யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள் மாதிரி

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

17 ல் 7 நாள்

அன்பினால் ஆற்றும் பணி பற்றி இயேசு போதித்துக்கொண்டிருக்க, அதைக் கவனியாமல் பேதுரு முன்னதாக இயேசு சொன்னதையே (13:33) நினைத்து குழம்புகிறான். தன்னுடைய ஆன்மீகத் துணிச்சலைக் காட்டும்வண்ணம் இயேசுவை அப்பொழுதே பின்பற்ற தான் தகுதியுள்ளவன் எனக் கூறுகிறான். இயேசுவின் பதில் பேதுருவுக்குச் சொன்ன செய்தி என்ன? 

தங்கை, தம்பி! உன்னுடைய கிறிஸ்தவ வாழ்விலே நீ காத்திருப்பதற்குப் பொறுமை இழக்கும் வேளைகள் எவை? சொல்லப்போனால் இயேசுவைப் பின்பற்றுவது அவ்வளவு எளிதல்ல; உன்னுடைய சுய பெலனாலே அதைச் செய்ய முடியாது. கிறிஸ்துவுக்கு நீ தரும் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆவியானவரின் துணை உனக்குத் தேவை என்பதை நீ உணருவாயா? 

ஜெபம்:

இரக்கமுள்ள இயேசுவே, என் பொறுமையின்மையையும் கவனக்குறைவையும் மன்னியும். என் பெலவீனங்களைக் காண என் கண்களைத் திறந்தருளும். என்னை பெலப்படுத்த உம் தூய ஆவியால் துணைபுரியும்.  

இயேசுவின் பதில்……. 

என் குழந்தாய், அருகில் வா. அமர்ந்து பொறுமையாய் நான் சொல்வதைக் கவனி. உன்னுடைய ஆர்வத்தையும், இயலாமையையும் நான் அறிவேன். நான் உன்னைக் கரம்பிடித்து நிதானமாக வழி நடத்துவேன். 


வேதவசனங்கள்

நாள் 6நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள். எளிய நடைமுறை செய்தியும். சிறு ஜெபமும். இயேசு நம்மிடம் பேசினால் என்ன சொல்வார் என்ற ஒரு வாக்கியமும் இருக்கின்றன.

More

இந்த திட்டத்தை வழங்கிய பிஷப் ஜேம்ஸ் சீனிவாசனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://yaway.org