நவீன யுகத்தில் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதுமாதிரி
முன்னுரிமை கொடுக்க வேண்டியவை
பிறரை நேசிக்கிற, பிறர் மேல் அன்புகூருகிற ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறீர்களா? தேவன் உங்களிடம் காட்டிய அதே அன்பை நீங்களும் மற்றவர்களிடம் காட்ட விரும்புகிறீர்களா? உங்கள் குடும்பத்திற்கு நண்பர்களுக்கு, குறிப்பாக நீங்கள் தேர்ந்தெடுக்க போகும் உங்கள் வாழ்க்கை துணைக்கு வாழ்வின் மூலதனமாக நீங்கள் இருக்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால், உங்களுக்கு ஒரு மூலதனம் தேவை. சக்கரம் இயங்கும் முறை இதுவே. நீங்கள் தேவனுடைய அன்பை அனுபவித்தால் மட்டுமே, உங்களால் மற்றவர்களுக்கு அந்த அன்பை பகிர்ந்தளிக்க முடியும். 1 யோவான் 4:19ல் அதையே நாம் வாசிக்கிறோம். அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்பு கூறுகிறோம். உங்களுக்கு வாழ்வின் மூலதனம் இருந்தால் மட்டுமே, உங்களால் மற்றவர்களுக்கு வாழ்வின் மூலதனமாக இருக்க முடியும்.
நாம் அனைவருக்குள்ளும் அன்பிற்கான ஒருவித ஏக்கம் ஆழமாக இருப்பதை யோவான் 4ஆம் அதிகாரத்தில் இயேசு நமக்கு விளக்கி காண்பித்திருக்கிறார். இயேசு அந்த சமாரிய ஸ்திரியோடு அந்த கிணற்றண்டையிலே பேசிக்கொண்டிருக்கும்போது சொல்கிறார், "ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள். இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு புருஷனல்ல" (வசனம் 18). இயேசு சொன்ன மற்றுமொரு காரியம், "நீ தேவனுடைய ஈவையும் தாக்கத்துக்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதை அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவ தண்ணீரை கொடுத்திருப்பார்" (வசனம் 10). இயேசு மறைமுகமாக சொன்ன காரியம், "உன்னுடைய இருதயத்தின் ஆழத்தில் இருக்கும் அந்த தாகத்தை புருஷர்களிடத்தில் அடைய தேடுகிறாய். ஆனால், அது உன் தாகத்தை தீர்ப்பதற்கான சரியான இடமல்ல." ஆழ்மனதில் இருக்கும் வாஞ்சையை தாகத்தை தீர்ப்பதற்கான சரியான மூலதனம் தேவனுடைய சமூகமே! மனித உறவுகள் அல்ல என்று இயேசு அந்த ஸ்த்ரீக்கு உணர்த்தியதை நம்மால் காண முடிகிறது.
நீங்கள் உங்களது ஒரு தேவையை தாகத்தை தீர்த்துக் கொள்ள திருமண பந்தத்தை நாடும் போது, அது உங்களுக்கு சாதகமாக அமைய போவது இல்லை. இன்றைய காலங்களில் அநேகர் இதில் தவறுவதை நம்மால் காண முடிகிறது. தேவனால் மட்டுமே பூர்த்தி செய்ய படக்கூடிய பெரிய அளவிலான தாகத்திற்கு, வாஞ்சைகளுக்கு, மனிதர்களை நாடி செல்வது நிச்சயம் ஏமாற்றத்தையே அளிக்கும். தேவனிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும் அந்த நிபந்தனையற்ற அன்பை, உங்கள் கடினமான காலங்களில் உங்கள் உடன் நிற்க நீங்கள் விரும்பும் எந்த மனித உறவுகளாலும் உங்களுக்கு கொடுக்க முடியாது. ஏனென்றால், அவர்களே உங்களை தங்கள் வாழ்வின் மூலதனமாக கொண்டிருப்பார்கள். உங்கள் மூலதனம் தேவனாக இருந்தால் மட்டுமே, உங்கள் மூலமாக தேவ அன்பு அவர்கள் வாழ்வில் பாய்ந்தோட முடியும். நீங்கள் தேவனுக்கு பிரியமானவர்கள் என்பதில் நீங்கள் வேரூன்றும்போது தான் உங்களால் மற்றவர்களை எளிதில் நேசிக்க முடியும். தீர்ந்துபோகாத அன்பு உங்களுக்குள்ளாக மூலதனமாக இருக்கும்வரையில் தான், மற்றவர்களுக்கு மூலதனமாக உங்களால் வாழ முடியும்.
நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளானவர்களாக இருப்பீர்களென்றால் இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமை மிகுந்த ஒருவர் உங்களை நேசித்து தாங்குவதை நீங்கள் உணர்ந்து அனுபவிப்பீர்கள். அவர் உங்களை பெயர் சொல்லி அழைப்பவர். அவர் உங்களை காண்கிறவர். உங்களை அவருடையவர்களாக கொள்வதற்கு தன்னையே தந்தவர். எனவே உங்கள் துணையை தேர்வு செய்வதற்கு முன், அவரோடு கூட உங்கள் உறவிற்கு முன்னுரிமை கொடுத்து நீங்கள் பயணிக்க வேண்டும். கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வில் நிலைத்திருந்து ஜீவியம் பண்ணும் ஒருவரால் மட்டுமே, தங்கள் துணைக்கும் ஆசீர்வாதத்தின் கருவியாக மாற முடியும்.
சிந்திக்க
மற்றவர்களுக்கு ஆசீர்வாதத்தின் கருவியாக நீங்கள் மாறுவதற்கு, தேவனோடு கூட உங்கள் தனிப்பட்ட உறவு ஏன் அவசியப்படுகிறது? அதிலிருந்து நீங்கள் தவறுவதால் உங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்னென்ன?
தேவனோடு கூடிய உங்கள் உறவு எந்தளவில் உங்கள் துணையோடு கூடிய உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும்? தேவனோடு கூடிய உங்கள் உறவு எந்தளவில் நீங்கள் உங்களை பார்க்கிற விதத்தை மேம்படுத்தும்?
தேவனோடு கூடிய உங்கள் உறவை மேம்படுத்த நீங்கள் இன்று என்ன முயற்சி செய்ய நினைக்கிறீர்கள்? தேவனை முக்கியத்துவப்படுவதை குறித்து உங்கள் வாழ்வில் நீங்கள் எடுக்க விரும்பும் நடைமுறை படிகள் என்னென்ன?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது என்றவுடன் சிலருக்கு மனதில் பதட்டமும் மிக பெரிய எதிர்பார்ப்பும் ஏற்படும். தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்த இந்த காலகட்டத்திலும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வது மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. ஒரு தனிப்பட்ட மனிதர் திருமணத்திற்கு தயாராகி, வாழ்க்கை துணையை சரியாய் தேர்வு செய்து, திருமண வாழ்க்கைக்குள் நுழைவதை குறித்து இந்த 7 நாள் தியான திட்டம் அமைந்திருக்கும். வாழ்வின் இந்த கட்டத்தில், தேவனுடைய வழிநடத்தலில் பிரயாணிப்பது பற்றி போதகர் பென் ஸ்டூவர்ட் அவர்கள் நமக்கு கற்று தர இருக்கிறார்கள். வாழ்க்கை துணையை முடிவு செய்வதில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன, அதை எவ்விதத்தில் கையாளுவது போன்ற வழிமுறைகளையும் யுக்திகளையும் அவர்கள் நமக்கு போதிக்க இருக்கிறார்கள். Breakaway ஊழியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரான போதகர் பென் அவர்கள், தற்போது வாஷிங்டன் பட்டணத்தில் உள்ள Passion சிட்டி சபையின் போதகராக பணியாற்றி வருகிறார்கள். Texas A&M campus மூலமாக ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களுக்கு வாராந்திர வேதபாட வகுப்புகளையும் நடத்தி வருகிறார்கள்.
More