பதற்றத்தின் ஊடே ஜெபம்மாதிரி

Praying Through Anxiety

7 ல் 4 நாள்

பதற்றமும் தனிமையும்:

பதற்றத்தின் ஒரு அழிவுக்குரிய விளைவு என்னவென்றால், நீங்கள் மாற்றமற்ற நிலையில் சிக்கிக்கொண்டுள்ளீர்கள், மேலும் உங்கள் பயத்தில் நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என்று நம்ப வைப்பதுவே. அது உண்மையல்ல! பதற்றம் மிகவும் பொதுவானது என்பதை நாம் நேற்று பார்த்தோம். ஆயினும் பதற்றம் அடைந்தால் நம்மை தனிமைப்படுத்தி கொள்ளவே தூண்டபடுகிறோம். “எனது பிரச்சனைகளை பிறருக்கு சுமையாக விட விரும்பவில்லை. என் போராட்டங்களை நான் சொன்னால், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?” போன்ற எண்ணங்களை நாம் மனதில் இடம் கொடுக்கிறோம்.

ஆனால் தனிமை கடினமான சூழல்களை மேலும் மோசமாக்குகிறது. வாழ்க்கையின் சிக்கல்களை நீங்கள் தனியாக சமாளிக்க முனைக்கபடவில்லை.

இயேசுபிரான் மார்க் 14:32–42 இல் பயத்தையும் பதற்றத்தயும் எதிர்கொள்வதற்கான அழகான மாதிரியை வழங்குகிறார். தன் சிலுவை அறையுமுன், கெத்சேமனே தோட்டத்தில் பிரார்த்திக்கும்போது, இயேசு மிகுந்த கவலை மற்றும் துக்கத்தில் ஆழ்கிறார். அவர் தன் நண்பர்களிடம் ஆதரவை நாடுகிறார். பேதுரு, யாக்கோபு, மற்றும் யோவானிடம் தன் துக்கத்தை பகிர்ந்து, அவர்களுடன் இருக்கச் சொல்லுகிறார். அதே நேரத்தில், அவர் தேவனை நோக்கி பிரார்த்திக்கிறார்.

பதற்றம் நிறைந்த தருணங்களில் பிறரிடம் உதவியை நாடுவது சரியானது மட்டுமின்றி தேவையானதும் என இயேசுபிரான் காட்டுகிறார். கடவுளின் புத்திரனே தன் மிகப்பெரிய தேவைக்கான நேரத்தில் ஆதரவுக்காக மற்றவர்களை நாடினார் என்பதை கருதுகையில், நமது பதற்றதின் போது நாமும் கடவுளையும் பிறரையும் நாடுவது எவ்வளவு தேவை?

நீங்கள் பதற்றமாக உணரும்போது, ஒரு நண்பரை தொடர்பு கொள்ளுங்கள். ஒரு கனிவான குரல் அல்லது நம்பிக்கையூட்டும் ஒரு உரைச்செய்தி அந்த சூழ்நிலையை தணிக்கும். மற்றவரின் இருப்பு—தொழில்நுட்பத்தின் மூலமாய் இருப்பினும்—ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கலாம்

நாம் தொடர்பு கொள்ள ஒரு நண்பர் இல்லாதபோதிலும், தேவன் எப்போதும் நம்முடன் இருப்பார் என்று வேதாகமம் உறுதிபடுத்துகிறது. அவர் நமக்கு உதவ எதிர்பார்த்து காத்திருக்கிறார்: ““தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.”(சங்கீதம் 46:1 GNT).

பதற்றமான தருணங்களில் உங்களுக்கு உதவ மற்றவர்களை அழைக்க யோசிக்க உதவும் சில செயல் படிகள் இங்கே

  • சங்கீதம் 94:18–19 படியுங்கள்: பதற்றதின் போது இறைவன் என்ன செய்ய முடியும்?
  • ஒருவரின் அருகாமை எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்? பதற்றமான தருணங்களில் நீங்கள் கடவுளின் அன்பை எவ்வகையில் உணர்ந்து உள்ளீர்? பதற்றமாகவும் தனிமையாகவும் நீங்கள் இருக்கையில் அணுக பொதுவாக உங்களுக்கு யாராவது இருக்கிறார்களா?
  • கடவுளிடம் நீங்கள் உங்கள் கவலையை எப்படி கொண்டு செல்லப் போகிறீர்கள்? உங்கள் எதிர்பார்ப்பு என?

இன்றைய பிரார்த்தனை:

கடவுளே, நான் பதற்றமாகவும் தனிமையிலும் இருக்கிறேன். உங்கள் ஆறுதல் எனக்கு தேவை. என் துக்கங்களை உங்களிடம் வெளிப்படுத்துகையில், என்னை அண்டிக்கொள்ளுங்கள். எனக்கு மிகவும் தேவைப்படும் தருணத்தில் நீங்கள் என்னை ஒருபோதும் கைவிட்டு செல்லமாட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள். மேலும் தேவனே, எனக்கு ஆதரவான சமுதாயத்தை கண்டுபிடிக்க உதவுங்கள். எனக்குத் தேவையான உதவியைப் பெறுவதற்கு, வெளிப்படையாகவும் நலிபடவல்ல கூடியவராகவும் இருக்க எனக்குக் கற்றுக் கொடுங்கள். இயேசுவின் நாமத்தில், ஆமேன்.

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Praying Through Anxiety

பதற்றம் எப்போது வேண்டுமானாலும் நம் வாழ்க்கையில் புகுந்துவிடலாம். ஆனால் அது தங்க வேண்டிய அவசியம் இல்லை! இன்று நீங்கள் எந்த சவால்களை எதிர்கொண்டாலும், தேவனின் வலிமையான வாக்குறுதிகளைக் கொண்டு பிரார்த்தனையில் அவருடன் இணைந்து பதற்றம் மற்றும் அதன் அழிவூட்டும் விளைவுகளை நீங்கள் கடக்க முடியும். அடுத்த சில நாட்களில் பதற்றத்தின் பிடியை முடிவுக்குக் கொண்டு வந்து, தேவனின் வார்த்தையிலிருந்து அமைதியை பெறுவதற்கான படிகளை எடுப்பதற்காக எங்களுடன் பயணம் செய்யுங்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கிய அமேரிக்கன் பைபிள் சோஸைடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவல் பெற தயவு கூர்ந்து இந்த இணைய தளத்தை அணுகவும்: https://americanbible.org/prayer/