யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள் மாதிரி
நமது கிறிஸ்தவ வாழ்வு மற்றும் ஜெபத்தின் உயர்வான நோக்கம் பிதாவைக் குமாரனில் மகிமைப்படுத்துவதுதான். 12ம் வசனத்தில் இயேசு, “ நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியால் நீ என் நிலைமையிலிருந்து என்னைப்போல வாழ்ந்து பிதாவை மகிமைப்படுத்து” என்று கூருகிறார். தம்முடைய உடலாகிய திருச்சபைக்கான அவருடைய அழைப்பு இதுதான். இயேசு செய்ததுபோல அற்புதங்களைச் செய்வதை மட்டும் இது குறிக்குமா அல்லது அன்புகூர்தல், பணியாற்றுதல் போன்ற இயேசுவின் மற்ற நற்செயல்களையும் இது குறிக்குமா? “என்ன கேட்டாலும் செய்வேன்” என்று சொல்லும் இயேசுவிடம் நாம் என்ன கேட்கப் போகிறோம்? பிதாவை மகிமைப்படுத்துவதுதான் ஜெபத்தின் நோக்கம் என்றால் (வச 13) நாம் எப்படி மாற்றி ஜெபிக்க வேண்டும்?
எனக்கு பிரியமான தங்கை/தம்பி! நீ எதற்காக ஜெபிக்கப் போகிறாய்? உன்னுடைய தேவைகளைப் பூர்த்திசெய்யவா அல்லது கடவுளை மகிமைப்படுத்தவா? ”இயேசுவின் நாமத்தினால்” ஜெபிப்பது என்றால் என்ன? இயேசு விரும்புகிறதை அல்லது அனுமதிக்கிறதை மட்டும் கேட்பதா? நீ ஜெபிப்பதற்குமுன் இயேசுவைப் போல் சிந்திக்கப் பழகு!
ஜெபம்:
ஜெபிக்கக் கற்றுத்தந்த இயேசுவே, உம்முடைய மன நோக்கை எனக்கருளி, உம்மைப்போல யோசிக்கவும், நேசிக்கவும் உம்மைப்போல ஜெபிக்கவும் என்னைப் பழக்குவியும்.
இயேசுவின் பதில்…….
என் குழந்தாய், ஜெபத்திலே நீ என்னுடனோ அல்லது என் வழியாகப் பிதாவினிடமோ பேசுகிறாய். நீ ஜெபிக்கையில் நான் உன்னுடனே இருக்கிறேன். உன்னையும் உன் கரிசனைகளையும் உன்னைவிட அதிகமாக நான் அறிவேன். என்னுடைய கரிசனைகள் அனைத்திற்காகவும் ஜெபிக்க மறந்துவிடாதே.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள். எளிய நடைமுறை செய்தியும். சிறு ஜெபமும். இயேசு நம்மிடம் பேசினால் என்ன சொல்வார் என்ற ஒரு வாக்கியமும் இருக்கின்றன.
More
இந்த திட்டத்தை வழங்கிய பிஷப் ஜேம்ஸ் சீனிவாசனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://yaway.org