங்களை அற்பணிக்கும்போது, நிச்சயம் உங்களுக்கு உதவியாக அவர் வந்து, நீங்கள் எதிர்கொள்ள இருந்த சகல ஆபத்தான சூழல்களிலும் இருந்து உங்களை மீட்டு காப்பார். அதன் பின்பதாக நீங்கள், "எனக்கு வழிகாட்டி, என்னை நடத்த எனக்கொரு மாலுமி உண்டு" என்ற கொடியை நீங்கள் சாட்சியாக உலகத்திற்கு காட்டலாம். உங்களோடு கூட அவரை மட்டுமே பின்பற்ற ஒரு கூட்டத்தையும் உருவாக்கலாம்.

உங்களை உருவாக்கின தேவன் ஒருவரால் மட்டுமே உங்கள் வாழ்வை சரியான திசையில் வழிநடத்த முடியும். தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று வேதம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது (1 யோவான் 4:8). உங்களது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் இந்த பிரயாணத்திலும், நீங்கள் அறியாத அன்பின் பாதையில் உங்களை சரியாய் வழிநடத்த உங்களுக்கு அந்த மாலுமி தேவை என்பதை முதலில் உணர்ந்துகொள்ளுங்கள். தேவனே உங்களது வாழ்க்கையில் மாலுமியாக வேண்டுமென்று அவரிடம் அறிக்கை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதிலிருந்து உங்களது நீண்டதூர பயணம் துவங்குகிறது.

சிந்திக்க

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் காரியத்தில் இதுவரை உங்கள் வாழ்வில் பயமோ, பெருமையோ, இச்சையோ பங்கு பெற்றிருக்கிறதா? உங்கள் எந்த அளவிற்கு ஓர் ஆரோக்கியமான அன்பின் உறவை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள்?

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் காரியத்தில் இதுவரை ஏதேனும் ஏமாற்றத்திற்குள்ளாகவோ துரோகத்திற்குள்ளாகவோ கடந்து சென்றிருக்கிறீர்களா?

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் காரியத்தில் "என் சுயபெலத்தால் முடியாது, எனக்கொரு மாலுமி தேவை" என்னும் கொடியேற்றுவதை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அதை எப்படி செய்ய போகிறீர்கள்?

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Dating In The Modern Age

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது என்றவுடன் சிலருக்கு மனதில் பதட்டமும் மிக பெரிய எதிர்பார்ப்பும் ஏற்படும். தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்த இந்த காலகட்டத்திலும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வது மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. ஒரு தனிப்பட்ட மனிதர் திருமணத்திற்கு தயாராகி, வாழ்க்கை துணையை சரியாய் தேர்வு செய்து, திருமண வாழ்க்கைக்குள் நுழைவதை குறித்து இந்த 7 நாள் தியான திட்டம் அமைந்திருக்கும். வாழ்வின் இந்த கட்டத்தில், தேவனுடைய வழிநடத்தலில் பிரயாணிப்பது பற்றி போதகர் பென் ஸ்டூவர்ட் அவர்கள் நமக்கு கற்று தர இருக்கிறார்கள். வாழ்க்கை துணையை முடிவு செய்வதில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன, அதை எவ்விதத்தில் கையாளுவது போன்ற வழிமுறைகளையும் யுக்திகளையும் அவர்கள் நமக்கு போதிக்க இருக்கிறார்கள். Breakaway ஊழியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரான போதகர் பென் அவர்கள், தற்போது வாஷிங்டன் பட்டணத்தில் உள்ள Passion சிட்டி சபையின் போதகராக பணியாற்றி வருகிறார்கள். Texas A&M campus மூலமாக ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களுக்கு வாராந்திர வேதபாட வகுப்புகளையும் நடத்தி வருகிறார்கள்.

More

இந்த தியான திட்டத்தை வழங்கியமைக்காக போதகர் பென் ஸ்டூவர்ட் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு, அணுகவும்: https://www.thatrelationshipbook.com

சம்பந்தப்பட்ட திட்டங்கள்