யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள் மாதிரி
தம்முடைய சீடர்களிடமிருந்து (நம்மிடமிருந்து) அவர் எதிர்நோக்குவது என்ன என்று சொல்கிறார். நம் வாழ்வை தன்னலமற்றும் தாராளமாகவும் பிறர்க்கென வழங்க வேண்டுகிறார். அவர் தற்போது கொடுக்கும் புதிய கட்டளை முன்பு அவர் சொன்ன பரஸ்பர பாத சுத்தி என்ற பணியாற்றுதலின் (13:14) தொடர்சிதான். பணி அன்பை வளர்க்குமா அல்லது அன்பு பணியைத் தூண்டுமா? இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் இயேசு தன்னை மேற்கோளாகவும் அளவுகோலாகவும் முன்னிலைப்படுத்துகிறார்: “நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல” (13:34) மற்றும் “நான் உங்களுக்கு செய்ததுபோல” (13:15) என்பதுதான் அவர் கூற்று. நாம் ஆற்றும் அன்பின் பணி அதை ஏற்பவர்களுக்குப் பயனுடையது மட்டுமல்ல அதைக் காண்பவர்கள் மனதிலே ”பணியாற்றும் நாம் இயேசுவுக்குச் சொந்தமானவர்கள்” என்ற வலுவான தாக்கத்தையும் ஏற்படுத்த வல்லது.
அன்பு தங்கை, தம்பி! “இப்படித்தான் இயேசு என்னை நேசித்தார்” என்று சொல்லக்கூடிய சந்தர்ப்பங்களை நினைவுபடுத்து. இயேசு நேசித்த்துபோல நேசிப்பது எளிது என்று நினைக்கிறாயா? நீ நேசிக்க முடியாத ஒருவரை நினைத்துப்பார். இயேசுவின் அன்பை அவருக்குக் காட்ட இந்த லெந்து நாட்களில் நீ என்ன செய்யக்கூடும்?
ஜெபம்:
நேசிக்க எனக்குக் கற்பித்த இயேசுவே, உம்முடைய அன்புக்கு நான் பாத்திரன் அல்ல. ஆனாலும் நீர் என்னை நேசித்தீர். தகுதியற்றவர்களையும் நேசிக்கத் தேவையான மனத்தாழ்மையையும் பொறுமையையும் எனக்குத் தாரும்.
இயேசுவின் பதில்…….
என் குழந்தாய், நீ என் செல்லப்பிள்ளை; உன்னைத் தகுதியற்ற குழந்தையாக நான் எண்ணியதே இல்ல. இதுதான் அன்புகூர்வதின் இரகசியம்: அன்புக்குத் தகுதியற்றவரை ஆண்டவரின் பிள்ளையாகக் கருது. அவர் எனக்கு அன்பானவர் என்பதை மறந்துவிடாதே. என்னோடு இணைந்து அவரை நேசிப்பது மிகவும் எளிது. வா, சற்று முயன்றுதான் பாரேன்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள். எளிய நடைமுறை செய்தியும். சிறு ஜெபமும். இயேசு நம்மிடம் பேசினால் என்ன சொல்வார் என்ற ஒரு வாக்கியமும் இருக்கின்றன.
More
இந்த திட்டத்தை வழங்கிய பிஷப் ஜேம்ஸ் சீனிவாசனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://yaway.org