பதற்றத்தின் ஊடே ஜெபம்மாதிரி
பதற்றத்தால் சுழல்வதை தகர்த்தல்
உங்கள் பதற்றத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்? யாரோ ஒருவரை அல்லது ஏதோ ஒன்றை நம்பி இதனை கடக்க முயல்கறீர்களா? உங்கள் பதற்றமான எண்ணங்களை புறக்கணித்து அவை மறைந்துவிடும் என்று நம்பி இருக்கிறீர்களா?
பதற்றம் தானாகவே மறையாது மேலும் நாம் அதை சித்தத்தால் மாத்திரமே போக செய்ய முடியாது. பதற்றம் உடல், மனம் மற்றும் ஆன்மாவில் குழப்பத்தை கொண்டுவரும். இது உங்களை சோர்வடைய செய்யும். நீங்கள் சோர்வாக எழும்போது, ஒவ்வொரு புதிய நாளின் கவலைகளும் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும். நீங்கள் இந்த "வலிவழி சக்கரத்திலிருந்து" வெளியேற வேண்டும்!
பதற்றத்தை சமாளிப்பது வேலைபாடுதான். நீங்கள் நம்பிய பொய்கள், பிடித்து வைத்திருந்த வேதனைகள் மற்றும் தவறான சிந்தனை முறைகளை ஆகியவற்றை கையாள தேவைப்படுகிறது.
பதற்றத்தை சமாளிப்பதில் கடவுளின் தலையீடும் உதவியும் தேவைப்படுகிறது. நமது கனமான சுமைகளை சுமப்பதில் இருந்து ஓய்வு பெறும் படிக்கு இயேசு நம்மை தன்னுடன் நுகத்து கொள்ள ஊக்குவிக்கிறார்(மத்தேயு 11:28–30). உங்கள் வாழ்வின் சோதனைகளும் கவலைகளும் தனியே எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுவதில்லை. உங்களுக்கு ஆறுதல், வலிமை மற்றும் நம்பிக்கையாக இருக்க உங்களுடன் கூட நடக்க இசைவு தெரிவிக்கிறார்.
இன்று நீங்கள் பதற்றத்தால் தத்தளித்தால், உங்கள் கவலைகளை நேருக்கு நேர் எதிர் கொள்ளும் தைரியத்தை இயேசுவிடமிருந்து பெற இசைந்திருங்கள். பதற்றத்தின் பிடியை தகர்த்து சுதந்திர பயணத்தை தொடங்க சில படிகள் வருமாறு:
- உங்கள் பதற்றத்தின் மூலங்களை அம்பலபடுத்துங்கள் (சங்கீதம் 139:23–24). பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள். கடவுளிடம் பதற்றத்தை நீக்கும்படி கேட்பதற்குப் பதிலாக, அதன் காரணத்தை காட்ட வேண்டுகோள் செய்யுங்கள். இறைவனை நம்ப சிறமபடுகறீர்களா? உங்களுக்கு உதவும் அளவுக்கு உங்களை அவர் நேசிக்கிறார் என நம்புகறீர்களா? கடவுள் உங்கள் சவாலான சூழ்நிலைகளை கையாள்வதற்கான திறமை உள்ளவர் என்பதை நம்புகிறீர்களா? கடவுள் அவரது உண்மைக்கு இணங்க வேண்டும் என்று உங்கள் எண்ணங்கள் மற்றும் நடத்தைகளில் உள்ள பகுதிகளை வெளிப்படுத்த அனுமதிக்கவும்.
- பயத்தை பயப்படுவதை நிறுத்துங்கள்(2 தீமோ 1:7). பயம் அதனையே புசிக்கும். நாம் அதைப் பற்றி மேலும் மேலும் யோசிக்கும்போது, பயம் நமது மனங்களில் பெரியதாக மாறுகிறது. பயத்தை நீங்கள் விசுவாசத்தை கொண்டு போராடுங்கள். நீங்கள் எதைப் பற்றி பயப்படுகிறீர்கள் என்பதை மையமாக கொள்ளாமல் கடவுளையும் அவருடைய சக்தியையும் மையமாகக் கொண்டு உங்கள் கவலைகளை மீறுங்கள்.
- கடவுளிடம் உங்கள் மனதை புதுப்பிக்கும்படி கேட்கவும் (பிலிப்பியர் 4:8). அவருடைய உண்மைகள் மூலம் ஆரோக்கியமற்ற எண்ணப் பாணிகளை மாற்றக் கேளுங்கள். ஒரு காகிதத்தில் இந்த ஐந்து வேத வசனங்களை எழுதி அதனை தியானிக்கவும்: பிலிப்பியர் 4:6–8, கொலொசெயர் 3:2, இயிசயா 41:10, சங்கீதம் 4:8, யோஷுவா 1:9. (நாம் நாளை மீண்டும் அவற்றைப் பார்க்கலாம்.) கடவுளின் வார்த்தை உங்களுக்குள் ஊடுருவி உங்களை பலப்படுத்தட்டும்.
- கடவுளிடம் உங்கள் பிரார்த்தனைகளையும் வேண்டுகோள்களையும் சொல்லவும் (1 பேதுரு 5:7). உங்கள் கவலைகளை மற்றும் பயங்களை கடவுளுடன் பகிரவும். கடவுள் கேட்கிறார், மேலும் உதவ விரும்புகிறார். நீங்கள் உங்கள் எல்லா கவலைகளை அவரிடம் ஒப்படைத்ததும், அவரது ஆவி உங்கள் பயங்களை நீங்கள் ஒடுக்க உதவும்.
இன்றைய பிரார்த்தனை:
கர்த்தரே, என் சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்டு பார்க்கும் வல்லமை தாரும். என் பதற்றத்தை வெல்ல எனக்கு வல்லமை தாரும். கட்டுபடுத்த, தப்பிக்க, மற்றும் கவலைப்பட முயற்சி செய்வதிற்கு பதிலாக உமது செப்பமான அமைதியை பரிமாற உதவுங்கள். எல்லா சூழ்நிலைகளிலும் உங்களை விசுவாசித்து உங்கள் ஞானத்தை நம்ப நான் தேர்ந்தேடுக்கிறேன். நான் எல்லா கவலைகளையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன் ஏனெனில் நீங்கள் என் மேல் அக்கறை கொண்டவர் என்பதை நான் அறிவேன். இன்று, நான் மீண்டும்—என்னுடைய இதயத்தினுள் என்னை சிறை செய்யும் விஷயங்களை ஒப்படைக்கிறேன். என்னுடன் நடந்து தேவனே, எனக்கு பதற்றத்திலிருந்து விடுதலையும் வெற்றியும் வழங்குங்கள்! இயேசுவின் பெயரில். ஆமென்.
இந்த திட்டத்தைப் பற்றி
பதற்றம் எப்போது வேண்டுமானாலும் நம் வாழ்க்கையில் புகுந்துவிடலாம். ஆனால் அது தங்க வேண்டிய அவசியம் இல்லை! இன்று நீங்கள் எந்த சவால்களை எதிர்கொண்டாலும், தேவனின் வலிமையான வாக்குறுதிகளைக் கொண்டு பிரார்த்தனையில் அவருடன் இணைந்து பதற்றம் மற்றும் அதன் அழிவூட்டும் விளைவுகளை நீங்கள் கடக்க முடியும். அடுத்த சில நாட்களில் பதற்றத்தின் பிடியை முடிவுக்குக் கொண்டு வந்து, தேவனின் வார்த்தையிலிருந்து அமைதியை பெறுவதற்கான படிகளை எடுப்பதற்காக எங்களுடன் பயணம் செய்யுங்கள்.
More