பதற்றத்தின் ஊடே ஜெபம்மாதிரி
நிஜமான யுத்தம். நிஜமான மீட்பு!
அன்பு நண்பரே, நீங்கள் எதிர்கொள்ளும் யுத்தம் நிஜமானது. உங்கள் இதயத்தின் மல்யுத்தங்கள், உங்களை முடக்கும் பயம், உங்களை சிறைப்படுத்தும் பொய்கள்-உங்களை மூழ்கடிக்க அச்சுறுத்தும் இடைவிடாத வெட்க அலைகள் எல்லாவற்றையும் உங்களது உடைந்த நிலையை யாரும் பார்க்காமல் இருக்க மறைத்து வைக்க முயற்ச்சி செய்கயிலும்.
ஆயினும் நம்பிக்கை இருக்கிறது ஏனெனில் இயேசுவின் மீட்பும் நிஜமானதே.
இயேசு உங்களை நேசிக்கின்றார். பதற்றத்தால் நீங்கள் நொறுங்க வேண்டும் என்பதல்ல அவரது உத்தேசம். அவர் சாவையே விஞ்சியவர்! பதற்றத்தையும் உட்பட எதையும் அவர் விஞ்ச கூடியவர் என்ற காப்புறிதியுடன் நீங்கள் வழலாம்.
வாழ்கை இன்னமும் கடினமானதே. சம்பவங்கள் நடக்கும். கடினமான சம்பவங்கள். நம்மை கவலை மற்றும் பயப்பட செய்யும் விஷயங்கள். ஆனால் அந்த கடினமான சமயங்களில் நம்மை இயேசுபிரான் கைவிடுவதில்லை. நீங்கள் போராடுவதால் உங்கள் மேல் இயேசுபிரான் சினம் கொள்வதில்லை. நீங்கள் இன்னமும் மாறவில்லை என்பதால் உங்களை விட்டு ஓட மாட்டார்
மாறாக, அன்புடனும் கிருபையுடனும் இயேசுபிரான் சொல்கிறார், “என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.”யோவான் 14:27
சமாதானத்தை உங்களுக்கு கொடுக்க இயேசுபிரான் விரும்புகிறார். உங்களை குணபடுத்தி மற்றும் பதற்றத்தின் துர்க்கத்தில் இருந்து உங்களை விடுவிக்க அவர் விரும்புகிறார்
இரவோடிரவாய் இது நடக்காமல் போகலாம். இது சுலபமாக இருக்கும் என்று கூட உத்திரவாதமில்லை. உங்கள் உள்ளூர் சர்ச்சின் ஆதரவு உங்களுக்கு தேவைப்படலாம். ஒரு உரிமம் பெற்ற ஆலோசகர் அல்லது மருத்துவ வல்லுனரின் உதவி கூட தேவைப்படலாம். ஆனால் பதற்றத்திலிருந்து நீங்கள் வெற்றி பெறலாம்.
இந்த திட்டம் பதற்றத்தை கையாள்வதற்கான பைபிள் உபகரணங்களை பெற உங்களுக்கு நல்கும். பதற்றம் என்றால் என்ன, கவலை மற்றும் பதற்றத்தை பற்றி வேதம் என்ன சொல்கிறது, உங்கள் போராடத்தில் தேவன் என்ன செய்வார் என்பதை நீங்கள் கற்பீர்கள். மேலும் நீங்கள் ஜெபிப்பீர்கள்.
பிரார்த்தனை விஷயங்களை மாற்றும். கடவுள் நம் சூழ்நிலைகளை மாற்றுவார் – நம்மை மாற்றுவார் என்பது நமக்கு தெரியும் அதனால் நாம் ஜெபிக்கிறோம். பதற்றத்தின் ஊடே நீங்கள் ஜெபிக்கையில் தேவன் கேட்கிறார் என்பதை அறியுங்கள், உங்கள் உதவிகோறும் அழுகைக்கு பதிலளிக்கிறார்.
ஆகவே இன்று நீங்கள் பதற்றத்தால் போராடுகிறீர் என்றால், தளர்வடையாதீர். நீங்கள் ஒரு முன்னேறும் ஊழியம். ஆனால் இயேசுபிரானில் நீங்கள் விஞ்சியவர்.
இன்றைய பிரார்த்தனை:
Father, I confess I want to be free from anxiety. பிதாவே, பதற்றம் இன்றி நான் இருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். பதற்றத்தை நேருக்கு நேர் எதிர் கொள்ள எடுக்க வேண்டிய படிகளை எடுக்கவும் இந்த பயணத்தை மேற்கொள்ள நான் விரும்பமாறு செய்யுங்கள். நான் உண்மையாக குணமடைய முடியும் என்று நம்ப எனக்கு விசுவாசம் வேண்டும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
———
வாசிப்பவர் ஒவ்வொரும் பைபிளுடன் எவ்வாறு ஊடாடுகிறார்கள் என்பதில் ஒரு தனித்துவமான கதை இருக்கும். உங்களை பற்றி உங்களை போன்ற வாசிப்பவர்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும், கீழே கொடுக்கப்பட்ட இணைய தளத்தை கிளிக் செய்ய அழைக்கிறோம். நீங்கள் பங்கேற்பதால் அமேரிக்கன் பைபிள் சோஸைடி தரமான பைபிள் வளங்களை எல்லா இடத்தில் இருக்கும் மக்களுக்கு கொடுக்க உதவும் மேலும் புதிய பைபிள் வளங்களை வளர்க்க தெரிவிக்கும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பதற்றம் எப்போது வேண்டுமானாலும் நம் வாழ்க்கையில் புகுந்துவிடலாம். ஆனால் அது தங்க வேண்டிய அவசியம் இல்லை! இன்று நீங்கள் எந்த சவால்களை எதிர்கொண்டாலும், தேவனின் வலிமையான வாக்குறுதிகளைக் கொண்டு பிரார்த்தனையில் அவருடன் இணைந்து பதற்றம் மற்றும் அதன் அழிவூட்டும் விளைவுகளை நீங்கள் கடக்க முடியும். அடுத்த சில நாட்களில் பதற்றத்தின் பிடியை முடிவுக்குக் கொண்டு வந்து, தேவனின் வார்த்தையிலிருந்து அமைதியை பெறுவதற்கான படிகளை எடுப்பதற்காக எங்களுடன் பயணம் செய்யுங்கள்.
More