குழந்தைகளுக்கு வேதாகமம்மாதிரி

குழந்தைகளுக்கு வேதாகமம்

8 ல் 5 நாள்

இயேசு அநேக அற்புதங்களைச்‌ செய்தார்‌. இயேசு உண்மையிலே தேவனுடைய குமாரன்‌ என்று அற்புதங்கள்‌ வெளிப்படுத்தின. முதலாவது அற்புதமானது ஒரு கல்யாண விருந்து நேரத்தில்‌ செயல்‌ படுத்தப்பட்டது. அங்கு ஒரு பிரச்சனை. எல்லோருக்கும்‌ தேவையான அளவு திராட்சரசம்‌ இல்லை.

மரியாள்‌, இயேசுவின்‌ தாய்‌, இந்தப்‌ பிரச்சனையை இயேசுவிடம்‌ தெரிவித்தாள்‌. பின்பு வேலைக்காரர்களைப்‌ பார்த்து அவர்‌ உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ அதின்படி செய்யுங்கள்‌ என்றாள்‌.

"தண்ணீரால்‌ இந்தக்‌ குடங்களை நிரப்புங்கள்‌," என்று இயேசு சொன்னார்‌. "தண்ணீர்‌?" அவர்கள்‌ ஒருவேளை கேட்டிருக்கலாம்‌. ஆம்‌, இயேசு தண்ணீரைத்‌ தான்‌ கேட்டார்‌.

பின்பு இயேசு ஒரு வேலைக்காரனை பார்த்து நீ ஒரு பெரிய குடத்தில்‌ எடுத்து அதை பந்தி விசாரிப்புக்காரனிடத்தில்‌ ருசி பார்க்கச்‌ சொல்‌ என்றார்‌. தண்ணீர்‌ இப்போது திராட்சரசமாக காணப்பட்டது. நல்ல திராட்சரசம்‌! மிகவும்‌ சிறந்த திராட்சரசம்‌!

வேலைக்காரர்கள்‌ ஆச்சரியப்பட்டார்கள்‌. இயேசு தண்ணீரை ரசமாக மாற்றியிருந்தார்‌. தேவன்‌ ஒருவரால்‌ தான்‌ இப்படிப்பட்ட அற்புதங்களைச்‌ செய்ய முடியும்‌.

இயேசு இன்னும்‌ அநேக அற்புதங்களை செய்தார்‌. ஒரு மாலையிலே, இயேசுவும்‌ அவருடைய சீஷர்களும்‌ பேதுருவினுடைய வீட்டிற்க்குச்‌ சென்றார்கள்‌. பேதுருவின்‌ மாமியார்‌ காய்ச்சலினால்‌ வியாதியாய்‌ இருந்தார்கள்‌.

வியாதியாய்‌ இருந்த அந்தப்‌ பெண்ணின்‌ கையை தொட்டார்‌. உடனே அவள்‌ சுகமானாள்‌. அவள்‌ உடனே எழுந்து இயேசுக்கும்‌, அவருடைய சீஷர்களுக்கும்‌ பணிவிடை செய்ய ஆரம்பித்தாள்‌.

அன்று சாயங்காலம்‌ அந்த வீட்டின்‌ முன்னால்‌ அந்தப்‌ பட்டணம்‌ முழுவதும்‌ திறண்டது போலாயிற்று. வியாதியுள்ளவர்களாகிய- குருடர்‌, செவிடர்‌, ஊமைகள்‌, ஊனமுற்றோர்‌ வந்தார்கள்‌. பிசாசு பிடித்தவர்கள்‌ கூட அந்தக்‌ கூட்டத்தின்‌ மத்தியில்‌ இயேசுவிடம்‌ வந்தார்கள்‌. இவ்வளவு பேருக்கும்‌ அவரால்‌ உதவி செய்ய முடியுமா?

இயேசு, தேவ குமாரன்‌, உதவ முடியும்‌. இயேசு உதவி செய்தார்‌. அவர்களிடத்தில்‌ வந்த எல்லோரும்‌ சுகம்‌ பெற்றார்கள்‌. ஊன்றுகோல்‌ பிடித்து தள்ளாடி வந்த மனிதர்கள்‌ இப்போது நடந்தார்கள்‌, ஓடினார்கள்‌ மற்றும்‌ குதித்தார்கள்‌.

அருவருப்பற்ற தோற்றத்துடன்‌ காணப்பட்ட குஷ்டரோகிகள்‌ வந்தார்கள்‌. இயேசு அவர்களை குணமாக்கியதின்‌ மூலம்‌ பூரண சுகம்‌ பெற்றார்கள்‌ .

பிசாசினால்‌ கஷ்டப்படுத்தப்பட்ட ஆண்களும்‌, பெண்களும்‌ இயேசுவின்‌ முன்னால்‌ வந்து நின்றார்கள்‌. அவர்‌ பிசாசுகள்‌ புறப்பட்டுச்‌ செல்லும்படி கட்டளையிட்டார்‌. பிசாசுகள்‌ கீழ்ப்படிந்து பயத்துடன்‌ வெளியேறிய போது சந்தோஷமற்ற மக்கள்‌ சந்தோஷத்துடனும்‌, அமைதியுடனும்‌ காணப்பட்டார்கள்‌.

ஜனக்கூட்டத்திற்குப்‌ பின்னால்‌, நான்கு மனிதர்கள்‌ தங்களுடைய நண்பனுக்கு உதவி செய்து இயேசுவிடம்‌ கொண்டு வந்தனர்‌. ஆனால்‌ அவர்களால்‌ அருகாமையில்‌ வர முடியவில்லை. அவர்கள்‌ என்ன செய்வார்கள்‌.

வீட்டின்‌ மேலே போய்‌ கூரையைப்‌ பிரித்து அந்த மனிதனை இயேசுவின்‌ முன்னால்‌ இறக்கினார்கள்‌. அவன்‌ இப்போது இயேசுவின்‌ அருகில்‌ இருந்தான்‌.

அந்த நான்கு மனிதர்களுக்கும்‌ விசுவாசம்‌ இருந்தது என்று இயேசு கண்டார்‌. அவர்‌ வியாதியுள்ள மனுஷனைக்‌ கண்டு, "உன்னுடைய பாவங்கள்‌ மன்னிக்கப்பட்டன. உன்‌ படுக்கையை எடுத்துக்கொண்டு நட," என்றார்‌. அந்த மனிதன்‌ நலமுடன்‌, திடகாத்திரமாக எழுந்து நின்றான்‌. இயேசு அவனை சுகப்படுத்தி இருந்தார்‌.

அதன்‌, பின்பு இயேசு தன்னுடைய சீஷர்களுடன்‌ படகிலே இருந்தார்‌. அப்போது பயப்படத்தக்க ஒரு பெரிய புயல்‌ காற்று கடலில்‌ வீசத்தொடங்கியது. இயேசு நித்திரை செய்துகொண்டிருந்தார்‌. பயத்துடன்‌ சீஷர்கள்‌ அவரை எழுப்பினார்கள்‌, "பிரபுவே, எங்களை காப்பாற்றும்‌," என்று கதறினார்கள்‌. "நாங்கள்‌ மடிகிறோம்‌!"

"அமைதியாயிருங்கள்‌," என்று இயேசுஅலைகளுக்கு கட்டளையிட்டார்‌. உடனே கடல்‌ அமைதியாயிற்று. "இவர்‌ எப்படிப்பட்ட மணுஷரோ" என்று சீஷர்கள்‌ தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்‌. காற்றும்‌ கடலும்‌ இவருக்கு கீழ்ப்படிகிறதே. அவர்‌ செய்த அற்புதங்கள்‌ தேவனுடைய மகிமையை வெளிப்படுத்தியதினாலே, இயேசு தேவனுடைய குமாரனென்று அவர்கள்‌ நம்பினார்கள்‌. சீஷர்களுக்குத்தெரியவில்லை, அவர்கள்‌ இயேசு செய்யப்போகிற இவைகளிலும்‌ பெரிதான அற்புதங்களை காணப்போகிறார்கள்‌ ஏனெனில்‌ இயேசு தேவனுக்காக மனிதர்களிடம்‌ சேவை செய்தார்‌.

முற்றும்‌

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

குழந்தைகளுக்கு வேதாகமம்

அது எப்படி ஆரம்பித்தது? நாங்கள் எங்கிருந்து வந்தோம்? உலகில் ஏன் இவ்வளவு துன்பம்? ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா? மரணத்திற்குப் பின் வாழ்ந்தாரா? உலகின் இந்த உண்மையான வரலாற்றைப் படிக்கும்போதே பதில்களைக் கண்டறியவும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய பைபிள் ஃபார் சில்ட்ரன், இன்க்.க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.bibleforchildren.org/languages/tamil/stories.php