நவீன யுகத்தில் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதுமாதிரி

Dating In The Modern Age

7 ல் 6 நாள்

 

துணைதேடுதலில் முக்கியமானவை (பகுதி 1)

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் காரியத்தில், முதலாவதாக அகில உலகத்தையும் சிருஷ்டித்த தேவனை, துணை தேடும் உங்கள் செயல்முறைக்குள் அழைக்கவேண்டும். சத்தியமான இயேசுவை உங்கள் எண்ணங்களுக்குள், செயல்களுக்குள் அனுமதியுங்கள். தனிமை உணர்வின் பயத்திலிருந்து ஜெபம் உங்களை விடுவித்து பாதுகாக்கும். அது மட்டுமல்ல, துணை தேடும் போது, நீங்கள் ஏற்கெனவே முடிவெடுத்து ஒப்புக்கொடுத்த காரியங்களின் தரத்தில் சமரசம் செய்வதிலிருந்து தேவன் உங்களை பாதுகாப்பார். தேவனுடைய மகத்துவமான ஞானத்தை சார்ந்து நீங்கள் பயணிப்பதால், நீங்கள் பதட்டம் இல்லாமல் சமாதானத்துடன் இருக்கலாம். தேவனே உங்களை வழிநடத்துபவர்! தேவனோடு கூடிய உங்களது உறவு, மற்ற மனிதர்களை பயன்பாட்டிற்கான பொருள்களாக பார்க்காமல், மதிப்பிற்குரிய தேவனுடைய சிருஷ்டிப்பாக பார்க்க உதவும்.

துணை தேடும் உங்கள் செயல்முறைக்கு கனத்தை கூட்டுவதே இந்த இரண்டாவது காரியம் தான்: உங்களை குறித்த தெளிவான ஒரு அபிப்பிராயத்தை விதையுங்கள். எபேசியர் 4:15ல் பவுல் இதையே தெளிவுபடுத்துகிறார்: இயேசுவை போலவே அன்புடன் சத்தியத்தை (உண்மையை) கைக்கொள்ளுங்கள் (பேசுங்கள்). செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்கு சமானம் என்று நீதிமொழிகள் 2:26ல் வாசிக்கிறோம். எனவே உங்கள் துணையாக போகும் அந்த நபருடன், உங்கள் எண்ணங்கள், உணர்வுகள், உங்கள் எதிர்கால திட்டங்கள் குறித்த உண்மைகளை மறைக்காமல் பேசுவதற்கான தைரியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் அப்படி வெளிப்படையாக பேசுகிற அந்த உண்மைகள், தவறாக புரிந்துகொள்ளப்படாத வகையில் தெளிவாக பேசுங்கள். நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் உங்கள் வருங்கால துணையாக கூடிய அந்த நபர் குழம்பாதவகையில் திட்டவட்டமாக உணர்த்துங்கள். தவறான புரிந்துகொள்ளுதல் அல்லது குழம்பிய மனநிலை மோசமான முடிவிற்கு கொண்டு செல்ல கூடும். அந்த நபருடன் நீங்கள் சௌகரியமாக உணரவில்லை என்றால், அதனை வெளிப்படையாக கூறிவிடுங்கள். பின்நாட்களில் பிரச்சனைகளை சந்தித்து போராடுவதற்கு இது நல்லது. அந்த நபர் உங்களோடு சௌகரியமாக உணரவில்லை என்றாலும் அதற்கு மதிப்பு கொடுங்கள். உங்களை திருமணம் செய்யும்படி வற்புறுத்தாதிருங்கள். உங்கள் துணையை முடிவுசெய்வதில், ஒருவருக்கொருவர் தெளிவாக காரியங்களை பரிமாறிக்கொள்வது மிக மிக அவசியம். நீங்கள் உங்களை குறித்த தெளிவை மற்றவர்க்கு ஏற்படுத்துவது, அவர்கள் அவர்களாகவே இருப்பதற்கான இடத்தையும் வாய்ப்பையும் ஏற்படுத்துகிறது.

இயேசுவை விசுவாசிக்கும் அவரது பிள்ளைகள், பிறர் உணர்வுகளோடு விளையாடுதல் கூடாது. மனதில் ஒன்று, வெளியில் ஒன்று பேசாதீர்கள். போலியான வார்த்தைகளை தவிர்த்திடுங்கள். நீங்கள் பேசும் வார்த்தைகளில் அனைத்திலும் உண்மை இருக்கட்டும். துணை தேடும் செயல்முறையில் முற்றிலும் உண்மையுள்ளவர்களாக நடந்துகொள்ளுங்கள்.

துணை தேடும் போது, நீங்கள் மனதில் கொள்ளவேண்டிய மூன்றாவது காரியம்: நீங்கள் இருவரும் இயேசுவின் விசுவாசிகளாக இருக்க வேண்டும். அவிசுவாசிகளோடு பிணைக்கப்படாதிருப்பாயாக என்று வேதம் மிகவும் தெளிவாக கூறுகிறது. அவிசுவாசிகளை நேசியுங்கள். அனைவரோடும் நட்புறவுடன் இருங்கள். ஆனால், திருமண உறவுக்குள் அவிசுவாசிகளை கொண்டு வராதிருங்கள். திருமண உறவு, ஒரு உடன்படிக்கையின் உறவு. எனவே இந்த புனிதமான உடன்படிக்கைக்குள் அவிசுவாசிகளை கொண்டு வராதிருங்கள். அவிசுவாசிகளை மணந்து கொண்டு, பின்னர் விசுவாசிகளாக மாற்றி விடலாம் என்ற எண்ணமும் வேண்டாம். வேத வசனம் கூறியதில் மாற்றமில்லை.

அது மாத்திரம் அல்ல, பாலியல் உறவை குறித்தும் வேதம் திட்டவட்டமாக போதிக்கிறது. பாலியல் ரீதியான உறவு, திருமண பந்தத்தினுள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கையிலோ, திருமண பந்தத்திற்கு வெளியிலோ வேதம் அதனை அனுமதிக்கவில்லை. ஒரு நபரின் மன உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவரை குறித்த பொருளாதார பொறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவரது சரீரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது உண்மையான அன்பு ஆகாது. திருமண வாழ்விற்கு ஆயத்தப்பட்டிருந்தாலும், நிச்சயிக்கப்பட்டிருந்தாலும், இருவரும் தனி தனியே! இருவரும் ஒருவராக வில்லை!

உங்கள் வாழ்க்கையை குறித்து நீங்கள் தேவனுக்கு கணக்கு கொடுக்க வேண்டும். எனவே, திருமணத்திற்காக ஆயத்தப்பட்ட காலத்தை, உங்கள் துணையை மதிப்பாய்வு செய்து தேர்ந்தெடுக்க தேவன் தந்த வாய்ப்பாகவே பாருங்கள். திருமணத்திற்கு நிச்சயிக்கபட்ட நாட்களை, ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

சிந்திக்க

துணை தேடும் காரியத்தில் எவ்வாறு தேவனை உங்கள் செயல்முறைக்குள் அழைக்கப்போகிறீர்கள்? தேவனை உங்கள் செயல்முறைக்குள் அழைப்பது எந்தளவில் துணை தேடுதலுக்கு முக்கியம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

உங்கள் எண்ணங்களை மற்றவரோடு வெளிப்படையாக, அதே நேரத்தில் அவர்களும் தவறாக புரிந்துகொள்ளாத வகையில் எந்தெந்த விதங்களில் வெளிப்படுத்த முடியும்? நீங்கள் பழகுகிற விதத்திலேயே மற்றவரை எவ்வாறு கனப்படுத்த முடியும்?

திருமணத்திற்கு முந்தைய உறவுகளில் தேவன் வைத்திருக்கும் எல்லைகள் யாவை? அவைகளில் எவையேனும் நீங்கள் மீறி இருக்கிறீர்களா? இருந்தால், அதிலிருந்து எவ்வாறு உங்களை திருத்திக்கொள்ள விரும்புகிறீர்கள்?

வேதவசனங்கள்

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

Dating In The Modern Age

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது என்றவுடன் சிலருக்கு மனதில் பதட்டமும் மிக பெரிய எதிர்பார்ப்பும் ஏற்படும். தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்த இந்த காலகட்டத்திலும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வது மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. ஒரு தனிப்பட்ட மனிதர் திருமணத்திற்கு தயாராகி, வாழ்க்கை துணையை சரியாய் தேர்வு செய்து, திருமண வாழ்க்கைக்குள் நுழைவதை குறித்து இந்த 7 நாள் தியான திட்டம் அமைந்திருக்கும். வாழ்வின் இந்த கட்டத்தில், தேவனுடைய வழிநடத்தலில் பிரயாணிப்பது பற்றி போதகர் பென் ஸ்டூவர்ட் அவர்கள் நமக்கு கற்று தர இருக்கிறார்கள். வாழ்க்கை துணையை முடிவு செய்வதில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன, அதை எவ்விதத்தில் கையாளுவது போன்ற வழிமுறைகளையும் யுக்திகளையும் அவர்கள் நமக்கு போதிக்க இருக்கிறார்கள். Breakaway ஊழியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரான போதகர் பென் அவர்கள், தற்போது வாஷிங்டன் பட்டணத்தில் உள்ள Passion சிட்டி சபையின் போதகராக பணியாற்றி வருகிறார்கள். Texas A&M campus மூலமாக ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களுக்கு வாராந்திர வேதபாட வகுப்புகளையும் நடத்தி வருகிறார்கள்.

More

இந்த தியான திட்டத்தை வழங்கியமைக்காக போதகர் பென் ஸ்டூவர்ட் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு, அணுகவும்: https://www.thatrelationshipbook.com