நவீன யுகத்தில் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதுமாதிரி
யாரை தெரிந்துகொள்வது?
வாழ்க்கை துணையை தெரிந்துகொள்கிற காரியத்தில் அநேகர், கடையில் சென்று விருப்பப்பட்ட ஒரு பொருளை கேட்டு வாங்கும் நுகர்வோர் மனநிலையில் நடந்து கொள்ளுவர். வாழ்க்கை துணையை தெரிந்துகொள்ளும் காரியத்தில் நமக்கு தேவை, நுகர்வோர் மனநிலை அல்ல, ஒரு துணையின் மனநிலை! எப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் திருமணம் செய்ய விரும்புகிறீர்கள் என்று சாதாரணமாக நீங்கள் யாரிடமேனும் கேட்டு பாருங்கள்! "நான் மணந்து கொள்ள விரும்பும் நபர் உயரமாக இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும், வலிமையுள்ளவராக இருக்க வேண்டும், அக்கறை உள்ளவராக இருக்கவேண்டும், நகைச்சுவை உணர்வு உள்ளவராக இருக்க வேண்டும், அதிகம் வருமானம் உள்ளவராக இருக்கவேண்டும்" என்றெல்லாம் ஒரு பெரிய பட்டியலை உங்களுக்கு முன்னே வைப்பார்கள்.
இப்படி பட்டியலிடுவதில் என்ன பிரச்னையென்றால், ஒருவராலும் முழுமையாக பூர்த்தி செய்யமுடியாத ஒரு எதிர்பார்ப்பை அது உருவாக்கும். உங்களுக்கு எந்தெந்த குணநலன்கள் உள்ள ஒரு ஒருவர் துணையாக கிடைத்தால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவைகளையே எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டிய ஒன்று, நீங்கள் மணந்து கொள்ள தேடுவது ஒரு பொருள் அல்ல, ஒரு மனிதர்! உங்களுடைய துணையை குறித்த உங்கள் எதிர்பார்ப்புகள் உலக காரியங்களை குறித்ததாகவே இருப்பது, சரியானதல்ல. அவைகள் எல்லாம் நாளடைவில் மங்கிப்போகும் மாயையான காரியங்கள் (நீதிமொழிகள் 31:30). உங்கள் வாழ்க்கை கட்டி எழுப்ப இத்தகைய மேலோட்டமான காரியங்களை நீங்கள் உங்கள் அஸ்திபாரமாக வைப்பீர்களானால், உங்கள குடும்ப வாழ்க்கைக்கு நீண்ட ஆயுள் அமைவது கடினம்.
வாழ்க்கை துணைக்கான உங்கள் தேடுதலின்போது, உங்கள் தேவைகளுக்கு ஏற்ற அமைப்புகளை கொண்ட ஒரு இயந்திரத்தை நீங்கள் உருவாக்கவில்லை. மாறாக, தேவ மகிமைக்காக மற்ற நபரைக் கட்டியெழுப்பும் வகையில் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துகிறீர்கள். நீங்கள் திருமணம் செய்யத் தேர்ந்தெடுக்கும் அந்த நபர் அன்பு மற்றும் ஒழுக்கம் ஆகிய இவ்விரண்டில் உறுதியானவராக இருக்க வேண்டும். அப்படியென்றால் தான் உங்களுடைய பெலவீனமான பகுதிகளில் அவர் உங்களுக்கு உறுதுணையாக இருக்க முடியும். உங்கள் திருமண வாழ்வு வலுவானதாக இருக்க இது மிக மிக அவசியம். சரியான அடித்தளத்தில் வலுவாக கட்டியெழுப்பப்பட்ட ஒருவரால் தான், சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறாமல், எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுக்கு உண்மையுள்ளவராக இருக்க முடியும்.
ஒரே முயற்சியில் உங்கள் வாழ்க்கை துணையை நீங்கள் தேர்ந்தெடுப்பதென்பது அநேகமாக சாத்தியமில்லாத ஒன்று. சில மணி நேர உரையாடலில் யார் வேண்டுமானாலும் தங்களை மிகவும் நேர்த்தியான ஒருவராக போலியாக காண்பித்துக்கொள்ள முடியும். ஆனால் நீங்கள் பார்க்க விரும்புவது நன்மையான காரணங்களுக்காக நல்ல காரியங்களை செய்ய வாஞ்சிக்கும் வாஞ்சிக்கும் ஒருவர். தேவனோடு கூட நெருங்கிய ஒரு வாழ்வில், உங்களோடு கூட இணைத்து அவரை சேவிக்க வைராக்கியமாக இருக்கும் ஒருவரையே நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தேவ சமூகத்தில் ஒன்றாக நின்று, பிரமாண வாக்குறுதிகளை ஒருவருக்கொருவர் பரிமாறி, உண்மையுள்ள மனதோடு இருவரும் ஒருவராக இணைக்கப்பட வேண்டும்.
தேவனுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் உண்மையாக வாழக்கூடிய ஒருவரையே உங்கள் வாழ்நாள் துணையாக நீங்கள் தேர்வு செய்ய விரும்புவீர்கள். உங்கள் உறவில் தேவனை குறித்த உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் புரிந்துகொள்ளுதல்கள் மிக மிக முக்கியம் . உங்கள் இருவரது நம்பிக்கைகள், புரிந்துகொள்ளுதல்கள் வேறுபடலாம். அவைகளில் சிற்சில வேற்றுமைகள் உங்கள் உறவில் எவ்வித பாதிப்பையும் கொண்டுவராது. ஆனால், சில அடிப்படையான நம்பிக்கைகளில் நீங்கள் வளைந்து கொடுத்து, வேற்று நம்பிக்கை உடையவரை நீங்கள் தேர்வு செய்வதை தவிர்ப்பது நல்லது. அதாவது, திரித்துவம், பாவத்தை குறித்த உண்மை, நம்முடைய பாவத்திற்கு பரிகாரமாக கிறிஸ்துவின் மாற்று மரணம், கிருபையினாலே விசுவாசத்தின் மூலம் கிடைக்கும் இரட்சிப்பு ஆகிய சில அடிப்படை இறையியல் நம்பிக்கைகள் வளைந்து கொடுக்க முடியாதவை. தேவனுக்கடுத்த காரியங்களில் அனைத்திலும் உங்கள் எண்ணங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தேவையற்றது என்றாலும், இப்படிப்பட்ட அடிப்படையான சாத்தியங்களில் நீங்கள் விட்டுக்கொடுக்காமல் இருப்பது அவசியம் என்று எச்சரித்து சொல்ல விரும்புகிறேன்.
இணக்கமாக இருப்பது அவசியமான ஒன்று. உங்கள் திருமண வாழ்வின் பெரும்பகுதியான நேரம் , நீங்கள் உடலுறவில் ஈடுபடுவதை விட, படுக்கை அறைக்கு வெளியில் தான் கழிக்க போகிறீர்கள். எனவே ,உங்கள் துணையை நீங்கள் சுவாரஸ்யமான ஒருவராக காண வேண்டும். உங்கள் இருவரது வாழ்க்கை மற்றும் வாழ்வின் குறிக்கோள்கள் இணக்கமுள்ளதாக இருக்கவேண்டும். சில நேரங்களில் விட்டுக்கொடுத்து போவது அவசியம் தான். ஆனால் அதிகமாக சூழ்நிலைகளில் விட்டுக்கொடுத்தல்கள் கட்டாயப்படுத்தப்பட்டால், திருப்தியற்ற வாழ்க்கையால் இருவருக்கும் விரக்தி ஏற்படலாம்.
சரீர ஈர்ப்பின் முக்கியத்துவம் வேதாகமம் அங்கீகரித்த ஒன்று தான். (சாலமோனின் உன்னதப்பாட்டு புஸ்தகத்தை வாசித்து பாருங்கள்). சரீர ஈர்ப்பு என்பது உறவை கட்டியெழுப்ப காரணமாக அமையும் ஒன்றுதானே தவிர, உங்கள் துணையை தீர்மானிக்கும் காரணியாக அங்கே குறிப்பிடப்படவில்லை. வயது மூப்பினால், சரீர தோற்றம் மாற்றமடைவதை, வாலிபத்தின் அழகு மற்றும் பெலன் மங்கி போவது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே இவைகளை தீர்மானிக்கும் காரணிகளாக வைக்காதிருங்கள், புத்திசாலியாக இருங்கள்! திருமணத்திற்கு முன் இந்த காரியங்களை குறித்து சிந்திப்பது மிகவும் எளிதானது. இந்த காரியங்கள் அனைத்தையும் கருத்தில் கொள்வது, இந்த உறவு தேவன் தான் நிர்ணயித்தாரா இல்லையா என்பதை அறிய உதவும்.
சிந்திக்க
எப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் உங்கள் வாழ்க்கை துணையாக தேர்வு செய்ய விரும்புகிறீர்கள்?
எவ்வற்றை அடிப்படையாக கொண்டு உங்கள் துணையை தேர்வுசெய்ய போகிறீர்கள்? அந்த உறவில் நீங்கள் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கும் காரியங்கள் என்னென்ன?
உங்கள் வாழ்க்கையை குறித்து உங்களுக்கு இருக்கும் குறிக்கோளுக்கு ஒத்த குறிக்கோள் தான் நீங்கள் தேர்வு செய்யப்போகும் அந்த நபருக்கு இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்துகொள்ள போகிறீர்கள்? இவைகளை முன்னுரிமையாக்குவதில் ஏற்பட கூடிய பாதிப்புகள் எவை?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது என்றவுடன் சிலருக்கு மனதில் பதட்டமும் மிக பெரிய எதிர்பார்ப்பும் ஏற்படும். தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்த இந்த காலகட்டத்திலும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வது மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. ஒரு தனிப்பட்ட மனிதர் திருமணத்திற்கு தயாராகி, வாழ்க்கை துணையை சரியாய் தேர்வு செய்து, திருமண வாழ்க்கைக்குள் நுழைவதை குறித்து இந்த 7 நாள் தியான திட்டம் அமைந்திருக்கும். வாழ்வின் இந்த கட்டத்தில், தேவனுடைய வழிநடத்தலில் பிரயாணிப்பது பற்றி போதகர் பென் ஸ்டூவர்ட் அவர்கள் நமக்கு கற்று தர இருக்கிறார்கள். வாழ்க்கை துணையை முடிவு செய்வதில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன, அதை எவ்விதத்தில் கையாளுவது போன்ற வழிமுறைகளையும் யுக்திகளையும் அவர்கள் நமக்கு போதிக்க இருக்கிறார்கள். Breakaway ஊழியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரான போதகர் பென் அவர்கள், தற்போது வாஷிங்டன் பட்டணத்தில் உள்ள Passion சிட்டி சபையின் போதகராக பணியாற்றி வருகிறார்கள். Texas A&M campus மூலமாக ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களுக்கு வாராந்திர வேதபாட வகுப்புகளையும் நடத்தி வருகிறார்கள்.
More