குழந்தைகளுக்கு வேதாகமம்மாதிரி
அந்த பெண்மணி சத்தம் நிறைந்த மலைப்பகுதியிலே நின்று, துக்கம் நிறைந்த கண்களால் கொடூரமான காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய குமாரன் மரணமடைந்து கொண்டிருக்கிறான். தாயாகிய மரியாள் சிலுவையில் ஆணிகளால் அடிக்கப்படுகிற இயேசுவுக்கு அருகில் நின்று கொண்டிருந்தாள்.
இது எல்லாம் எப்படி நடந்தது? அழகான வாழ்க்கையை இயேசு எப்படி பரிதாபமாக முடிக்க முடியும்? தேவன் எப்படி தன்னுடைய குமாரனை ஆணியினால் சிலுவையில் அடிக்கப்பட்டு மரணமடைய சம்மதிக்கலாம்? தான் யார் என்பதை இயேசு தப்பாக புரிந்து கொண்டாரா? தேவன் தோல்வியுற்றாரா?
இல்லை! தேவன் தோல்வியடையவில்லை. இயேசு எந்த தப்பும் செய்யவில்லை. கெட்ட மனிதர்கள் தன்னை மரணத்திற்குட்படுத்துவார்க ள் என்று இயேசு எப்போதும் அறிந்திருந்தார். இயேசு சிறு குழந்தையாயிருந்த போதே சிமியோன் என்ற முதியவர் துக்கங்கள் உன் முன்னாலே இருக்கிறது என்று மரியாளிடம் சொல்லியிருந்தார்.
இயேசு மரிப்பதற்கு சில நாட்களுக்கு முன், ஒரு பெண்மணி இயேசுவினிட த்தில் வந்து இயேசுவின் பாதத்தில் வாசனை தைலத்தை ஊற்றினாள். இதைப் பார்த்த சீஷர்கள், அவள் பணத்தை வீணடிக்கிறாள், என்று குறை கூறினார்கள். ஆனால் இயேசுவோ, அவள் நற்காரியத்தை செய்கிறாள், அடக்கத்திற்காக செய்தாள் என்று சொன்னார்.
இதற்கு பின்பு, இயேசுவின் பன்னிரண்டு சீஷர்களில் ஒருவனான யூதாஸ் இயேசுவை காட்டிக் கொடுக்க, பிரதான ஆசாரியர்களிடமிருந்து 30 வெள்ளிக்காசை பெற்றான்.
யூதருடைய பஸ்கா பண்டிகையின் போது, இயேசு தன்னுடைய சீஷர்களுடன் கடைசி உணவை அருந்தினார். தேவனைப் பற்றி அற்புதமான காரியங்களையும், அவரை நேசிக்கிறவர்களுக்கு அவரின் வாக்குத்தத்தங்களையும், அவர்களோடு பகிர்ந்து கொண்டார். பின்பு அப்பத்தையும், பாத்திரத்தையும் அவர்கள் பகிர்ந்து கொள்ளும்படி கொடுத்தார். இயேசுவின் சரீரமும், இரத்தமும் அவர்களின் பாவ மன்னிப்புக்காக கொடுக்கப்பட்டது என்று அவர்களுக்கு ஞாபகப்படுத்த இருந்தன.
இயேசு தன்னுடைய நண்பர்களை பார்த்து நான் காட்டிக் கொடுக்கப்படுவேன். நீங்கள் என்னை விட்டு ஓடிப்போவீர்கள் என்று சொன்னார். "நான் ஓடமாட்டேன்" என்று பேதுரு வலியுறுத்தினான். "கோழி கூவுமுன் நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்", என்று இயேசு சொன்னார்.
பின்னர் அந்த இரவிலே, கெத்செமனே தோட்டத்திலே ஜெபம் பண்ணச் சென்றார். அவரோடு இருந்த சீஷர்களோ தூங்கி விட்டார்கள். "ஆ என் தகப்பனே", "இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கச் செய்யும் ஆகிலும் என் சித்தத்தின் படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது”. என்று இயேசு ஜெபம் பண்ணினார்.
திடீரென்று, யூதாஸினாலே வழிநடத்தப்பட்ட ஒரு கூட்டம் தோட்டத்திற்குள் நுழைந்தது. இயேசு எதிர்க்கவில்லை, ஆனால் பேதுருவோ ஒரு மனுஷனுடைய காதை வெட்டினான். அமைதியாக, இயேசு அவனுடைய காதை தொட்டு சுகப்படுத்தினார். தான் கைது செய்யப்படுவது தேவனுடைய சித்தம் தான் என்று இயேசு அறிந்திருந்தார்.
கலகக்காரர் கூட்டம் இயேசுவை பிரதான ஆசாரியனுடைய வீட்டிற்கு அழைத்து சென்றது. அங்கே, யூதத் தலைவர்கள் இயேசு சாகவேண்டும் என்று சொன்னார்கள். வேலைக்காரா் குளிர்காய்ந்து கொண்டிருக்கிற இடத்தின் அருகில் சென்று, பேதுரு என்ன நடக்கிறது என்று கவனித்தான். "நீ இயேசுவோடு இருந்தாய்" என்று ஜனங்கள் மூன்று முறை உற்றுப்பார்த்து சொன்னார்கள். பேதுரு மூன்ற முறை. இயேசுவை மறுதலித்தான். இயேசு சொன்ன பிரகாரம் நடைபெற்றது. பேதுரு சபிக்கவும், சத்தியம் பண்ணவும் தொடங்கினான்.
அந்த வேளையிலே, ஒரு சேவல் கூவியது. பேதுருவுக்கு அது தேவனுடைய வார்த்தை போலிருந்தது. இயேசுவின் வார்த்தையை நினைவு கூர்ந்து, பேதுரு மனங்கசந்து அழுதான்.
யூதாஸ் கூட மனதுக்கமடைந்தான். இயேசு எந்த பாவமும் செய்யவில்லை மற்றும் அவர் குற்றவாளி அல்ல என்று அவனுக்கு தெரிந்திருந்தது. யூகாஸ் தான் பெற்ற 30 வெள்ளிக்காசை திரும்ப கொடுத்தான். ஆனால் ஆசாரியர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. யூகாஸ் பணத்தை கீழே எரிந்துவிட்டு, வெளியே சென்று - நாண்டு கொண்டு செத்தான்.
ஆசாரியர்கள் இயேசுவை ரோம அதிபதியாகிய பிலாத்துவிடம் கொண்டு வந்தார்கள். "நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்", என்று பிலாத்து சொன்னான். கலகக்கார கூட்டம் "சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்!” என்று ஓயாமல் சத்தமிட்டது.
கடைசியாக, பிலாத்து, இயேசுவை அறைந்து மரணம் அடையும்படி, அவர்களுக்கு சம்மதித்தான். போர்ச்சேவகர்கள் அவரை குத்தினார்கள், முகத்திலே துப்பினார்கள், சாட்டையால் அடித்தார்கள். நீள, கூர்மையான முட்களினால் ஒரு கொடூரமான கிரீடத்தை உண்டுபண்ணி அவருடைய தலையிலே வைத்து அழுத்தினார்கள். பின்பு சிலுவை மரத்தில் அவரை ஆணி அடித்து மரணம் அடையச் செய்தார்கள்.
தான் அப்படித்தான் மரணம் அடைவேன் என்று இயேசுவுக்கு தெரியும். தன்னிடத்தில் நம்பிக்கை வைக்கிற பாவிகளுக்கு தன்னுடைய மரணமானது மன்னிப்பை கொடுக்கும் என்றும் அறிந்திருந்தார். அவருடைய பக்கங்களிலே இரண்டு குற்றவாளிகளும் சிலுவையில் அடிக்கப்பட்டிருந்தார்கள். ஒருவன் இயேசுவை நம்பி பரதீசுக்குள் பிரவேசித்தான். மற்றவனோ நம்பவில்லை.
பல மணி நேர பாடுகளுக்கு பிறகு, "எல்லாம் முடிந்தது" என்று இயேசு சொன்ன பின் மரித்தார். அவருடைய வேலையானது முடிவு பெற்றது. அவருடைய நண்பர்கள் தனியாக ஒரு கல்லறையில் அவரை அடக்கம் பண்ணினார்கள்.
பின்பு ரோம சேவகா்கள் முத்திரைபோட்டு, அடைத்து பாதுகாத்துக் கொண்டிருந்தனர். இப்போது யாரும் உள்ளே போகவும் முடியாது. வெளியே வரவும் முடியாது.
இப்படித்தான் கதை முடியும் என்றால் எவ்வளவு துக்கரமானது. ஆனால் தேவன் அற்புதமான காரியம் ஒன்று நடப்பித்தார். இயேசு மரித்தவராக இருந்து விடவில்லை.
வாரத்தின் முதல் நாளிலே, அதிகாலை வேளையிலே, இயேசுவின் நண்பர்கள் பார்த்த போது கல்லறையை அடைத்த கல்லானது அப்புறப்படுத்தபட்டிருந்தது. அவர்கள் உள்ளே பார்த்தபோது, இயேசு அங்கே காணப்படவில்லை.
ஒரு பெண் மாத்திரம் கல்லறையின் அருகாமையில் நின்று கொண்டு அழுதாள். இயேசு அவளுக்கு தரிசனமானார். "இயேசு உயிரோடுயிருக்கிறார். அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார்" என்று மற்ற சீஷர்களுக்கு அறிவிப்பதற்காக சந்தோஷத்துடன் திரும்பிச் சென்றாள்.
உடனே இயேசு தன்னுடைய ஆணிகள் அடிக்கப்பட்ட கரங்களை காண்பித்து சீஷர்களுக்கு தன்னை வெளிப்படுத்தினார். அது உண்மையாக நடைபெற்றது. இயேசு மறுபடியும் உயிருடன் இருக்கிறார். தன்னை மறுதலித்த பேதுருவை மன்னித்தார். அனைவருக்கும் தன்னைக் குறித்து சொல்லும்படி சொன்னார். இதன் பின், இயேசு முதல் கிறிஸ்மஸ் அன்று தான் வந்த இடமாகிய பரலோகத்திற்கு திரும்பிச் சென்றார்.
முற்றும்
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
அது எப்படி ஆரம்பித்தது? நாங்கள் எங்கிருந்து வந்தோம்? உலகில் ஏன் இவ்வளவு துன்பம்? ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா? மரணத்திற்குப் பின் வாழ்ந்தாரா? உலகின் இந்த உண்மையான வரலாற்றைப் படிக்கும்போதே பதில்களைக் கண்டறியவும்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய பைபிள் ஃபார் சில்ட்ரன், இன்க்.க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.bibleforchildren.org/languages/tamil/stories.php