யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள் மாதிரி
இயேசுவின் வியத்தகு அன்பு யூதாஸின் மீட்புக்காக ஊற்றப்பட்டது. ஆனால் அவன் மனம் மாறவில்லை. இயேசு தனது தியாக அன்பினாலே நம் மீட்புக்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்து பிதாவின் சித்தத்தை நிறைவு செய்கிறார். அவரும் பிதாவும் மகிமைப்படும் வேளையும் இதுதான். நிலத்திலே விழுந்து மரிக்கும் கோதுமை மணியின் மகிமைக்குத் தன் மரணத்தை 12:23:24 வசனங்களில் ஒப்பிடுகிறார். தமது சீடர்களிடம் பிரியா விடை பெறும் வேளையும் இதுதான். ஒரு தாயின் அன்புடன் இயேசு சீடரை “பிள்ளைகளே” (குழந்தைகளே) என்று அழைக்கிறார். இயேசு இப்பொழுது சொல்வது 7:33-34ல் யூதருக்குச் சொன்ன ”நான் போகிறேன்; அங்கே நீங்கள் வர இயலாது” என்ற செய்திதான். ஆனாலும், 7:34ல் “என்னைக் காணமாட்டீர்கள்” என்று யூதருக்குச் சொன்ன வார்த்தைகளைச் சீடருக்குச் சொல்லாமல் விடுத்தது மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையைச் சீடர்களுக்குக் கொடுக்கிறது.
அன்பு தங்கை, தம்பி! ”நான் போகிறேன்; நீ என்னைப் பின் தொடர முடியாது.” என்று இயேசு சொன்னால் நீ என்ன செய்வாய்? அவரை விடாமல் கட்டிப்பிடித்துக் கொள்வாயா அல்லது அகிலவுலக நன்மைக்காக அவரை விட்டுக்கொடுப்பாயா? “குழந்தாய்” என்று அவர் உன்னை அழைத்தபொழுது முத்தத்துடன் விடைபெறும் ஒரு தாயின் அன்பை உணர்ந்தாயா?
ஜெபம்:
என் நேசர் இயேசுவே, உமது அன்பின் மென்மையை நான் உணருகிறேன். மரிப்பதின் வழியாக மகிமை பெறுவதின் தீர்மானத்தை நான் புரிந்துகொள்கிறேன். உமது மகிமையிலே எனக்கும் பங்குண்டு. உமது மரணத்தினோலேதானே நான் நித்திய வாழ்வு பெற்றேன்!
இயேசுவின் பதில்…….
என் குழந்தாய், நீதான் என் மகிமையின் கிரீடம், என் இதயத்தின் மகிழ்சி. தன்னலமற்ற வாழ்க்கையின் மேன்மையைக் கண்டுகொள்ள என்னோடு நடந்து வா பார்ப்போம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள். எளிய நடைமுறை செய்தியும். சிறு ஜெபமும். இயேசு நம்மிடம் பேசினால் என்ன சொல்வார் என்ற ஒரு வாக்கியமும் இருக்கின்றன.
More
இந்த திட்டத்தை வழங்கிய பிஷப் ஜேம்ஸ் சீனிவாசனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://yaway.org