நவீன யுகத்தில் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதுமாதிரி
துணை தேடல் எவ்வாறு இருக்க வேண்டும்?
பல ஆண்டுகளுக்கு முன்பு, கிராண்ட் கேன்யனுக்குச் சென்றபோது நான் ஒரு நீர்வீழ்ச்சியைக் காண பள்ளத்தாக்கில் ஆழமாக இறங்கினேன். நான் கொலராடோ ஆற்றங்கரையில் மலையேறும்போது, அதே நீர்வீழ்ச்சிக்குச் சென்று கொண்டிருந்த ஒரு இளம் ஜோடியைச் சந்தித்தேன். அவர்களுடன் சேர அவர்கள் என்னை அழைத்தார்கள், ஆனால் அவர்கள் என்னை மெதுவாக்குவார்கள் என்று எண்ணி மறுத்துவிட்டு அவர்களுக்கு முன்னாலே வேகமாக சென்றேன். ஆனால், நேரம் செல்ல செல்ல, பாதையை தவறவிட்டேனோ என்ற பயம் என்னை பிடித்தது. நான் பயந்த அந்த வேளையில், ஒரு குன்றிலிருந்து ஒரு மான் துள்ளி வந்தது. சட்டென்று அங்கிருந்து பின்னாக கீழே விழுந்த நான், எனக்கு பின்பதாக தண்ணீர் விழும் சத்தத்தை கேட்டேன். அந்த சத்தத்தை பின்தொடர்ந்தவாறே நடந்தேன். நீர்வீழிச்சியை அடைந்தேன். நான் முன்பு கடந்து வந்த அந்த இளம்ஜோடி எனக்கு முன்பதாகவே நீர்வீழ்ச்சியை அடைந்திருந்தார்கள். நான் செல்கையில் அவர்கள் மலையின் அடிவாரத்தில் உணவருந்தி கொண்டிருந்தார்கள்.
ஒரு உண்மையை உணர்த்துவதற்க்காவே இந்த சம்பவத்தை இங்கு கூறினேன். நானும் அந்த இளம் ஜோடியும் ஒரே இடத்திற்கு தான் சென்று கொண்டிருந்தோம். ஆனால், நான் சென்ற வழியில், பயமும், பதட்டமும் நிறைந்திருந்தது. ஆனால், அவர்கள் சரியான பாதையில், சந்தோஷமாக, தங்கள் பிரயாணத்தை ரசித்தவாறே சென்றார்கள். நவீன உலகத்தின் துணை தேடலும், நான் சென்ற பாதையை போன்றே தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய உறவிற்குள் செல்கின்றனர். ஆனாலும், தேடலின் பிரயாணம் நீண்டுகொண்டே போகிறது. முப்பது வயதிற்குள் அநேகர் திருமணம் முடிப்பதே இல்லை. கடந்த தலைமுறைகளில் சுவடுகள் தெளிவாக இருந்தன. ஆனால் இப்போது எந்தவொரு உபகரணங்களும், வழிகாட்டியும் இல்லாமல் வனப்பகுதிக்குச் செல்கிறோம். நாமே பாதையை உருவாக்குகிறோம், ஆனால் வழியில் மிகவும் கஷ்டப்படுகிறோம்.
துணை தேடலின் இன்றைய விதிகள் தெளிவற்றதாகவும், நிச்சயமற்றதாகவும் மாறிவிட்டன. வாழ்க்கை துணை தேடல் என்பது வேடிக்கை, களிப்பு, மற்றும் வாழ்க்கை மேம்பாடு போன்ற சொற்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் சோகம், சோர்வு மற்றும் மன அழுத்தம் ஆகிய வார்த்தைகளையே தொடர்புப்படுத்தி கேட்க முடிகிறது.கிறிஸ்துவுக்குள் எனது நண்பர்கள் என்ற முறையில் உங்கள் துணை தேடல் ஒரு சிறந்த பயணமாக இருக்க விரும்புகிறேன். இந்த நவீன காலத்திலும் ஒரு சிறந்த பயணம் சாத்தியமே! அன்பின் பாதைகளில் வலிகள் இருக்கலாம். ஆனாலும் தேவையற்ற வலியைத் தவிர்க்கக்கூடிய ஒரு வழியைக் கொண்டிருக்கலாம்.
துணை தேடல் செயல்முறையை அநேகர் இன்று அதிக முக்கியத்துவமின்றி செய்ய துவங்கியதால் தான் இன்று பெரும்பாலான துன்பங்கள் ஏற்பட்டுள்ளன. நான் சொல்வதைக் கவனியுங்கள் - செயல்முறை என்ற வார்த்தை நகர்தலை குறிக்கிறது. இந்த தேடல் என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்ட முடிவை நோக்கிய தொடர்ச்சியான செயல்களை கொண்ட பிரயாணமாக இருக்க வேண்டும். இது எந்தவிதமான நகர்வோ அசைவோ இல்லாமல் நீங்கள் உட்கார்ந்திருக்கும் நிலை அல்ல. இது ஒரு மதிப்பீட்டு செயல்முறையாகும். இந்த நகர்வு முற்றுப்புள்ளி பெரும் இலக்கு திருமணம்.
இந்த செயல்முறையை வகைப்படுத்துவது அன்பில் வேரூன்றிய நமது தேவனின் காலங்களை கடந்த கொள்கைகள். நன்றாக கவனியுங்கள், நான் அவைகளை வழிமுறைகள் என்று சொல்லவில்லை, கொள்கைகள் என்று கூறினேன். வழிமுறைகள் என்பது எளியவை - இவைகளை பின்பற்றினால் நீங்கள் திருமண உறவில் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பது போன்று இருப்பவை. துணை தேடல் எளிதானது அல்ல. ஏனென்றால், உறவுகள் மாற்றங்கள் நிறைந்தது. துணை தேடலின் செயல்முறை என்பது, ஒரு கப்பலை அதன் உதிரி பாகங்களை கொண்டு கட்டுவது போன்றது அல்ல. அந்த கப்பலில் கடல் வழியே பயணம் செய்வது போன்றது. கடல் கடந்து செல்லும் போது, வழிமுறைகள் உதவாது. நீங்கள் திருப்புமுனை திசைகளை முன்னமே பெற முடியாது. ஏனென்றால், சூழ்நிலைகள் அவ்வபோது மாறும். வழியில் நீங்கள் எப்படிப்பட்ட புயல்களை சந்திப்பீர்கள் என்பது முன்னமே யாருக்கு தெரியும்?
எனினும், கொள்கைகளால் கடலில் உங்கள் உயிரை காப்பாற்ற முடியும். நட்சத்திரங்களை கணித்து செல்வது, திசைகாட்டியை பயன்படுத்தும் முறை, வரைபடத்தை ஒப்பிட்டு கப்பலை ஓட்டுவது போன்றவற்றிற்கு உங்களை உருவாக்கும். அதேபோலவே, துணை தேடலிலும், தேவனுக்கடுத்த கொள்கைகள், வெவ்வேறான சூழ்நிலைகளில் சவால்களை தைரியமாய் சந்திக்க உதவும். இந்த தகவல்கள் உங்களை திருமணம் என்னும் மறுகரைக்கு பத்திரமாக கொண்டு செல்லும்.
அடுத்த இரண்டு தியானங்களில் நான் உள்ளடக்கும் காரியங்களை நீங்கள் முழு கவனத்தோடு ஈடுபாடோடு வாசிக்க விரும்புகிறேன். அதற்கு உங்கள் முயற்சி தேவை! இந்த முயற்சி ஒரு சாகசம் போல மாறினாலும், (அபாயங்கள் இருந்தாலும்) அது முயற்சிக்கு மதிப்புள்ளது. துணை தேடல் என்னும் கொந்தளிப்புகளுள்ள கடல் பிரயாணத்தை நீங்கள் பாதுகாப்பாக கடப்பதற்கு அந்த வழிகாட்டு நெறிகள் உதவி செய்யும்.
சிந்திக்க
துணை தேடல் என்றவுடன் அதனோடு தொடர்புடைய வார்த்தைகளாக உங்கள் நினைவில் வரும் வார்த்தைகள் யாவை? உங்கள் துணை தேடல் பிரயாணத்தை குறித்த உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன? உங்கள் மனநிலை என்ன?
துணை தேடல் ஒரு செயல்முறையாக இருப்பதன் அர்த்தம் என்ன? துணை தேடலில் தேவைப்படும் உங்கள் செயல்பாடுகள் என்னென்ன? இந்த பயணத்தில் உங்கள் இலக்கு என்ன? நீங்கள் சந்திக்கும் நபரை திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு ஆர்வம் இல்லை என்றால், அதனை எவ்வாறு கையாளுவது ஆரோக்கியமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
துணை தேடலுக்கு தேவையான எந்த காரியத்தில் நீங்கள் குறைவுபட்டிருக்கிறீர்கள்? அதை எவ்வாறு சரி செய்ய விரும்புகிறீர்கள்? நீங்கள் இந்த தேடலின் போது சந்திக்கும் நபர்களை எவ்வாறு மதிப்பீடு செய்வீர்கள்? இந்த தேடலின் செயல்முறை எப்படி ஒரு சாகசம் போல இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது என்றவுடன் சிலருக்கு மனதில் பதட்டமும் மிக பெரிய எதிர்பார்ப்பும் ஏற்படும். தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்த இந்த காலகட்டத்திலும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வது மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. ஒரு தனிப்பட்ட மனிதர் திருமணத்திற்கு தயாராகி, வாழ்க்கை துணையை சரியாய் தேர்வு செய்து, திருமண வாழ்க்கைக்குள் நுழைவதை குறித்து இந்த 7 நாள் தியான திட்டம் அமைந்திருக்கும். வாழ்வின் இந்த கட்டத்தில், தேவனுடைய வழிநடத்தலில் பிரயாணிப்பது பற்றி போதகர் பென் ஸ்டூவர்ட் அவர்கள் நமக்கு கற்று தர இருக்கிறார்கள். வாழ்க்கை துணையை முடிவு செய்வதில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன, அதை எவ்விதத்தில் கையாளுவது போன்ற வழிமுறைகளையும் யுக்திகளையும் அவர்கள் நமக்கு போதிக்க இருக்கிறார்கள். Breakaway ஊழியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரான போதகர் பென் அவர்கள், தற்போது வாஷிங்டன் பட்டணத்தில் உள்ள Passion சிட்டி சபையின் போதகராக பணியாற்றி வருகிறார்கள். Texas A&M campus மூலமாக ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களுக்கு வாராந்திர வேதபாட வகுப்புகளையும் நடத்தி வருகிறார்கள்.
More