குழந்தைகளுக்கு வேதாகமம்மாதிரி

குழந்தைகளுக்கு வேதாகமம்

8 ல் 3 நாள்

நோவா தேவனை ஆராதிக்கிற மனிதனாயிருந்தான்‌. ஆனால்‌ மற்ற எல்லா மனிதரும்‌ தேவனை வெறுத்து கீழ்ப்படியாமலிருந்தார்கள்‌. தேவன்‌ ஒருநாள்‌ அதிர்ச்சியான ஒரு செய்தியைச்‌ சொன்னார்‌. "நான்‌ இந்த கெட்ட உலகத்தை அளிக்கப்போகிறேன்"‌ என்று நோவாவிடம்‌ சொன்னார்‌. "ஆனால்‌ உன்‌ குடும்பம்‌ மாத்திரம்‌ காப்பாற்றப்படும்‌".

ஒரு பெரிய வெள்ளம்‌ வந்து இந்த பூமியை மூடும்‌ என்று நோவாவிடம்‌ எச்சரிப்பு கொடுத்தார்‌. "ஒரு பெரிய மரப்பேழையை உன்னுடைய குடும்பத்திற்கும்‌ அநேக பிராணிகளுக்கும்‌ உண்டு பண்ணு” என்று தேவன்‌ கட்டளையிட்டார்‌. அந்தப்‌ பேழையை எவ்வாறு உருவாக்க வேண்டுமென்று தெளிவாக கற்பித்தார்‌. அந்தப்‌ வேலையை ஆரம்பித்தான்‌.

தன்னை பரிகாசம்‌ செய்த மக்களுக்கு, ஏன்‌ ஒரு பேழைக்குள்‌ உருவாக்குகிறேன்‌ என்று விளக்கினான்‌. நோவா கட்டிக்‌ கொண்டேயிருந்தான்‌. தேவனைப்‌ பற்றி மக்களுக்குச்‌ சொன்னான்‌. ஆனால்‌ ஒருவரும்‌ கேட்கவில்லை.

நோவாவிடம்‌ பெரிய விசுவாசம்‌ காணப்பட்டது. இதுவரை மழை பெய்யாதிருந்தும்‌, அவன்‌ தேவனை விசுவாசித்தான்‌, சீக்கிரமாகவே, தேவையான பொருட்களை நிரப்பிக்‌ கொள்ள பேழை தயாராகியது.

விலங்குகள்‌ வந்து சேர்ந்தன. தேவன்‌ ஏழுவிதமான இனங்களையும்‌, மற்றும்‌ இரண்டு இனங்களையும்‌ கொண்டு வந்தார்‌. பெரிய மற்றும்‌ சிறிய பறவைகளும்‌, மிகச்‌ சிறிய மற்றும்‌ உயரமான விலங்குகளும்‌ பேழைக்கு வந்து சேர்ந்தன.

விலங்குகள்‌ வந்து சோ‌ந்த போது, ஒரு வேளை மக்கள்‌ நோவாவை பரிகாசம்‌ செய்திருக்கலாம்‌. பாவம்‌ செய்வதிலிருந்து மக்கள்‌ விலகவில்லை. அவர்கள்‌ பேளைக்குள்‌ செல்லவும்‌ விரும்பவில்லை.

கடைசியாக எல்லா விலங்குகளும்‌, பறவைகளும்‌ பேழைக்குள்‌ சென்றன. "பேழைக்குள்‌ வா” என்று தேவன்‌ "நோவாவையும்‌, அவன்‌ குடும்பத்தையும்‌ அழைத்தார்". நோவாவும்‌, அவன்‌ மனைவியும்‌, அவன்‌ மூன்று குமாரரும்‌ அவர்களுடைய மனைவிகளும்‌ பேழைக்குள்‌ பிரவேசித்தார்கள்‌. தேவன்‌ கதவை அடைத்தார்‌.

பின்பு மழை பெய்யத்‌ தொடங்கிது. நாற்பது நாட்கள்‌ இரவும்‌, பகலும்‌ மழை பெய்து இந்த உலகத்தை நிரப்பியது.

கிராமங்களையும்‌, நகரங்களையும்‌ வெள்ளம்‌ சூழ்ந்தது. மழை நின்ற போது, மலைகள்‌ கூட தண்ணீரின்‌ கீழே காணப்பட்டது. காற்றை சுவாசித்த எல்லாமே மாண்டுபோயின.

தண்ணார்‌ உயர, உயர பேழையானது மிதக்க தொடங்கியது. பேழைக்குள்ளே இருளாக காணப்பட்டிருக்கும்‌. உலுக்கியிருக்கலாம்‌. பயமாக கூட இருந்திருக்கலாம்‌. ஆனால்‌ பேழையானது நோவாவை வெள்ளத்திலிருந்து காப்பாற்றியது.

வெள்ளம்‌ ஏற்பட்ட ஐந்து மாதத்திற்கு பின்னர்‌, உலர்த்தும்‌ காற்றை தேவன்‌ வீசச்‌ செய்தார்‌. மெதுவாக, அரராத்‌ மலையின்‌ மேல்‌ பேழையானது தங்கியது. தண்ணீர் குறையும்‌ வரை நோவா இன்னும்‌ நாற்பது நாட்கள்‌ தங்கியிருந்தான்‌.

பேழையின்‌ ஜன்னலை திறந்து ஒரு காகத்தையும்‌, புறாவையும்‌ வெளியே அனுப்பினான்‌. இளைப்பாறுவதற்கு சுத்தமான இடம்‌ கிடைக்காததால்‌ புறா நோவாவிடம்‌ திரும்பியது.

ஒரு வாரத்திற்கு பின்னர்‌, நோவா மறுபடியும்‌ முயற்சி செய்தான்‌. புறாவானது ஒரு ஒலிவ இலையை தன்னுடைய அலகிலே கொத்திக்‌ கொண்டு வந்தது. அடுத்த வாரம்‌ புறா திரும்ப வராததினாலே, பூமி உலாந்தது என்று நோவா அறிந்து கொண்டான்‌.

தேவன்‌ நோவாவிடத்தில்‌ பேழையை விட நேரம்‌ வந்தது என்றார்‌. நோவாவும்‌, அவன்‌ குடும்பமும்‌ மற்ற பிராணிகளுடன்‌ வெளியே வந்தனர்‌.

நோவா தேவனுக்கு எவ்வளவு நன்றியுள்ளவனாக இருந்திருப்பான்‌. அவன்‌ ஒரு பலிபீடத்தை கட்டி, தேவன்‌‌ தன்னையும்‌, குடும்பத்தையும்‌ பயங்கரமான வெள்ளத்திலிருந்து காப்பாற்றியதற்காக அவரை வழிபட்டான்‌.

தேவன்‌ நோவாவுக்கு அதிசயமான வாக்குத்தத்தை கொடுத்தார்‌. மனிதனுடைய பாவத்தை நியாயம்‌ தீர்ப்பதற்காக இனி ஒரு போதும்‌ வெள்ளத்தை அனுப்ப மாட்டேன்‌ என்று கூறி ஒரு வாக்குத்தத்தை ஞாபகார்த்தமாக கொடுத்தார்‌. தேவனுடைய வாக்குத்தத்தமாக வானவில்‌ காணப்படுகிறது.

வெள்ளத்திற்கு பின்பு நோவாவும்‌, அவனுடைய குடும்பமும்‌ ஒரு புதிய தொடக்கத்தை கண்டனர்‌. அவனுடைய சந்ததியினா்‌ பூமியை திரும்பவும்‌ ஜனங்களாள்‌ நிரப்பினா்‌. உலகத்தின்‌ எல்லா தேசங்களும்‌ நோவா மற்றும்‌, அவனுடைய பிள்ளைகள்‌ மூலமாய்‌ வந்தது.

முற்றும்‌

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

குழந்தைகளுக்கு வேதாகமம்

அது எப்படி ஆரம்பித்தது? நாங்கள் எங்கிருந்து வந்தோம்? உலகில் ஏன் இவ்வளவு துன்பம்? ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா? மரணத்திற்குப் பின் வாழ்ந்தாரா? உலகின் இந்த உண்மையான வரலாற்றைப் படிக்கும்போதே பதில்களைக் கண்டறியவும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய பைபிள் ஃபார் சில்ட்ரன், இன்க்.க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.bibleforchildren.org/languages/tamil/stories.php