யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள் மாதிரி

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

17 ல் 17 நாள்

சிலுவையின் கோரமான நிழல் சீடர்களின்மேல் படர்கிற வேளையில், அவர்களுடைய பற்றுறுதி குலைந்துவிடாதபடி இயேசு தமது இதமான முடிவுரையை கனிவுடன் பேசுகிறார். அவர் வேளை வந்தது. பேசுவதற்கு அதிக நேரமில்லை. அந்தகார உலக அதிபதி வரும் வேளை. இருளுக்கு இயேசுவின்மேல் அதிகாரம் ஏதுமில்லை. ஆயினும் பிதாவின்மேல் அவர் கொண்ட அன்பின் நிமித்தம் உலகத்தின் ஒளியான இயேசு தமது வாழ்வை தானாக மனமுவந்து அர்ப்பணிக்கிறார். ஒருவரும் அதை அவரிடமிருந்து பறிக்க முடியாது. சிலுவை தோற்கவில்லை. அன்பும் கீழ்ப்படிதலும் வெற்றிகரமாக வெளிப்படுத்தப்பட்டதுதான் சிலுவை. இயேசு பல முறை பிதாவின் அன்பில் தான் திளைத்தது பற்றி சொல்லியிருக்கிறார். இங்குமட்டும்தான் தன்னுடைய அன்பை குறிப்பிடும் வண்ணம் (14:31) “நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன்” என்று சொல்கிறார். அவர் வாழ்வு பிதாவுக்கு அவர் அளித்த அன்பின் கானிக்கை. 

அன்பு தங்கை, தம்பி! இயேசுவின் வலி, வேதனை, அவமானம், துன்பம் அனைத்தும் நலமானதுதான் என்பாயா? கடவுளுக்கு உன்னுடைய அன்பின் காணிக்கையாக என்ன கொடுப்பாய்?

ஜெபம்:

இயேசுவே, என் ஜீவ ஒளியே, எனக்காக நீர் செய்த தியாகமும் சகித்த துன்பமும் எவ்வளவு பெரியது! அன்பினாலே விட்டுக்கொடுப்பதினால் பெறும் வெற்றியை எனக்கு வெளிப்படுத்தும்

இயேசுவின் பதில்…

என் குழந்தாய், என் பிதாவை நான் நேசிக்கும் அளவுக்கு நான் உன்னையும் நேசிக்கிறேன். நான் சிலுவையை ஏற்றது பிதாவின் சித்தத்திற்கு கீழ்ப்படியவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல; உன்மேல் கொண்ட அன்பினாலும் கூடத்தான். என் சிலுவையின் வெற்றியே உன்னுடய மீட்புதானே.


வேதவசனங்கள்

நாள் 16

இந்த திட்டத்தைப் பற்றி

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள். எளிய நடைமுறை செய்தியும். சிறு ஜெபமும். இயேசு நம்மிடம் பேசினால் என்ன சொல்வார் என்ற ஒரு வாக்கியமும் இருக்கின்றன.

More

இந்த திட்டத்தை வழங்கிய பிஷப் ஜேம்ஸ் சீனிவாசனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://yaway.org