கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்மாதிரி

கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்

10 ல் 6 நாள்

உங்களுக்குப் பாதுகாவலர் தேவைப்படும் போது

மாபெரும் ஜெர்மன் வேத அறிஞரும் சீர்திருத்தவாதியுமான மார்ட்டின் லூத்தர், அவர் காலத்தில் ஊழலில் நாறிக்கொண்டிருந்த மத, அரசியல் அமைப்புகளை எதிர்த்து சவால் விடும் தைரியம் பெற்றிருந்தார். ஒரு தேவதூஷணம்செய்பவர் என்ற பெயரில் அவர் எரித்துக் கொல்லப்படும் அபாயம் அவருக்கு இருந்தது என்றாலும் லூத்தர் வேதத்தைஆராய்ந்து படித்து, போதித்துக் கொண்டிருந்தார். அவரது எழுத்துக்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றவையாகவும்குத்துவதாகவும் இருந்தன. பொதுவில் சவால் விடுவதும் மத நிறுவனங்களின் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புதெரிவிப்பதும் அவரை கூர்ந்து கவனிக்கவும் கொலைசெய்யவும் தலைவர்களைத் தூண்டியது.

 ஆனாலும் ஐந்தாம் சார்லஸ் மன்னருக்கு முன் 1521 இல் வார்ம்ஸ் என்ற இடத்தில் நடந்த டயட் என்னும்கூட்டத்தில் லூத்தர் தன் நிலையில் உறுதியாக நின்று, தன் போதனைகளை மறுதலிக்க மாட்டேன் என்று சொன்னார். அதிகாரிகளால் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்ட போது, அவரைப் பின்பற்றிய ஒரு சிறு குழுவினர், அவரைத்தாக்கும் எதிரிகளைப் போல வேடமணிந்து அவரைக் கடத்திச் சென்று குதிரையில் சென்று அவரை ஒரு ஜெர்மானியகோட்டையில் இரண்டு வருடங்கள் பத்திரமாக வைத்திருந்து, அவருக்குத் தேவையானவை எல்லாவற்றையும்கொடுத்தனர். லூத்தரின் வாழ்வில் மிகவும் இருண்ட காலமாகிய இந்தக் காலத்தில், தேவன் அவருக்கு ஒரு பாதுகாப்பானகோட்டையையும், தொடர்ச்சியாக தேவைகளை சந்திப்பவர்களையும், எதிர்ப்புகள் நடுவே மகிழ்ச்சியையும், புயலின்நடுவே அமைதியையும் கொடுத்தார்.

 கர்த்தர் எப்போதுமே இப்படிப்பட்ட மீட்பைக் கொடுப்பதில்லை. என் தாய் மருத்துவமனையில் இருந்த போதுஅவர் எங்களுடன் இருந்தார். ஆனாலும் என் அம்மா இறந்து போனார். சில நேரங்களில் கர்த்தர் தன் மக்களுக்கு அவர்கள்பெரும் ஆபத்துக்களை சந்திக்கும் போது தைரியத்தைக் கொடுக்கிறார், ஆனால் அதிலிருந்து அவர்களை விடுவிக்காமல்போய்விடுகிறார். இது தான் அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்தில் ஸ்தேவானுக்கும் நடந்தது. அவரைத் தேவதூஷணம் சொன்னவர் என்று குற்றம் சாட்டிய மதத்தலைவர்களுக்கு அவர் தைரியமாக சவால் விட்டார். ஆனால் அவரதுவல்லமையான சாட்சியையும் மீறி, கர்த்தர் தீயவர்களின் எண்ணம் செயல்பட அனுமதித்தார் (அப்போஸ்தலர் 7:59-60). ஆனாலும் அங்கேயும் அவர் இருந்தார். அவருக்கு பலத்தைக் கொடுத்து, அவரது நித்திய நோக்கத்தை நிறைவேற்றினார்.

 கர்த்தரின் பாதுகாப்பு என்பது வேதாகமத்திலும் வரலாற்றிலும் நாம் வாசிக்கும் ஆன்மீகக் கதாநாயகர்களுக்குமட்டும் உரியது அல்ல. இவர்கள் எல்லாருமே சாதாரண மக்கள் தான், ஆனால் அவர்கள் கர்த்தரை நம்பிச்சார்ந்திருக்கவும், அவரது வார்த்தைக்கு ஏற்ப பதிற்செயல் செய்யவும் கற்றுக் கொண்டவர்கள். உண்மையிலேயே நம்மில்பலர் நாம் நல்லவர்களாக, தைரியமும் பக்தியும் உள்ளவர்களாக எல்லாம் இருப்பதால் கர்த்தரை நம்பவில்லை. மாறாகநமக்கு வேறு வாய்ப்பு இல்லாததால் தான் அவரை சார்ந்திருக்கிறோம். கர்த்தரை நீங்கள் எப்போது அதிகம் பரபரப்புடன்தேடுகிறீர்களோ அப்போது தான் அவரை அனுபவிப்பது பெரும்பாலும் நடக்கும். உங்களது இருண்ட தருணங்களில்,அவர் உங்களது பலத்த கோட்டையாகவும் பெரும் பலமாகவும் இருப்பார்.

வேதவசனங்கள்

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்

நீங்கள் வேதனைப்படும் போது கர்த்தர் எங்கே இருக்கிறார்? நீங்கள் பிரச்சனையில் இருக்கும் போது அவரை அனுபவிப்பது எப்படி? குழப்பத்தையும் பயத்தையும் அவர் தெளிவாகவும் சமாதானமாகவும் அவர் எப்படி மாற்றுகிறார்? சங்கீதங்களில் பல பிரச்சனைகளில் துவங்கி கர்த்தரின் பிரசன்னம், வல்லமை மற்றும் வழங்கலில் முடிகின்றன. அவற்றின் சத்தியங்களைக் கற்று, அவற்றின் உதாரணங்களைப் பின்பற்றுவதன் மூலம், நமக்கும் அதைப் போன்ற சாட்சிகள் கிடைக்கின்றன. எப்போது அதிகம் தேவையாக இருக்கிறதோ அப்போது கர்த்தரைக் கண்டு கொள்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://livingontheedge.org/