ஆத்தும பரிசுத்தம்மாதிரி
எபிரெயர் 3 நம் சிந்தனைகளை இயேசுவின் மேல் வைக்க ஊக்குவிக்கிறது; அனால் அவரிடமிருந்து நம் சிந்தனைகளை அபகரிக்க அனேக நச்சுத்தன்மை நிறைந்த காரியங்கள் முயற்ச்சிக்கும் போது, அது கடினமாக இருக்கக் கூடும். தாக்கங்கள், உறவுகள், மற்றும் வார்த்தைகள் போன்ற சில நச்சுத்தன்மை கொண்ட காரியங்களால் நம் சிந்தனைகள் எளிதாக பாதிக்கக் கூடும். உங்கள் வாழ்க்கையை கறைப்படுத்தும் நச்சுத்தன்மை நிறைந்த காரியங்களை அடைத்து அவற்றை களைந்து, அதற்கு மாறாக இயேசுவின் மேல் உங்கள் சிந்தனைகள் பதிக்க முற்படுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள நஞ்சுகளை வடிக்கட்டுவதில் அவர் மீது உங்கள் சிந்தனைகளை பதிப்பது மிக முக்கியமானது.
நச்சுத்தன்மை நிறைந்த காரியங்களுக்கு மாறாக உண்மையானவைகளிலும் நல்லவைகளிலும் உங்கள் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தும் போது உங்கள் வாழ்க்கை எப்படி வித்தியாசமாக இருக்கிறது?
நச்சுத்தன்மை நிறைந்த காரியங்களுக்கு மாறாக உண்மையானவைகளிலும் நல்லவைகளிலும் உங்கள் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தும் போது உங்கள் வாழ்க்கை எப்படி வித்தியாசமாக இருக்கிறது?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.