குழந்தைகளுக்கு வேதாகமம்மாதிரி

குழந்தைகளுக்கு வேதாகமம்

8 ல் 8 நாள்

இந்த வேதாகம கதைகளானது நம்மை படைத்த மற்றும்‌ நீங்கள்‌ அவரை அறிந்து கொள்ள வேண்டுமென்கிற அற்புதமான தேவனைப்‌ பற்றியதாகும்‌.

நாம்‌ அநேக தவறுதல்களைச்‌ செய்திருக்கிறோம்‌ என்று தேவனுக்குத்‌ தெரியும்‌. அவர்‌ அதை பாவம்‌ என்று கூறுகிறார்‌. பாவத்திற்கு தண்டனையோ மரணம்‌ ஆனால்‌ தேவன்‌ நம்மை அதிகமாக நேசிப்பதினாலே, தன்னுடைய சொந்த குமாரனாகிய இயேசுவை அனுப்பி, நம்முடைய பாவங்களுக்காக அவரை சிலுவையில்‌ மரணமடையச்‌ செய்தார்‌. பின்பு இயேசு உயிருடன்‌ எழும்பி பரலோக வீட்டிற்குச்‌ சென்றார்‌. நீங்கள்‌ இயேசுவை விசுவாசித்து, உங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டால்‌ அவர்‌ அதைச் செய்வார்‌. அவர்‌ இன்றே உங்களிடத்தில்‌ வந்து உங்களில்‌ வாசம்‌ பண்ணுவார்‌, நீங்களும்‌ என்றென்றும்‌ அவரோடு வாசம்‌ பண்ணுவீர்கள்‌.

இது உண்மையானது என்று நீங்கள்‌ நம்பினால்‌, பின்வரும்‌ வாக்கியங்களை தேவனிடத்தில்‌ சொல்லலாம்‌. பிரியமுள்ள இயேசு, நீர்‌ தேவனென்று நான்‌ நம்புகிறேன்‌, எனக்காக நீர்‌ மனிதனாக வந்து என்னுடைய பாவங்களுக்கு மரித்து, இப்போது நீர்‌ மறுபடியும்‌ உயிரோடிருக்கிறீர்‌. தயவு செய்து எனக்குள்ளே வாரும்‌, என்னுடைய பாவங்களை மன்னியும்‌, அதினாலே இன்று ஒரு புதிய வாழ்க்கையை நான்‌ பெற்று, ஒரு நாளில்‌ நான்‌ உம்மோடு என்றென்றும்‌ இருக்க உதவி செய்யும்‌. உமக்கு கீழ்ப்படிந்து நடக்க உதவி செய்யும்‌. உம்முடைய பிள்ளையாக உமக்கு கீழ்ப்படிந்து நடக்க உதவி செய்யும்‌. ஆமென்‌.

வேதாகமத்தை தினந்தோறும்‌ வாசித்து தேவனிடம்‌ பேசுங்கள்.‌

நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

குழந்தைகளுக்கு வேதாகமம்

அது எப்படி ஆரம்பித்தது? நாங்கள் எங்கிருந்து வந்தோம்? உலகில் ஏன் இவ்வளவு துன்பம்? ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா? மரணத்திற்குப் பின் வாழ்ந்தாரா? உலகின் இந்த உண்மையான வரலாற்றைப் படிக்கும்போதே பதில்களைக் கண்டறியவும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய பைபிள் ஃபார் சில்ட்ரன், இன்க்.க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.bibleforchildren.org/languages/tamil/stories.php