குழந்தைகளுக்கு வேதாகமம்மாதிரி
நீண்ட காலங்களுக்கு முன், தேவன் காபிரியேல் தூதனை யூதேயா தேசத்திலுள்ள ஒரு அழகான இளம் பெண்ணாகிய மரியாளிடம் அனுப்பினார். "நீ ஒரு குமாரனைப் பெறுவாய். அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக உன்னதமானவரின் குமாரன் என்று அவர் அழைக்கப்படுவார். அவர் என்றென்றும் அரசாட்சி செய்வார்”, என்று அவன் கூறினான்.
"இது எப்படியாகும்?” என்று வியப்புடன் அந்தப் பெண் கேட்டாள். "நான் புருஷனை அறியேனே என்றாள்". குழந்தையானது தேவனாலே உண்டாகும். உலகப் பிரகாரமான தந்தை இருக்காது என்று தேவதூதன் கூறினான்.
தேவதூதன் மரியாளிடத்தில் உன் இனத்தாளாகிய எலிசபெத்தும் முதிர்வயதில் கர்ப்பந்தரித்திருக்கிறாள் என்றான். இதுவும் ஒரு அற்புதம் அல்லவா. கொஞ்ச நாட்களுக்கு பின்னர் மரியாள் எலிசபெத்தை சந்தித்தாள். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து தேவனை துதித்தனர்.
யோசேப்பு என்னும் போ் கொண்ட மனிதனை விவாகம் செய்ய மரியாள் நிச்சயிக்கப் பட்டிருந்தாள். மரியாள் குழந்தை உண்டாயிருக்கிறாள் என்று கேள்விப்பட்டு யோசேப்பு துக்கமடைந்தான். வேறுயாராவது தகப்பனாக இருப்பார்களோ என்று அவன் யோசித்தான்.
யோசேப்புக்கு தேவதூதன் கனவிலே தோன்றி பிறக்கப் போகிற குழந்தை தேவனுடைய குமாரன். ஆகையால் மரியாள் இயேசுவை கவனிக்க யோசேப்பு உதவி செய்ய வேண்டும் என்று கூறினான்.
யோசேப்பு தேவனை நம்பி, கீழ்ப்படிந்தான். அவன் தேசத்தின் சட்டத்திற்கு கீழ்ப்படிந்தான். புதிதாக உருவாக்கப்பட்ட சட்டத்தின்படி, வரியை செலுத்துவதற்காக, யோசேப்பு மரியாளை அழைத்துக் கொண்டு, தங்கள் சொந்த ஊரான பெத்லகேமிற்குச் சென்றான்.
மரியாள் பிரசவிப்பற்கு நேரமாயிற்று. ஆனால் தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. சத்திரங்கள் எல்லாம் நிரம்பியிருந்தன.
கடைசியாக யோசேப்பு ஒரு முன்னனையை கண்டுபிடித்தான். அங்கே, குழந்தை இயேசு பிறந்தார். பிராணிகளுக்கு உணவு வைக்கிற இடமான மாட்டுக் கொட்டிலில் குழந்தையை மரியாள் இடத்தினாள்.
அருகாமையிலே, மேய்ப்பர்கள் தூங்குகிற மந்தையை காத்துக் கொண்டிருந்தார்கள். தேவதூதன் அவர்களுக்கு தோன்றி, இந்த அதிசயமான செய்தியை சொன்னான். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையை முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்.
திடீரென்று, அநேக பிரகாசமான தேவதூதர்கள் தோன்றி, "உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக” என்று கூறி தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
மேய்ப்பாகள் மாட்டுக் கொட்டிலிக்கு விரைந்து சென்றார்கள். குழந்தையை கண்ட பின்னர், தேவதூதன் தங்களுக்கு சொன்னதையும் தாங்கள் கண்டதையும் யாவருக்கும் சொன்னார்கள்.
நாற்பது நாட்களுக்கு பின்னர், யோசேப்பும், மரியாளும், இயேசுவை எருசலேம் தேவாலயத்துக்கு கொண்டு வந்தார்கள். அங்கே , சிமியோன் என்ற மனிதன் குழந்தைக்காக தேவனை துதித்தான் மற்றும் அன்னாள் என்ற தேவனுடைய ஊழியக்காரி தேவனுக்கு நன்றி செலுத்தினாள். அவர்கள் இரண்டு பேரும், இயேசு தேவனுடைய குமாரன், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இரட்சகர் என்று அறிந்திருந்தார்கள். யோசேப்பு இரண்டு புறாக்களை பலியாக செலுத்தினான். ஏழை மக்கள் தங்கள் புதிய குழந்தைகளை தேவனுக்கு அர்ப்பணிக்கும் போது இப்படி செய்ய வேண்டுமென்று தேவனுடைய கற்பனை கூறுகிறது.
கொஞ்ச காலத்துக்குப் பின்னர், வானத்திலே ஒரு விசேஷமான நட்சத்திரம் தோன்றி கிழக்கு தேசத்திலே உள்ள ஞானிகளை எருசலேமிக்கு வழி நடத்தியது. "யூதருக்கு இராலாவாக பிறந்திருக்கிறவர் எங்கே? நாங்கள் அவரை வழிபட வேண்டும்" என்று கேட்டார்கள்.
ஏரோது ராஜா சாஸ்திரிகளை பற்றி கேள்விப்பட்டான். கலக்கமுற்றவனாக, "இயேசுவை கண்டால் எனக்கும் சொல்லுங்கள், நானும் அவரை வழி படவேண்டும்" என்று ஏரோது சொன்னான். ஆனால் அவனோ பொய் சொன்னான். ஏரோது இயேசுவை கொலை செய்ய விரும்பினான்.
மரியாளும், யோசேப்பும் இளம் குழந்தையும் இருந்த இடத்திற்கு நட்சத்திரமானது சாஸ்திரிகளை வழி நடத்தியது. பயணிகளான அவர்கள், முழங்காலிட்டு பணிந்து, இயேசுவுக்கு தங்கத்தையும், பரிமளத்தையும் காணிக்கையாக கொடுத்தனர்.
சாஸ்திரிகள் இரகசியமாக தங்களுடைய வீடுகளுக்கு திரும்ப தேவன் விரும்பினார். ஏரோது கடும் கோபம் கொண்டான். இயேசுவை கொலை செய்ய திட்டம் பண்ணி, பெத்லேகேமில் உள்ள இரண்டு வயதிற்கு உட்பட்ட எல்லா ஆண் குழந்தைகளையும் கொலை செய்தான்.
ஆனால் ஏரோதுவால் தேவனுடைய குமாரனை அழிக்க முடியவில்லை. யோசேப்பு கனவிலே எச்சரிக்கப்பட்டு, மரியாளையும், குழந்தையையும் பாதுகாப்பிற்காக எகிப்திற்கு அழைத்து சென்றான்.
ஏரோது இறந்த பின்னர், யோசேப்பு மரியாளையும், இயேசுவையும் எகிப்திலிருந்து திரும்ப அழைத்து வந்தான். கலிலேயா கடற்கரை அருகில் உள்ள நாசரேத் என்னும் சிறிய ஊரில் வசித்தார்கள்.
முற்றும்
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
அது எப்படி ஆரம்பித்தது? நாங்கள் எங்கிருந்து வந்தோம்? உலகில் ஏன் இவ்வளவு துன்பம்? ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா? மரணத்திற்குப் பின் வாழ்ந்தாரா? உலகின் இந்த உண்மையான வரலாற்றைப் படிக்கும்போதே பதில்களைக் கண்டறியவும்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய பைபிள் ஃபார் சில்ட்ரன், இன்க்.க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.bibleforchildren.org/languages/tamil/stories.php