யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள் மாதிரி

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

17 ல் 9 நாள்

தோமாவுக்கு ஒரு சந்தேகம்: “எங்கே போகிறீர்? நாங்க எப்படி வருவது, வழி தெரியாதே!” என்றான். அவனுக்கு இயேசு தன்னையே பதிலாக சொல்லுகிறார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.”  இயேசுவே பாதைக் குறிப்பேடு – வழி; அவரே இந்தப் பயணத்தின் இலக்கு- சத்தியம்; பயணிப்பவருக்கு உந்தமும் ஊக்கமும் அளிக்கும் ஆவியும் அவரே – ஜீவன்! மேலும் இயேசு ”நானே சத்தியம்” என்பதற்கு ”இயேசுவை அறிவதே பிதாவை அறிவது” என்று கூடுதல் விளக்கமும் அளிக்கிறார்: 

அன்பு தங்கை, தம்பி! இயேசுவை நீ அறிவாயா? அவரே நல்வழி; உன்னுடைய ”லைஃப் ஸ்டைல்” அவர்தான். பிதாவை, அதாவது சத்தியத்தை இயேசுவில் கண்டாயா? உன்னைத் திடப்படுத்தும் இயேசுவின் ஆவியை அனுபவித்தாயா? – அவரை மேலும் தெரிந்துகொள்ள அவருடைய வாழ்க்கை சரிதையை – நற்செய்தி நூல்களைப் படி, அவருடன் பேசு – ஜெபி. அவரை உன் நேசராகக் கண்டுகொள்! ஆலோசனை வேண்டுமானால் உன் ஆயரை அணுகு.

ஜெபம்: 

இயேசு இரட்சகரே, “வழியும் சத்தியமும் ஜீவனும்” நீர் என்று நான் அறிவேன். உம்மை மேலும் அதிகமாகப் புரிந்துகொள்ள எனக்கு உதவியருளும்; பிதாவினிடத்திற்கு என்னை வழிநடத்தும். உம்மை நான் தெளிவாகப் புரிந்துகொண்டால் உம்மைப்பற்றி மற்றவர்களுக்கும் சொல்லுவேனே. 

இயேசுவின் பதில்…….

என் குழந்தாய், என்னோடு நடக்க உனக்கிருக்கும் ஆர்வத்தைக் கேட்டு மகிழ்கிறேன். ஓரடி மட்டும் எடுத்து வை; உன்னை ஆன்மீகப் புரிதலுக்குள் சத்தியமாகிய நம் பிதாவை நோக்கி படிப்படியாக வழி நடத்துவேன். வா, என் கையைப் பிடித்துக்கொள்.


வேதவசனங்கள்

நாள் 8நாள் 10

இந்த திட்டத்தைப் பற்றி

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள். எளிய நடைமுறை செய்தியும். சிறு ஜெபமும். இயேசு நம்மிடம் பேசினால் என்ன சொல்வார் என்ற ஒரு வாக்கியமும் இருக்கின்றன.

More

இந்த திட்டத்தை வழங்கிய பிஷப் ஜேம்ஸ் சீனிவாசனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://yaway.org