குழந்தைகளுக்கு வேதாகமம்மாதிரி
இயேசு இவ்வுலகத்தில் இருந்த போது பரலோகத்தை குறித்து தன்னுடைய சீஷர்களிடம் பேசினார். "என் பிதாவின் வீடு”என்று அதை அழைத்தார். அங்கே அநேக வாசஸ்தலங்கள் உண்டு என்றார். வாசஸ்தலம் என்பது பெரிய, அழகான வீடு. இந்த உலகத்திலுள்ள எல்லா வீடுகளைப் பார்க்கிலும் பரலோகம் என்பது மிகவும் பெரியதும், அழகாயும் காணப்படுகிறது.
இயேசு சொன்னார், "ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும் படி நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்து கொள்வேன்". இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பின், பரலோகத்திற்கு சென்றார். அவருடைய சீஷர்கள் அவரை பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவர்கள் கண்களுக்கு முன்பாகவே எடுக்கப்பட்டு, மேலாக போகும் போது, ஒரு மேகம் அவர்களுடைய கண்களுக்கு மறைவாக உள்ளடக்கியது.
அந்த நாள் முதல், இயேசு நான் திரும்பவும் வருவேன், உங்களையும் அழைத்துச் செல்வேன், என்கிற வாக்குத்தத்தை கிறிஸ்தவர்கள் நினைவு கூறுகிறார்கள். யாரும் நினையாத வேளையிலே நான் திடீரென வருவேன்என்று இயேசு சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் வருமுன் மரித்து போன கிறிஸ்தவர்களுக்கு என்ன ஆகும்? அப்படிப்பட்டவார்கள் நேராக இயேசுவிடம் செல்வார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. சரீரத்தில் நாம் இல்லாமல் இருப்பது நாம் ஆண்டவரிடம் இருக்கிறோம் என்பதாம்.
பரலோகம் எவ்வளவு அழகானது என்று வேதாகமத்தின் கடைசி புஸ்தகமான வெளிப்படுத்தல் கூறுகிறது. இதிலே மிகவும் ஆச்சரியம் என்னவென்றால், பரலோகம் என்ற தேவனுடைய வீடு, ஒருவிசேஷமான ஒன்றாகும். தேவன் எல்லா இடங்களிலும் காணப்படுகிறார். ஆனால் அவருடைய சிம்மாசனம் பரலோகத்திலிருக்கிறது.
தேவதூதர்களும் மற்றும் பரலோக ஜீவன்களும் பரலோகத்தில் தேவனை ஆராதிக்கின்றன. அதுபோல தேவனுடைய பிள்ளைகளாக மரித்த யாவரும் அதைச் செய்கிறார்கள். அவர்கள் விசேஷித்த பாடல்களை பாடி தேவனை துதிக்கிறார்கள். அவர்கள் பாடுகிற பாடல்களின் சில வார்த்தைகளை இங்கே காணவும்:
ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு சகல கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜனங்களிலும், ஜாதிகளிலும் இருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலேயே கொண்டு, எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை இராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கினார். (வெளி. 5:9)
"புதிய எருசலேம்” என்று பரலோகத்தை வேதத்தின் கடைசி பக்கங்கள் விளக்குகின்றன. விலையேறப் பெற்ற கற்களும் சுவர்களின் அடித்தளத்தை மூடி அழகாக வண்ண வண்ணமாக ஜொலிக்கின்றன. ஒவ்வொரு வாசலும் ஒரு பெரிய முத்தால் செய்யப்பட்டிருக்கின்றன.
அந்தப் பெரிய முத்தாலான வாசல்கள் அடைக்கப்படுவதில்லை. நாம் உள்ளே போய் சுற்றிப் பார்ப்போம்... எவ்வளவு அற்புதமாகயிருக்கிறது. பரலோகமானது உள்ளே இன்னும் அழகாகயிருக்கிறது. தெளிவான கண்ணாடி போல, பட்டணமானது சுத்தமான பொன்னால் செய்யப்பட்டிருக்கிறது. தெருக்கள் கூட பொன்னால் செய்யப்பட்டிருக்கிறது.
தேவனுடைய சிம்மாசனத்திலிருந்து ஒரு அழகான, சுத்தமான ஜீவத்தண்ணீரான நதி புறப்பட்டு ஒடுகிறது. நதியின் மறுப்பக்கத்தில் ஜீவவிருட்சம் காணப்படுகிறது. அது முதலாவது ஏதேன் தோட்டத்தில் காணப்பட்டது. இந்த விருட்சம் விசேஷமானது. ஏனேனில் அது ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு விதமான பன்னிரண்டு கனிகளை கொடுக்கிறது. அந்த ஜீவவிருட்சத்தின் இலைகள் தேசங்களை குணப்படுத்துவதற்காக உபயோகப்படுத்தபடுகிறது.
பரலோகத்திலே வெளிச்சத்திற்கென்று சூரியனோ, சந்திரனோ அவசியமில்லை. தேவனுடைய மகிமையே அற்புத பிரகாரமாக எல்லாவற்றையும் நிரப்புகிறது. அங்கு இரவு என்பதே இல்லை.
பரலோகத்திலுள்ள மிருகங்கள் கூட வித்தியாசமாக காணப்படுகின்றன. அவைகள் அடக்கத்துடன் நட்புடன் காணப்படுகின்றன. ஒநாய்களும், ஆட்டுக் குட்டிகளும் ஒன்றாக புல்லை மேய்கின்றன. வலிமையான சிங்கங்கள் கூட மாடோடு சேர்ந்து வைக்கோலை சாப்பிடுகிறது. ஆண்டவர் சொல்லுகிறார், "என்னுடைய பரிசுத்த பர்வதத்திலே அவைகள் ஒன்றையொன்று காயப்படுத்துவதோ, அழிப்பதோ இல்லை”.
நாம் சுற்றிப் பார்க்கும் போது, பரலோகத்திலே சில காரியங்களை நாம் காணமுடிவதில்லை. கோபமுள்ள வார்த்தைகளை நாம் கேட்கிறதில்லை. யாரும் சண்டைபோடுவதோ சுயநலத்துடன் காணப்படுவதோயில்லை. கதவுகளில் பூட்டு இல்லை ஏனெனில் பரலோகத்தில் திருடர்கள் இல்லை. அங்கு பொய்யர் இல்லை, கொலை செய்கிறவர்களோ, மந்திரவாதிகளோ வேறு எந்த துஷ்ட மனிதர்களோ இல்லை. பரலோகத்திலே எந்த விதமான பாவமும் இல்லை.
பரலோகத்திலே தேவன் இருக்கிறார். அங்கே எந்த விதமான ழுகையும் இல்லை. சில வேளைகளில் தேவனுடைய பிள்ளைகள் இந்த உலகத்தில் இருக்கிறபோது மிகவும் துக்கத்தினாலே அழுகிறார்கள். பரலோகத்திலே, தேவன் அவர்களுடைய கண்ணீர்ளை யெல்லாம் துடைப்பார்.
பரலோகத்தில் மரணம் கூட கிடையாது. தேவனுடைய பிள்ளைகள் என்றென்றும் அவரோடு இருப்பார்கள். இனி அங்கே துக்கமோ, அழுகையோ, வேதனையோ இல்லை. அங்கே வியாதியில்லை, பிரிவு இல்லை, மற்றும் அடக்க ஆராதனையும் இல்லை. பரலோகத்தில் உள்ள எல்லோரும் எப்போதும் தேவனுடன் சந்தோஷமாயிருப்பார்கள்.
மிகவும் சிறப்பாக, பரலோகம் சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கும் கூட உண்டு.(பெரியவர்களுக்கும் கூட) அவர்கள் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசித்து, ஆண்டவராகிய அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். பரலோகத்திலே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகம் என்ற ஒரு புஸ்தகம் காணப்படுகிறது. அது முழுவதும் மக்களுடைய பெயர்கள் அடங்கியிருக்கின்றன. அதிலே யாருடைய பெயர்கள் எழுதப்பட்டியிருக்கின்றன தெரியுமா? இயேசுவை நம்பினவர்களுடைய பெயா்களெல்லாம் அதிலே காணப்படுகின்றன. அதிலே உன்னுடைய பெயர் உள்ளதா?
வேதாகமத்தில் பரலோகத்தை பற்றிய கடைசி வார்த்தைகள் ஒரு அற்புதமான அழைப்பை கொடுக்கின்றன. ஆவியும், மணவாட்டியும், வா என்கிறார்கள் கேட்கிறவன் வா என்பானாக தாகமாயிருக்கிறவன் வரக்கடவன் விருப்பமுள்ளவன் ஜீவத் தண்ணீரை இலவசமாய் வாங்கிக் கொள்ளக்கடவன்.
முற்றும்
இந்த திட்டத்தைப் பற்றி
அது எப்படி ஆரம்பித்தது? நாங்கள் எங்கிருந்து வந்தோம்? உலகில் ஏன் இவ்வளவு துன்பம்? ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா? மரணத்திற்குப் பின் வாழ்ந்தாரா? உலகின் இந்த உண்மையான வரலாற்றைப் படிக்கும்போதே பதில்களைக் கண்டறியவும்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய பைபிள் ஃபார் சில்ட்ரன், இன்க்.க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.bibleforchildren.org/languages/tamil/stories.php