கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்மாதிரி

குழப்பத்தின் நேரங்களில்
வின்ஸ் லம்பார்டி என்னும் கால்பந்து விளையாட்டுப் பயிற்றுனர் அடிப்படைக்காக அதிகவும் பிரபலமானவர் ஆவார். ஒவ்வொரு கால்பந்து விளையாட்டு காலத்திலும் அவர் ஒரு கால்பந்தைத் தன் கைகளில் தூக்கிப் பிடித்துக் கொண்டுஅவரது குழுவினரிடம் இப்படிச் சொல்லி தான் துவங்குவார், “பண்பாளர்களே, இது தான் கால்பந்து.” பின்னர் அடுத்தஇரண்டு வாரங்களுக்கும் பந்தைத் தடுப்பதும், நழுவிச் செல்வதும் பற்றி மட்டுமே கற்றுக் கொண்டிருப்பார்கள்.
குழப்பத்தின் நேரங்களில் நாம் சென்று கொண்டிருக்கும் போது சில நேரங்களில் நமக்கு இருக்கும் தீர்வானதுஅடிப்படைகளுக்குத் திரும்புவதே ஆகும். கர்த்தர் ஆலோசனைக்காரர்களை, பயிற்சியாளர்களை, நிபுணர்களை என்ஊழியத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பயன்படுத்தி, சிக்கலாகவும், மூழ்கடிப்பதாகவும் அமைந்த சூழ்நிலைகளில்எனக்கு தெளிவைக் கொடுத்திருக்கிறார். நம் அனைவருக்குமே, நாம் இப்போது எங்கே இருக்கிறோம் என்றும் எங்கேபோக வேண்டும், எப்படி அங்கே போக வேண்டும் என்றும் அறிந்து கொள்ள ஞானமும், பகுத்தறிவும் குழப்பமானசூழ்நிலைகளில் தேவையாக இருக்கிறது.
90 ஆம் சங்கீதத்தில் மோசேயின் சொற்கள் அப்படிப்பட்ட ஆலோசனையைத் தான் நமக்குக் கொடுக்கின்றன. அவர் நம்மை அடிப்படை உண்மைகளுக்கு மீண்டும் நடத்திச் செல்கிறார். அவர் தேவ மக்களை எகிப்திலிருந்துவனாந்தரத்தின் வழியாக வாக்குத்தத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டின் எல்லை வரைக்கும் அழைத்துச் செல்லும் போது பலகளைப்பான, விளிம்பு நிலை சூழல்களுக்குச் சென்றார். அவர் இங்கே ஞானமுள்ள வாழ்க்கைக்கான ஆறு விதிகளைசுருக்கமாகக் கொடுக்கிறார்: கர்த்தர் பெரியவர் (வசனங்கள் 1-2), வாழ்க்கை குறுகியது (வசனங்கள் 3-6), பாவம்தீவிரமானது (வசனங்கள் 7-11), ஞானம் தேவையானது (வசனம் 12), இரக்கம் கிடைக்கிறது (வசனங்கள் 13-15), வெற்றிசாத்தியமானது (வசனங்கள் 16-17). இந்த விதிகளின் மறைமுகமான விளைவானது, நீண்ட காலத்துக்கும் வாழ்க்கையைமாற்றுவதற்கும் உரியது. கர்த்தர் பெரியவர் என்றால், அவருடன் சரியாக உறவாடுவது என்பது முதலாவதுமுக்கியமானதாகும். வாழ்க்கை குறுகியது என்றால், நித்தியத்தின் ஒளியில் வாழ்வது தான் ஞானமுள்ள வாழ்வாகும்.பாவம் தீவிரமானது என்றால், அதை நம் வாழ்வில் இருந்து அகற்றுவது முக்கியமானதாகும். நாம் ஞானத்தைத் தழுவிக்கொண்டால், நமது முன்னுரிமைகள் மாற்றமடையும், நாம் நம் வாழ்வை செலவளிப்பதை விட முதலீடு செய்வோம். இரக்கம் கிடைக்கிறது என்றால், அதை நாம் அளவில்லாமல் பெற்றுக் கொள்ளவும் விடுதலையும் மகிழ்ச்சியுமானவாழ்வை வாழத் தெரிந்து கொள்ள முடியும். வெற்றி உண்மையிலேயே சாத்தியம் என்றால், இந்த உலகத்தில் அதன்மூலம் நல்ல பாதிப்பை ஏற்படுத்த கர்த்தர் அதற்கான வாய்ப்புக்களை நமக்குக் கொடுப்பார்.
இந்த சுருக்கமான, ஆனால் ஆற்றலுள்ள இந்த விதிகள் குழப்பத்தைத் துரத்திவிடுகின்றன. அவை நாம் போகும்திசையில் தெளிவைத் தருகின்றன. நோக்கத்துடனும் கனி தருவதாகவும் வாழச் செய்யும். இவை யாவும்அடிப்படையானவைகள், நம்மைப் புரிதலுக்குள் நடத்துபவை. நாம் எங்கே இருக்கிறோம் என்பதை அறியவும், நாம்வாழ்வில் எங்கே செல்ல வேண்டுமோ அங்கு செல்ல நம்மை ஆயத்தப்படுத்துகின்றவைகளாகவும் இருக்கின்றன.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நீங்கள் வேதனைப்படும் போது கர்த்தர் எங்கே இருக்கிறார்? நீங்கள் பிரச்சனையில் இருக்கும் போது அவரை அனுபவிப்பது எப்படி? குழப்பத்தையும் பயத்தையும் அவர் தெளிவாகவும் சமாதானமாகவும் அவர் எப்படி மாற்றுகிறார்? சங்கீதங்களில் பல பிரச்சனைகளில் துவங்கி கர்த்தரின் பிரசன்னம், வல்லமை மற்றும் வழங்கலில் முடிகின்றன. அவற்றின் சத்தியங்களைக் கற்று, அவற்றின் உதாரணங்களைப் பின்பற்றுவதன் மூலம், நமக்கும் அதைப் போன்ற சாட்சிகள் கிடைக்கின்றன. எப்போது அதிகம் தேவையாக இருக்கிறதோ அப்போது கர்த்தரைக் கண்டு கொள்வோம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://livingontheedge.org/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

உண்மைக் கர்த்தர்

உண்மை ஆன்மீகம்

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

நம்பிக்கையின் குரல்

நான் புறம்பே தள்ளுவதில்லை

கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்

தேவன் நம்முடன் - அட்வெந்து கால வேதபாடத் திட்டம்

இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்
