நவீன யுகத்தில் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதுமாதிரி

Dating In The Modern Age

7 ல் 3 நாள்

துணை தேடுதலின் நோக்கம் என்ன?

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதென்பது எளிதான ஒன்றல்ல. சில நேரங்களில், இருட்டில் மட்டைப்பந்து விளையாடுவது போன்ற சூழ்நிலையாக காட்சியளிக்கும். பந்து எங்கே நம் மீது பட்டுவிடுமோ என்ற பயத்தில் சிலர் ஒதுங்கி விடுவதுண்டு. வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பதும் அதேபோன்று தான். ஆபத்துகள் நிறைந்த சவாலான ஒன்று. ஆனால், ஆழ்மனதிற்குள் எல்லாருக்குள்ளும் ஒருவித ஆசை, தாகம் இருக்கும், தனக்கான அந்த நபரை கண்டு இணைய வேண்டும் என்று. அன்பை கொடுக்கவும், பதிலுக்கு அன்பை பெற்று அனுபவிக்கவும் அந்த ஒரு நபரை தேடுவோம். இந்த பூலோகத்தில் பிறந்த பெரும்பாலானவர்கள் திருமணத்தை விரும்பி ஏற்றுக்கொண்டவர்கள் தான். எனவே அதற்கான இந்த சவாலான துணை தேடும் வேட்டையையும் துணிச்சலோடு எதிர்கொள்கின்றனர்.

இன்றைக்கு துணை தேடும் வழிகள் பல வந்துவிட்டன. அவரவர் தங்கள் துணைகளை தேடிக்கொள்ளவும், இணைந்துகொள்ளவும் இணையத்திலும் இன்று பல தளங்கள் இயங்கிக்கொண்டிருக்கிறது. உங்களுக்கு எதிர்பார்ப்புகள் பெரிதாக இல்லையென்றால், ஒரே நாளில் கூட துணை தேடி, திருமணமும் முடித்து வைத்துவிடலாம். அந்த அளவிற்கு இன்றைக்கு வசதிகள் பெருகிவிட்டன. யாரோ ஒருவரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்வது எளிது. ஆனால், உங்களுக்கான அந்த சரியான நபரை தேர்ந்தெடுத்து மணந்து கொள்வது, எளிதான ஒன்றல்ல. திருமண காரியங்களில் அந்த ஏற்ற துணையை தேர்ந்தெடுப்பதே முக்கியம் என்று கருதுகிறேன். அந்த சரியான துணையை எப்படி கண்டுபிடிப்பது என்ற கேள்வி இங்கு எழுகிறது. வருத்தங்கள் இல்லாமல், அதிக சிரமம் இல்லாமல், நமக்கான வாழ்க்கை துணையை நாம் சரியாக தேர்வு செய்ய முடியுமா? இதற்கு நாம் பதிலளிப்பதற்கு முன்பதாக, நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய அடித்தள கேள்வி: வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் நமது முக்கியத்துவங்கள் என்னனென்ன?

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் முறை கொடுத்து வேதம் நமக்கு எதுவும் கற்றுக்கொடுக்கவில்லை. ஆனால், ஒருவரை எவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதை குறித்து அநேக காரியங்களை வேதம் நமக்கு போதிக்கிறது. வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் காரியத்திலும், நான் அவைகளையே கலந்து ஆராய விரும்புகிறேன். நீங்கள் உங்கள் துணையை தேர்வுசெய்யும் போக்கில், அந்த நபரை மதிப்பீடு செய்கிறீர்கள். அந்த நபர் உங்களுக்கு பொருத்தமானவரா? உங்கள் எஞ்சியுள்ள வாழ்நாளில் அவரோடு கூட உங்கள் வாழ்வை பகிர்ந்துகொள்ள அவர் தகுதியுடையவரா என்றெல்லாம் மதிப்பீடு செய்வீர்கள். இவைகளை குறித்து பேசும்போது நாம் சிந்திக்க வேண்டிய ஒரு மிக முக்கிய காரியம், நீங்கள் மதிப்பீடு செய்ய போகும் நபரிடம் எந்தெந்த குணங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

ஒரு தனி மனிதராக நீங்கள் தேவனுக்கென்று வைராக்கியமாக வாழ்பவராக இருக்கலாம். தேவபயத்தோடு உங்களுக்கு அளிக்கப்பட்ட தாலந்துகள், திறமைகள், நேரம், செல்வாக்கு அனைத்தையும் தேவனுக்கென்று விதைக்கிறவர்களாக இருப்பீர்களென்றால், அதே போன்று பலருக்கும் ஆசீர்வாதமாக வாழ்ந்துகொண்டிருக்கிற ஒருவரையே நிச்சயம் நீங்கள் தேடுவீர்கள். உங்களை போன்றே பலரும் பல கோணங்களில் தேவனுக்காக வைரியாக்கியமாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அதில், உங்கள் பக்கம் நின்று, உங்களோடு ஒருமித்து ஓடத்தக்க ஒருவரையே நீங்கள் விரும்புவீர்கள். அப்படி, உங்கள் வாழ்வில் தேவன் இணைக்கும் புதிய உறவுகளின் மூலமாக உங்களுக்கான அந்த சரியான நபரை தேவன் உங்கள் வாழ்க்கை துணையாக கொண்டு வரலாம்.

நீங்கள் முக்கியத்துவ படுத்த வேண்டியது குணங்கள் மற்றும் பொருத்தம். தேவனுக்கும் தேவனுக்குரியவைகளுக்கும் உண்மையாக நல்ல கனிகளுள்ள ஜீவியம் செய்யும் ஒருவர், அதே நேரம், உங்களுக்கும் நன்கு பொருந்த கூடிய ஒருவரை தான் நீங்கள் மணக்க விரும்புவீர்கள். பேசி பழகுவதற்கு எளிதான, சந்தோசமான நேரங்களை குடும்பமாக பகிர்ந்துகொள்ள உங்களுக்கு பொருத்தமான அந்த நபர். இயேசுவின் குணங்களை தங்கள் வாழ்வில் வெளிப்படுத்துகிற ஒருவர்.

உங்கள் வாழ்க்கைக்கான நோக்கமும் அர்த்தமும் உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் கண்டடைந்து இணைவதின் மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்காதீர்கள். அது அப்படி அல்ல. அது அவர்களால் சுமக்க கூடாத மிஞ்சிய பாரம். நீங்கள் உருவாக்கப்பட்ட விதம் அதுவல்ல. நீங்கள் பாதியாக உருவாக்கப்பட்டு, மீதி பாதியாக உங்கள் துணை உங்களோடு இணைந்து நீங்கள் "முழுமை" பெறுவீர்கள் என்பதல்ல. நீங்களே தனியாகவே முழுமையாக படைக்கப்பட்டு, தேவனால் அன்புகூரப்பட்டு இருக்கிறீர்கள்.

எனவே, உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் கண்டடைவதின் நோக்கம், உங்களை முழுமைப்படுத்தும் மீதி பாதியை உங்களோடு இணைப்பது அல்ல. நீங்கள் ஏற்கனவே முழுமையானவர்கள். உங்களோடு கூட இணைந்து தேவன் நியமித்த ஓட்டத்தில் ஓட நல்ல பண்புகளோடும், அதே நேரம் உங்களுக்கும் நன்கு பொருந்தக்கூடிய ஒருவரை நீங்கள் கண்டடைந்து, இருவரும் இணைந்து தேவன் உங்களுக்காக வைத்திருக்கிற அந்த எதிர்கால ஆசீர்வாதங்களுக்குள்ளாக பிரயாணிப்பதே தேவனுடைய சித்தம். நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வளர உதவி செய்து, கிறிஸ்துவின் சாயலில் மாற ஒருவருக்கொருவர் ஊக்குவியுங்கள். இந்த பிரயாணத்தில், நீங்கள் ஒருவேளை சிலவற்றை விட்டுக்கொடுக்கவோ, மாற்றிக்கொள்ளவோ, தியாகம் செய்யவோ அவசியம் ஏற்படலாம். திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்படுவதை போல திருமண வாழ்க்கை எளிதான ஒன்றல்ல. சிறிது கடினமான பாதை தான். ஆனாலும், மேன்மையின் பாதையாக இருக்கும்.

வாழ்க்கைத் துணையை தேடும்போது நீங்கள் முக்கியத்துவப் படுத்தவேண்டுவது இவைகளே. உங்கள் திருமண வாழ்வின் தரிசனத்தை நீங்கள் புரிந்துகொண்டால், உங்களது திருமண வாழ்க்கை அழகாகவும் மிகுந்த ஆசீர்வாதமாகவும் இருக்கும்!

சிந்தனைக்கு

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் நீங்கள் காயப்பட்டிருக்கிறீர்களா? அப்படிப்பட்ட அனுபவத்தால் நீங்கள் கற்றுகொண்டவைகள் என்னென்ன?

உங்கள் வாழ்க்கைத் துணையை குறித்த உங்கள் எதிர்பார்ப்புகள் என்னென்ன? அவர்களோடு சேர்ந்து நீங்கள் பயணிக்க போகும் வாழ்வின் நோக்கமென்ன? அவைகள் ஆரோக்கியமானவைகளா?

உங்கள் வாழ்க்கைத் துணைக்கான தேடுதலின் போது நீங்கள் அவர்களை மதிப்பீடு செய்ய விரும்பும் காரியங்கள் என்னென்ன? நீங்கள் எதிர்பார்க்கும் மதிப்பீட்டு குணங்கள் உங்கள் எதிர்காலத்தை வளமாகுமாக்குமா?

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Dating In The Modern Age

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது என்றவுடன் சிலருக்கு மனதில் பதட்டமும் மிக பெரிய எதிர்பார்ப்பும் ஏற்படும். தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்த இந்த காலகட்டத்திலும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வது மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. ஒரு தனிப்பட்ட மனிதர் திருமணத்திற்கு தயாராகி, வாழ்க்கை துணையை சரியாய் தேர்வு செய்து, திருமண வாழ்க்கைக்குள் நுழைவதை குறித்து இந்த 7 நாள் தியான திட்டம் அமைந்திருக்கும். வாழ்வின் இந்த கட்டத்தில், தேவனுடைய வழிநடத்தலில் பிரயாணிப்பது பற்றி போதகர் பென் ஸ்டூவர்ட் அவர்கள் நமக்கு கற்று தர இருக்கிறார்கள். வாழ்க்கை துணையை முடிவு செய்வதில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன, அதை எவ்விதத்தில் கையாளுவது போன்ற வழிமுறைகளையும் யுக்திகளையும் அவர்கள் நமக்கு போதிக்க இருக்கிறார்கள். Breakaway ஊழியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரான போதகர் பென் அவர்கள், தற்போது வாஷிங்டன் பட்டணத்தில் உள்ள Passion சிட்டி சபையின் போதகராக பணியாற்றி வருகிறார்கள். Texas A&M campus மூலமாக ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களுக்கு வாராந்திர வேதபாட வகுப்புகளையும் நடத்தி வருகிறார்கள்.

More

இந்த தியான திட்டத்தை வழங்கியமைக்காக போதகர் பென் ஸ்டூவர்ட் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு, அணுகவும்: https://www.thatrelationshipbook.com