பதற்றத்தின் ஊடே ஜெபம்மாதிரி
உங்கள் கவனத்தை தேர்வு செய்து, உங்கள் மனதை புதுப்பியுங்கள்
இங்கே உங்கள் சௌகரியத்திற்காக, நாங்கள் நேற்று கூறிய ஐந்து தெய்வ வசனங்கள். இன்று மறுபடியும் அவற்றை படியுங்கள். அவற்றை எழுதி வைத்தீர்களா? மனப்பாடம் செய்யுங்கள்! இந்த திட்டத்தில் உங்களுக்கு தனித்து நின்ற வசனம் இருப்பின் அவற்றையும் சேர்த்து கொள்ளுங்கள்.
நீங்கள் கவலைபட தூண்டபடும் பொதேல்லாம், இந்த வசனங்களை இறைவனிடத்தில் திரும்ப ஜெபம் செய்யுங்கள்.
நினைவில் கொள்ளுங்கள்: தேவன் உங்களின் மேல் அக்கறை கொண்டவர், அதலால் உங்கள் கவலைகள் அனைத்தயும் அவரிடம் விடுங்கள். (1 பேதுரு 5:7 CEV)
நினைவில் கொள்ளுங்கள்: எதையும் தாங்கும் வலிமையை கர்த்தர் எனக்கு கொடுப்பார். (பிலிப்பி 4:13 CEV)
இன்றைய பிரார்த்தனை:
பதற்றம் உட்பட- எல்லா சூழ்நிலைகளையும் எதிர் கொள்ளும் சக்தியை எனக்கு நல்கியதற்காக தேவனே உமக்கு நன்றி. பதற்றம் படர்வதை நான் எப்போது உணர்ந்தாலும், உமது வார்த்தையில் உள்ள சத்தியத்தால் நான் சக்தி காண பிரார்த்திக்கிரேன். உமது வார்த்தைகள் நான் பதற்றம் அடையும் சமயங்களில் நம்பிக்கையால் நிறைக்கட்டும். பயம் மற்றும் சோகத்தின் இருட்டில் அவை பிரகாசமான ஒளி வழங்கட்டும். அனைத்து பொய்மைகளையும், உம்மிடம் இருந்து வராத எண்ணங்கள் அனைத்தயும் அவற்றின் மெய்மைகள் துரத்தட்டும், இயேசுவின் நாமத்தில், நான் பிரார்த்திக்கின்றேன். ஆமென்.
அடுத்து என்ன?
If you found this plan helpful, consider joining the prayer community at American Bible Society. Let’s pray together that others in need will find hope in God’s Word. To join, sign up at இந்த திட்டம் உங்களுக்கு உதவியது எனில், அமெரிக்கன் பைபிள் சொசைடியின் பிரார்த்தனை சமூகத்தில் சேர்வதை பற்றி அலோசியுங்கள். தேவை உடைய மற்றவர் இறைவனின் வார்த்தையில் நம்பிக்கை காணட்டும் என ஒருமித்து பிரார்த்திப்போமாக. சேர்வதிற்கு இங்கே பதிவு செய்யவும். href="https://abs.bible/prayer">abs.bible/prayer.
இந்த திட்டத்தைப் பற்றி
பதற்றம் எப்போது வேண்டுமானாலும் நம் வாழ்க்கையில் புகுந்துவிடலாம். ஆனால் அது தங்க வேண்டிய அவசியம் இல்லை! இன்று நீங்கள் எந்த சவால்களை எதிர்கொண்டாலும், தேவனின் வலிமையான வாக்குறுதிகளைக் கொண்டு பிரார்த்தனையில் அவருடன் இணைந்து பதற்றம் மற்றும் அதன் அழிவூட்டும் விளைவுகளை நீங்கள் கடக்க முடியும். அடுத்த சில நாட்களில் பதற்றத்தின் பிடியை முடிவுக்குக் கொண்டு வந்து, தேவனின் வார்த்தையிலிருந்து அமைதியை பெறுவதற்கான படிகளை எடுப்பதற்காக எங்களுடன் பயணம் செய்யுங்கள்.
More