பதற்றத்தின் ஊடே ஜெபம்மாதிரி

பதற்றதின் பொய்களை ரத்து செய்தல்
பதற்றம் நம்மிடம் பொய் சொல்கிறது. அது நம் உடம்பிலேயே வசித்திரமாக உணர செய்கிறது, பயத்தாலும் குற்ற உணர்ச்சியாலும் நிரப்பி நம்மை தனிமை படுத்துகிறது. பள்ளி அடவாடி போலவே, அதுவும் தினசரி நம்மை தொந்தரவு செய்து, கடவுள் உன்னை கவனிக்கவில்லை, பேரழிவு தவிர்க்க முடியாதது, அதை நீ தப்பிக்க முடியாது, மற்றும் எந்த நபரையும் நம்ப முடியாது.என்று சொல்லுகிறது.
ஆனால் பதற்றம் உண்மையில் வேரூன்றவில்லை. ஒரு பதற்றம் உள்ள மனது உங்களைப் பற்றிய, உங்கள் சூழ்நிலைகள் பற்றிய, உங்கள் எதிர்காலம் பற்றிய மற்றும் கடவுளைப் பற்றிய பொய்களை நம்பி விட்டது. அந்த பொய்கள் நம் கற்பனைகளில் வேஷமிட்டு, உண்மையான நிகழ்வுகள் போன்று உணரச்செய்கிறது.
ஆனால் நாம் பதற்றதின் பொய்களை பரிசுத்த ஆவியின் உதவியாலும் வேத வசனத்தின் சக்தியாலும் முறியடிக்க முடியும்.
கடவுளின் வார்த்தைகளின் உண்மைகள் உங்கள் சிந்தனைகளை மறுசீரமைக்கட்டும் அதன் வாயிலாக நீங்கள் அதிகமான சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியும். இன்றே நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நான்கு உண்மைகள் இதோ:
- கடவுள் என்னை நேசிக்கிறார், அவர் என்பால் அக்கறை கொண்டுள்ளார். கடவுள் உங்களை நிபந்தனையற்ற முறையில் நேசிக்கிறார் என்று நம்புகிறீர்களா? அவர் அவ்வாறே உங்களை நேசிக்கிறார்! கடவுள் உங்களை மிகவும் நேசிக்கிறார். நீங்கள் கடக்க வேண்டியவற்றை பற்றி அக்கறை கொண்டுள்ளார். உங்களுக்கான பாதுகாப்பான இடமாகவும் அடைக்கலமாகவும் இருக்க விரும்புகிறார். நீங்கள் கடவுளின் அன்பை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும் போது, பயம் உங்களை தொந்தரவு செய்யாமல் போகும், ஏனெனில் அன்பில் பயம் இல்லை; சீரான அன்பு அனைத்து பயத்தையும் வெளியேற்றுகிறது (1 யோவான் 4:18).
- கடவுள் கட்டுப்பாட்டில் இருக்கிறார். நம்மால் சூழ்நிலைகளை கட்டுப்படுத்த முடியாதபோது, கடவுளில் நம்பிக்கையை மறந்துவிடும்போது பதற்றம் வருகிறது. ஆனால் கடவுள் சர்வவல்லவர், அவர் ஞானத்துடன் ஆட்சி செய்கிறார். தோற்றம் இருந்தாலும், கடவுள் கட்டுப்பாட்டில் இருப்பதை நம்பலாம், மேலும் அவர் எப்போதும் கவனம் செல்ல நிறுத்துவதில்லை(சங்கீதம் 121:4).
- கடவுள் என்னை ஒருபோதும் கைவிட மாட்டார் பதற்றம் நம்மை நம்முடைய சூழ்நிலைகளில் நாங்கள் முழுவதுமாக தனியாக இருக்கிறோம் என்று நம்ப வைக்கிறது. ஆனால் கடவுள் உங்களை ஒருபோதும் விட்டு செல்ல மாட்டேன் மற்றுமில்லாமல் உங்களை கைவிடமாட்டார் என்று வாக்களிக்கிறார் (உபாகமம் 31:6). ஒவ்வொரு பருவத்திலும், நாம் எதிர்கொள்ளும் எந்த சூழ்நிலையிலும், அவர் ஒவ்வொரு படியிலும் நம்முடன் இருக்கிறார்.கடவுள் எப்போதும் உங்களுடன் இருக்கிறார், நீங்கள் தனியாக எதையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதை அறிவது உங்களுக்கு சமாதானத்தைத் தரும்.
- கடவுள் எனக்காக நல்லதை மனதில் வைத்துள்ளார். கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, கடவுள் நம் பக்கத்தில் இல்லை என்று நம்ப நாம் தூண்டப்படலாம். “கடவுள் என் பக்கமாக இருந்தால், எனக்கு கெட்ட விஷயங்கள் எப்படி ஏற்பட முடியும்?” என்று கேள்வி எழலாம். ஆனால் வேதம் நமக்கு நினைவூட்டுகிறது, கடவுள் எப்போதும் அவரை நேசிக்கும் ஒவ்வொருவரின் நன்மைக்காகவே செயல்படுகிறார் (ரோமர் 8:28). கடவுள் நல்லவர், உங்களுக்கும் நல்லவராக இருப்பது அவருடைய குணமாகும். சூழ்நிலைகள் மாறாதது போல் தோன்றினாலும், கடவுள் இன்னும் உங்களில் வேலை செய்கிறார், ஒவ்வொரு புயலிலும் விசுவாசம்,எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை வளர்க்கிறார்
இன்றைய பிரார்த்தனை:
ஆண்டவரே, நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள் மற்றும் எனக்காக கவலைப்படுகிறீர்கள் என்பதை நான் அறிவேன். எனவே, இன்று நான் கவலையிலிருந்து தன்னைக் சற்றே ஒதுக்கிக்கொள்கிறேன். உங்களின் பால் என் நம்பிக்கை அதிகரிக்கிறது. விஷயங்கள் தெளிவாக இல்லாவிட்டாலும், என் வாழ்க்கைக்கான உங்கள் நல்ல திட்டங்களில் நான் நம்பிக்கையைக் கொள்கிறேன். தவறான சிந்தனை முறைமைகளை நான் உடைக்க உதவுங்கள், மேலும் உங்கள் சத்தியத்தின் பாதையில் என்னை வழிநடத்துங்கள். இயேசுவின் நாமத்தில், ஆமென்.
இந்த திட்டத்தைப் பற்றி

பதற்றம் எப்போது வேண்டுமானாலும் நம் வாழ்க்கையில் புகுந்துவிடலாம். ஆனால் அது தங்க வேண்டிய அவசியம் இல்லை! இன்று நீங்கள் எந்த சவால்களை எதிர்கொண்டாலும், தேவனின் வலிமையான வாக்குறுதிகளைக் கொண்டு பிரார்த்தனையில் அவருடன் இணைந்து பதற்றம் மற்றும் அதன் அழிவூட்டும் விளைவுகளை நீங்கள் கடக்க முடியும். அடுத்த சில நாட்களில் பதற்றத்தின் பிடியை முடிவுக்குக் கொண்டு வந்து, தேவனின் வார்த்தையிலிருந்து அமைதியை பெறுவதற்கான படிகளை எடுப்பதற்காக எங்களுடன் பயணம் செய்யுங்கள்.
More