பதற்றத்தின் ஊடே ஜெபம்மாதிரி
பதற்றம் என்றால் என்ன?
நமது சூழ்நிலைகளையோ அல்லது எதிர்காலத்தையோ நம்மால் கட்டுப்படுத்த முடியாத போது பதற்றம் நம்மை ஆட்கொள்ளலாம்.
அது பள்ளி தேர்வுக்கு முன், அலுவலகத்தில் விளக்கக்காட்சி, முதல் சந்திப்பு, திருமணம் போன்றவற்றுக்கு முன் நீங்கள் உணரும் உணர்வாக அது இருக்கலாம்; அல்லது மருத்துவ பரிசோதனையின் முடிவுகளை எதிர்பார்க்கும் போது. நீங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும்போது அல்லது ஒரு உறவு மீளாத அளவுக்கு சேதமடைந்துவிடும் போது பதற்றம் உங்கள் துணையாக இருக்க விரும்புகிறது.
திடீர் எதிர்பாராத நிகழ்வுகள், எதிர்காலத்தின் நிச்சயமற்ற அச்சங்கள், அல்லது கடந்தகால துன்பங்களை எதிர்கொள்வது போன்றவற்றிக்கு பதற்றமடைவது சராசரியான உணர்வாக இருக்கலாம். ஆனால் பதற்றம் பெரும்பாலும் ஒரு தற்காலிகமான உணர்வாக மட்டும் இருக்காமல் அச்சுறுத்துகிறது. நீங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, பதற்றம் உங்களை கட்டுப்படுத்தி உங்கள் மனதில் மற்றும் இதயத்தில் குடியேற விரும்புகிறது.
அது உங்களில் குடியேறியதும், பதற்றம் உடல் நோய்கள், தூக்கமின்மை இரவுகள் மற்றும் ஆழ்ந்த சோகம் ஆகியவற்றை ஏற்படுத்த முடியும். இது உங்களின் பிறருடனான உறவுகளை பாதிக்கக்கூடும் மற்றும் அழிவூட்டும் ஆரோக்கியமற்ற தேர்வுகளை சுழச்சியாக தொடரச் செய்யக்கூடும். பதற்றத்துடன் போராடும் மக்கள் மகிழ்ச்சி மற்றும் அமைதி போன்ற உணர்வுகளுக்கு இடமில்லாமல் இருப்பதை காண்கிறார்கள்.
நீங்கள் பதற்றத்துடன் வாழ கூடாது என்கிறார் தேவன். உங்கள் கவலைகளுக்குப் பதிலாக உங்களுக்கு உள்ளார்ந்த அமைதியை அளிக்க தேவன் வாக்களிக்கிறார் (சங்கீதம் 62:5 CEV). அவர் உங்கள் துயரத்திலிருந்து தஞ்சமும் பாதுகாப்பும் பெற நீங்கள் ஓடிச் செல்ல வேண்டிய இடமாக இருக்க விரும்புகிறார். இது என்ன ஒரு பரிமாற்றம்!
நீங்கள் தொடர்ச்சியான கவலையூட்டும் எண்ணங்களில் சிக்கியிருக்கிறீர்கள் என நினைத்தால், உங்களுக்குள் உள்ள புயலை அமைதியாக்க தேவன் விரும்புகிறார். அதற்கான சக்தி அவருக்குண்டு! அவர் எதிர்காலத்தை அறிந்தவர், இன்று—இப்போதே!—உங்கள் சூழ்நிலைகளில் நுழைந்து உங்கள் பாதுகாப்பு இடமாக இருக்கத் தயாராக நிற்கிறார்.
உங்கள் வாழ்க்கையில் பதற்றத்தை அடையாளம் கண்டு அதை தேவனின் அமைதிக்கு பரிமாற்றம் கொள்ள உதவும் நடவடிக்கைகள் சில இங்கே.
- சங்கீதம் 62:5–8 ஐ வாசிக்கவும். நீங்கள் தேவனை மட்டுமே சார்ந்து வாழ்வது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய முடியுமா? நீங்கள் தற்போது எதிர்கொண்டுள்ள எந்தவொரு பதற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்விலும் சக்திவாய்ந்த மற்றும் அன்பான தேவனில் உங்கள் நம்பிக்கையை வைப்பது உங்களை எப்படி பாதிக்கும்?
- தேவனின் மக்கள் அவருடைய அனைத்து பிரச்சினைகளையும் அவரிடம் சொல்ல வேண்டும் என்று சங்கீதக்காரர் வலியுறுத்துகிறார். நீங்கள் அதை செய்துள்ளீர்களா? தேவனில் உங்கள் நம்பிக்கையை வைப்பதற்குப் பதிலாக உங்களுக்கு என்ன வாக்களிக்கப்பட்டுள்ளது? இன்று தேவனை சார்ந்து வாழ்வதற்கான ஒரு படியை எடுப்பது உங்கள் வாழ்க்கையில் எப்படி இருக்கும்?
இன்றைய பிரார்த்தனை:
பிதாவே, என் அனைத்து கவலைகளையும் கொண்டு வருவதற்கு பாதுகாப்பான இடமாக இருப்பதற்கு நன்றி. நான் மீண்டும் ______________ என்பதால் பதற்றத்துடன் இருக்கிறேன். உங்களை சார்ந்திருக்க உதவுங்கள், தேவனே எனக்கு வலுவான பாதுகாவலராக நீங்கள் இருங்கள். நான் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது உங்கள் அமைதியை வேண்டுகிறேன். இன்று, நான் உங்களிலும் உங்கள் முடிவற்ற ஞானத்திலும் மற்றும் சக்தியிலும் என் நம்பிக்கையை வைக்கிறேன். இயேசுவின் பெயரில். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பதற்றம் எப்போது வேண்டுமானாலும் நம் வாழ்க்கையில் புகுந்துவிடலாம். ஆனால் அது தங்க வேண்டிய அவசியம் இல்லை! இன்று நீங்கள் எந்த சவால்களை எதிர்கொண்டாலும், தேவனின் வலிமையான வாக்குறுதிகளைக் கொண்டு பிரார்த்தனையில் அவருடன் இணைந்து பதற்றம் மற்றும் அதன் அழிவூட்டும் விளைவுகளை நீங்கள் கடக்க முடியும். அடுத்த சில நாட்களில் பதற்றத்தின் பிடியை முடிவுக்குக் கொண்டு வந்து, தேவனின் வார்த்தையிலிருந்து அமைதியை பெறுவதற்கான படிகளை எடுப்பதற்காக எங்களுடன் பயணம் செய்யுங்கள்.
More