யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள் மாதிரி

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

17 ல் 8 நாள்

காட்டிக்கொடுக்கப்போகும் யூதாஸினாலும் (13:21), மறுதலிக்கப்போகும் பேதுருவினாலும்(13:38) இயேசு ஆவியிலே கலங்கினார். ஆயினும் தம் துயரத்தை மறந்து தமது சீடரை ஆறுதல்படுத்துகிறார். இரண்டு விசுவாசப் பாதைகளைக் காட்டுகிறார், ”தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.” அவருடைய நம்பிக்கையைப் பகிர்ந்து, அவருடன் இணைந்து தேவனை விசுவாசிக்க அழைக்கிறார். மேலும் சீடருக்குத் தம்மை உருவுடையவராகவும், உறவாடுகிறவராகவும் காட்டி தன்னிடத்திலும் விசுவாசமாயிருந்து துன்புறும் வேளையில் ஆறுதல் பெற அழைக்கிறார்.  உன்னதமான ஓர் எதிர்நோக்கு பற்றிய நம்பிக்கை அளிக்கிறார். சிறப்பாக ஏற்க வேண்டியது என்னவென்றால் இயேசு வந்து நம்மைத் தம்மோடு இருக்கும்படி அழைத்துச் செல்வார் என்ற வாக்குறுதிதான்.  

அன்பு தங்கை, தம்பி! இந்த வசனங்கள் இயேசுவைப் பற்றி உனக்கு என்ன சொல்லுகிறது? (1. நம்பத்தக்கவர், 2.ஆயத்தம் செய்யப் போகிறவர், 3. அழைத்துக் கொள்ள வருபவர்) உனக்கு ஏதேனும் பயங்கள் உண்டா? கவலைப்படாதே, அவைகளைப்பற்றி அவருக்கு முன்னமே தெரியும். குழப்பத்திலும் பயத்திலும் இருக்கும் உனக்கு அவர் ஆறுதல் அளிக்க வல்லவர்.  

ஜெபம்: 

ஆறுதலளிக்கும் என் இயேசுவே, உம்மை மறந்து எனக்காகக் கரிசனை கொள்கிறீரே.  தன்னலமற்ற உமது அன்புக்காக தோத்திரம். என்னுடைய ஐயங்களையும் அச்சங்களையும் அகற்றும். உமது உறவில் நித்திய காலமாய் நிலைத்திருப்பேன் என்ற நம்பிக்கையை நான் விடாமல் பற்றிக்கொள்வேன். 

இயேசுவின் பதில்…….

என் குழந்தாய்! நீ என் செல்ல ஆட்டுக்குட்டி. என் உயிரைக் கொடுத்தாவது உன் நலம் பேணுவது எனக்குப் பெருமகிழ்சி. என் மந்தையின் பாதுகாப்பில் நீ என்றும் மகிழ்ந்திரு 


வேதவசனங்கள்

நாள் 7நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள். எளிய நடைமுறை செய்தியும். சிறு ஜெபமும். இயேசு நம்மிடம் பேசினால் என்ன சொல்வார் என்ற ஒரு வாக்கியமும் இருக்கின்றன.

More

இந்த திட்டத்தை வழங்கிய பிஷப் ஜேம்ஸ் சீனிவாசனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://yaway.org