குழந்தைகளுக்கு வேதாகமம்மாதிரி
தேவன் சகலத்தையும் உண்டாக்கினார்.தேவன் உண்டாக்கிய முதல் மனிதன்ஆதாம், அவன் மனைவியாகிய ஏவாளுடன், ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்தான். பூரண சந்தோஷத்துடன் தேவனுக்கு கீழ்ப்படிந்து, அவருடைய பிரசன்னத்தில் உல்லாசமாக இருந்தவர்களுக்கு இருநாள்...
"நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ” என்றது சர்ப்பம். ஏவாள் சொன்னாள், "நாங்கள் சகல கனியையும் புசிக்கலாம். ஆனால் ஒன்றை மாத்திரம் புசிக்கக் கூடாது”. "நாங்கள் அதை புஞித்தாலோ, தொட்டாலோ சாவோம் என்றாள்”. "நீங்கள் சாவணில்லை” என்று சர்ப்பம் பொய் சொன்னது. "நீங்கள் தேவனைப் போல மாறுவீர்கள்"என்று சர்ப்பம் சொன்னதினாலே ஏவாள் அந்த விருட்சத்தின் கனியை புசித்தாள். சர்ப்பம் சொன்னதை கேட்டு அந்தக் கனியை புசித்தாள்.
ஏவாள் தேவனுக்கு கீழ்ப்படியாமற்போனது மாத்திரமல்ல ஆதாமுக்கும் சாப்பிட கொடுத்தாள். ஆதாம், "வேண்டாம்", நான் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும்.
ஆதாமும், ஏவாளும் பாவம் செய்தவுடன் தாங்கள் நிர்வாணிகளாய் இருக்கிறோம் என்று அறிந்து கொண்டனர். அத்தியிலையைக் கொண்டு மேல் ஆடை தைத்து தங்களை மூடி, தேவனுடைய சந்நிதிக்கு விலகி தங்களை ஒளித்துக் கொண்டார்கள்.
குளிர்ச்சியான சாயங்கால வேளையில் தேவன் தோட்டத்திற்கு வந்தார். ஆதாமும், ஏவாளும் என்ன செய்திருக்கிறார்கள் என்று அவருக்கு தெரிந்திருந்தது. ஆதாம் ஏவாளை குற்றம் சொன்னான். ஏவாள் சர்ப்பத்தை குற்றம் சொன்னாள். "சர்ப்பம் சபிக்கப்பட்டிருக்கும் மற்றும் மனுஷி பிள்ளை பெறும் போது வேதனைப்படுவாள்" என்று தேவன் சொன்னார்.
"ஆதாமை நோக்கி, நீ பாவம் செய்த படியால், பூமியானது முள்ளும், குருக்கும் முளைப்பிக்கும். ந் வேலை செய்து, வியர்வை சிந்தி உன்னுடைய தினசரி உணவைப் பெறுவாய்".
அற்புதமான தோட்டத்திலிருந்து, ஆதாமையும், ஏவாளையும், தேவன் வெளியேற்றினார். அவர்கள் பாவம் செய்ததினாலே ஜீவன் கொடுக்கிற தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டாகள்.
தேவன் சுடரொளி பட்டயத்தை உருவாக்கி அவர்களை வெளியே வைத்தார். தேவன் தோல் உடைகளை உண்டாக்கி ஆதாமுக்கும், ஏவாளுக்கும் கொடுத்தார். இந்தத் தோல் தேவனுக்கு எப்படி கிடைத்தது?
ஏற்ற காலத்தில் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் ஒரு குடும்பம் உண்டாயிற்று. அவர்களுடைய முதல் குமாரன் காயீன் ஒரு தோட்டக்காரன். அவர்களுடைய இரண்டாவது குமாரன் ஆபேல், ஒரு மேய்ப்பன். ஒரு நாள் காயீன் நிலத்தின் கனிகளை தேவனுக்கு காணிக்கையாக கொண்டு வந்தான். ஆபேல் தன்னுடைய மந்தையில் சிறந்த செம்மறியாடுகளை காணிக்கையாக கொண்டு வந்தான். தேவன் ஆபேலுடைய காணிக்கையிலே பிரியப்பட்டு ஏற்றுக் கொண்டார்.
தேவன் காயீனுடைய காணிக்கையில் பிரியப்படவில்லை. காயீனுக்கு கோபம் வந்தது. தேவன் காயீனைப் பார்த்து கேட்டார், "நீ நன்மை செய்தால் மேன்மையில்லையோ?”
காயீனுடைய கோபம் போகவில்லை. கொஞ்சநேரத்திற்கு பிறகு வயல் வெளியில் இருக்கும் போது காயீன் ஆபேலை கொலை பண்ணினான்.
"உன்னுடைய சகோதரன் ஆபேல் எங்கே” என்று தேவன் காயீனிடத்தில் கேட்டார். "எனக்கு தெரியாது என்று காயீன் பொய் சொன்னான்”. "நான் என் சகோதரனுக்கு காவலாளியோ” என்றான். காயீன் விவசாயம் செய்கிற திறமையை எடுத்து விட்டு அவனை நிலையற்று அலைகிற மனுஷனாய் தேவன் மாற்றினார்.
தேவனுடைய சமூகத்திலிருந்து காயீன் சென்றான். ஆதாமுக்கும், ஏவாளுக்கும் பிறந்த ஒரு குமாரத்தியை விவாகம் செய்து ஒரு குடும்பத்தை உருவாக்கினான். காயீன் உருவாக்கிய பட்டணத்தை காயீனுடைய பேரப்பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளுடைய பிள்ளைகளும் நிரப்பினார்கள்.
இந்த வேளையில், ஆதாம், ஏவாள் குடும்பமும் சீக்கிரமாக வளர்ந்தது. அந்நாட்களில், இந்நாட்களை விட, மக்கள் அதிக நாட்கள் வாழ்ந்தார்கள்.
ஏவாள், சேத் என்ற மகன் பிறந்த போது, "தேவன் ஆபேலுக்கு பதிலாக கொடுத்தார்” என்றாள். சேத், தேவனுக்கு பயந்த மனிதனாக 912 வருடம் வாழ்ந்து அநேக பிள்ளைகளை பெற்றான்.
இந்த உலகத்திலே, ஒரு தலைமுறை மாறி அடுத்த தலைமுறை வரும் போது, மனிதர்கள் மிகவும் கெட்டவர்களாகினார்கள். தேவன், கடைசியாக இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களையும் பிராணிகளையும், பறவைகளையும் அழிக்க திட்டமிட்டார். மனிதனை உருவாக்கியதற்காக தேவன் வருத்தமடைந்தார். ஆனாலும், ஒரு மனிதன் தேவனுக்கு பிரியமுள்ளவனாக இருந்தான்…
அந்த மனிதன் பெயர் நோவா. அவன் சேத்தினுடைய சந்ததியாயிருந்தான். அவன் நீதிமானாயும், குற்றமற்றவனாயும் இருந்தான். அவன் தேவனோடு நடந்தான். தேவனுக்கு கீழ்ப்படிய தன்னுடைய மூன்று குமாரருக்கும் சொல்லிக் கொடுத்தான். இப்போது தேவன் நோவாவை வினோதமான, விசேஷமான முறையில் உபயோகப்படுத்த திட்டமிட்டார்.
முற்றும்
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
அது எப்படி ஆரம்பித்தது? நாங்கள் எங்கிருந்து வந்தோம்? உலகில் ஏன் இவ்வளவு துன்பம்? ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா? மரணத்திற்குப் பின் வாழ்ந்தாரா? உலகின் இந்த உண்மையான வரலாற்றைப் படிக்கும்போதே பதில்களைக் கண்டறியவும்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய பைபிள் ஃபார் சில்ட்ரன், இன்க்.க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.bibleforchildren.org/languages/tamil/stories.php