கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்மாதிரி
உங்களுக்கு மகிழ்ச்சி தேவைப்படும் போது
இயேசு தனது சீடர்கள் மகிழ்ச்சியால் நிறைந்திருக்க வேண்டும் என்று விரும்பினார் (யோவான் 15:11). சிறையிருப்பில்இருந்து கண்ணீருடன் திரும்பி வந்திருந்த ஒரு கூட்டத்தினரைப் பார்த்து நெகேமியா கர்த்தருக்குள் மகிழ்ச்சியாகஇருப்பதே அவர்களுடைய பெலன் என்று சொன்னார் (நெகேமியா 8:10). பவுல் தனது நிருபங்களில் ஒன்றை மகிழ்ச்சிநிறைந்த வார்த்தைகளால் நிரப்பியிருந்தார். அவரது வாசகர்களை எப்போதும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருக்கும்படிகேட்டுக் கொண்டார் (பிலிப்பியர் 4:4). தேவனின் பிரசன்னத்தில் முழுமையான மகிழ்ச்சியைக் காணலாம் என்று தாவீதுசொல்லியிருக்கிறார் (சங்கீதம் 16:11). மோசே தனது மக்கள் தங்கள் நாட்கள் முழுவதிலும் மகிழ்ந்து பாடும் வகையில்அவர்களை கைவிடாத அன்பினால் திருப்தியாக்கும்படி தேவனிடம் கேட்கிறார் (சங்கீதம் 90:14). வேதாகமத்தின்படி, நமது மகிழ்ச்சி என்பது கர்த்தருக்கு மிகவும் பெரியது ஆகும்.
நம் வாழ்வில் கர்த்தர் செயலாற்றுகிறார் என்பதற்கு மகிழ்ச்சி தான் ஒரு சாட்சியாகும். தேவனுக்கு நாம் கொடுக்கும்உணர்ச்சிபூர்வமான பதில்கள் சில நேரங்களில் வெவ்வேறாக இருக்கலாம், நாம் எப்போதுமே அவர் நமக்குத் தரும்மகிழ்ச்சியை உணர முடியாமல் இருக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக அவரது செயல்களை ஒத்துக் கொள்ளும் போது, அவரது வாக்குத்தத்தங்களைத் தழுவிக் கொள்ளும் போது, அவரது மன்னிப்பை ஏற்றுக் கொள்ளும் போது, எதிரானதும்குழப்பமுமானதுமான சூழ்நிலைகளிலும் கூட மகிழ்ச்சி நம்மில் பொங்கிப் பிரவகிக்கும்.
நம் வாழ்வில் கர்த்தரின் பிரசன்னமும் வல்லமையும் எப்போதும் மகிழ்ச்சியை நமக்குள் உருவாக்கவேஇருக்கின்றன. அது இறுதியிலாவது நடக்கத்தான் செய்யும். கர்த்தருக்குள் மகிழ்ச்சியை நாம் அனுபவிக்கும் போது, நமதுசூழ்நிலைகள் மாறாமல் போகலாம், ஆனால் அவற்றின் மீதான நமது கண்ணோட்டங்கள் தலைகீழ் மாற்றத்தைப் பெறும். பிரச்சனைகளால் மூழ்கிப் போகாமல், நாம் பிரச்சனைகளைக் கர்த்தரின் கிருபை வல்லமை ஆகியவற்றின் ஊடாகக்காணத் துவங்கி விடுவோம்.
காலங்கள் கடந்து செல்லச் செல்ல, என்னை நானே, கர்த்தரில் மகிழ்ச்சியாய் இருக்கிறேனா என்று கேட்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இது ஒன்றும் நூறு சதவீதம் சரியான முறை இல்லை தான், ஆனால் இந்த துருவிப் பார்க்கும்கேள்வியானது, நான் எந்த அளவுக்கு என் வாழ்வை வழி நடத்த பரிசுத்த ஆவியானவரை அனுமதிக்கிறேன் என்பதைக்கண்டறிய முடிகிறது. கிறிஸ்தவ வாழ்வானது இதைச் செய், இதைச் செய்யாதே என்பது போன்ற தொடர்ச்சியானகட்டளைகளாக உணரப்படும் போது, என் இதயத்தில் இருக்கும் ஏதோ ஒன்றுக்கு கவனம் தேவைப்படுகிறது என்பதைஅறிந்து கொள்கிறேன்.
ஆழமான, நேர்மையான, நெருக்கமான, தொடர்ச்சியான ஜெப நேரங்கள் தான் கர்த்தரின் மகிழ்ச்சியை நாம்உணர்ந்து கொள்ளும் அனுபவத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான முக்கிய அம்சமாகும் என்று நான் நம்புகிறேன். எங்கேயாவது ஓடிக் கொண்டிருக்கும் போது, வாகனம் ஓட்டும் போது அல்லது காபி குடித்துக் கொண்டிருக்கும் போதுசெய்யும் ஜெபத்தைச் சொல்லவில்லை. நீங்கள் உண்மையுடன், உங்களைத் திறந்து கர்த்தருடன் பேசும் ஜெபத்தைப்பற்றியே நான் சொல்கிறேன். வெறுமையாகும் வரை உங்கள் இதயத்தை அவரிடம் ஊற்றிவிடுங்கள். அப்போது தான்கர்த்தர் உரையாடி அவரது அன்பை உள்ளே அனுப்புவார். அவரது வாக்குத்தத்தங்களின் உண்மையானது உங்களதுவசிப்பிடமாகவும் உங்களை மூழ்கடிக்கும் வகையிலும் இருக்கும். அவரது கரங்கள் உங்களைச் சூழ்ந்திருக்கும். உங்கள்இதயம் மீண்டுமாக மகிழ்ச்சியால் நிரம்பும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நீங்கள் வேதனைப்படும் போது கர்த்தர் எங்கே இருக்கிறார்? நீங்கள் பிரச்சனையில் இருக்கும் போது அவரை அனுபவிப்பது எப்படி? குழப்பத்தையும் பயத்தையும் அவர் தெளிவாகவும் சமாதானமாகவும் அவர் எப்படி மாற்றுகிறார்? சங்கீதங்களில் பல பிரச்சனைகளில் துவங்கி கர்த்தரின் பிரசன்னம், வல்லமை மற்றும் வழங்கலில் முடிகின்றன. அவற்றின் சத்தியங்களைக் கற்று, அவற்றின் உதாரணங்களைப் பின்பற்றுவதன் மூலம், நமக்கும் அதைப் போன்ற சாட்சிகள் கிடைக்கின்றன. எப்போது அதிகம் தேவையாக இருக்கிறதோ அப்போது கர்த்தரைக் கண்டு கொள்வோம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://livingontheedge.org/