கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்மாதிரி
பிரச்சனைகள் பெரிதாகத் தோன்றும் போது
எல் எல்யோன் என்பதற்கான பொருள், “மிக உயர்ந்த தேவன்” என்பதாகும். இது தேவனை அண்ட சராசரங்களையும்படைத்தவராகவும் பாதுகாப்பவராகவும் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு நபருக்கும், அதிகாரத்துக்கும், பதவிக்கும்,பிரச்சனைக்கும் மேலாக இருப்பவராக ஒப்புக் கொள்கிறது. ஆகவே ஆசாப் தேவனை எல்யோன் என்று சங்கீதம் 77:10 இல் குறிப்பிடும் போது, ஒரு வலிமையான அறிக்கையை வெளியிடுகிறார். கானானியர்கள் நம்பிய கடவுளர்களைப்போல உள்ளூரையும் இயற்கையின் ஆற்றல்களையும் மட்டும் ஆளுகிறவராக அல்ல தேவன் என்று தனக்குத் தானேநினைவுபடுத்திக் கொள்கிறார். ஆசாப் தன் மனதை ஒரு புதிய, உண்மையான கண்ணோட்டத்துக்குப் பயிற்றுவிக்கிறார். இது தேவனது மேலான செயல்களையும் அவரது வழிகளையும் பற்றிய புரிதலினால் ஏற்பட்டதாகும்.
ஆசாப் இத்துடன் நிறுத்தவில்லை. அவர் அற்புதங்களை நடத்துகிற தேவன் என்று நினைத்துப் பார்க்கிறார்(வசனம் 14). அவர் தேவனின் வல்லமையுள்ள கரத்தை சித்தரிக்கிறார் (வசனம் 15). தேவ மக்கள் தேவையுடன் இருந்தபோதெல்லாம் அவர் வந்து உதவிய தருணங்களை நினைவுபடுத்திப் பார்க்கிறார். எவ்வாறு தண்ணீர் பிரிந்தது, வானக்கள் இடிமுழக்கம் செய்தன, பூமி குலுங்கியது என்கிறார் (வசனங்கள் 16-18). தேவனைப் பற்றிய அடிப்படைஉண்மைகளுக்குத் தன் சிந்தனையைக் கொண்டு வருகிறார்: அவரது பரிசுத்தம், வல்லமை, அன்பு, மீட்பதற்காக அவரைத்தூண்டும் மனதுருக்கம். அவரது மன அழுத்தத்தின் ஆழத்தில், ஆசாப் தீர்மானமாகத் தன் மனதை தேவன் மீதுபதியவைக்கிறார். தன் மக்களை வெளியே தூக்கி எடுக்கின்ற தேவன் மீதே தன் மனதை வைக்கிறார். அவருக்கு எதுவுமேகடினமானது அல்ல.
நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது, சிறு திட்டுக்கள் கூட மலைகளைப் போல தோன்றும். நீங்கள்ஆராதனையில் நிலைத்திருக்கும் போது, இந்த திட்டுகள் தங்கள் உண்மையான அளவுக்கு சுருங்கிப் போய்விடும். கர்த்தர்அவற்றுக்கு மேலாக பெரியவராக உங்கள் மனதிலும் இதயத்திலும் நின்று கொண்டிருப்பார். நமது கண்ணோடம் பெரும்வித்தியாசத்தை உருவாக்குகின்றது. கண்ணுக்கு வெகு அருகில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறு பிரச்சனையானது நம்பார்வையிலிருந்து மற்றவை அனைத்தையும் மறைத்துவிடும். நீங்கள் வேறு எதைப் பார்த்தாலும் அவற்றை பிரச்சனைஎன்னும் கண்ணாடியின் வழியாகத் தான் பார்க்கிறீர்கள். சிறிது பின்னாகச் சென்று சரியான கண்ணோட்டத்தில்பார்ப்பது எப்படி என்று ஆசாப் விளக்குகிறார். மன அழுத்தத்துக்கு மிக ஆற்றலுள்ள மருந்து நம்பிக்கை ஆகும். ஆனால்தேவன் பெரியவர், ஒப்பிடும் போது பிரச்சனைகள் மிகவும் சிறியவைகள் என்பதை நீங்கள் மறு கண்டுபிடிப்பு செய்யும்வரை அதை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியாது.
சங்கீதம் 77 பெரிய பிரச்சனைகளுடனுன் சிறிய தேவனுடனும் துவங்குகிறது. அது மாபெரும் தேவனுடனும் மிகச்சிறிய பிரச்சனையுடனும் முடிவடைகிறது. இப்படித் தான் கண்ணோட்டமானது வேலை செய்கிறது. இவ்வாறு தான்நம்பிக்கையானது மீண்டும் தூண்டி விடப்படுகிறது. இவ்வாறு தான் மன அழுத்தம் தன் ஆற்றலை இழக்கிறது. நாம்தேவன் யார் என்பதைக் காணும் போது, நம் மிக மோசமான பிரச்சனைகள், வேதனைகள் உட்பட அனைத்துமே,தேவனுக்கு முன் தலை வணங்குகின்றன.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நீங்கள் வேதனைப்படும் போது கர்த்தர் எங்கே இருக்கிறார்? நீங்கள் பிரச்சனையில் இருக்கும் போது அவரை அனுபவிப்பது எப்படி? குழப்பத்தையும் பயத்தையும் அவர் தெளிவாகவும் சமாதானமாகவும் அவர் எப்படி மாற்றுகிறார்? சங்கீதங்களில் பல பிரச்சனைகளில் துவங்கி கர்த்தரின் பிரசன்னம், வல்லமை மற்றும் வழங்கலில் முடிகின்றன. அவற்றின் சத்தியங்களைக் கற்று, அவற்றின் உதாரணங்களைப் பின்பற்றுவதன் மூலம், நமக்கும் அதைப் போன்ற சாட்சிகள் கிடைக்கின்றன. எப்போது அதிகம் தேவையாக இருக்கிறதோ அப்போது கர்த்தரைக் கண்டு கொள்வோம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://livingontheedge.org/