கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்மாதிரி
அநீதியின் நேரங்களில்
நீங்கள் ஒருவேளை அநீதியை உணர்ந்திருக்கலாம். தனித்து விடப்பட்ட வேதனையை நீங்கள் அனுபவித்திருக்கலாம். கூட்டாளியால் காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கலாம். உங்களுக்கு வர வேண்டிய சொத்து உங்களுக்குமறைக்கப்பட்டிருக்கலாம். மற்றவர்களை விட அதிகக் கடினமாக உழைத்தும் மற்றவர்கள் உங்களை விட அதிகமாகபதவி உயர்வு பெறுவதைக் கண்டிருக்கலாம். உங்கள் பிள்ளைகள் விளையாட வாய்ப்பில்லாமல் உட்கார்ந்திருக்கும்போது, பயிற்சியாளரின் பிள்ளைகள் மட்டும் எப்படி விளையாட்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உங்கள்பிள்ளைகளுக்கு விளக்கிச் சொல்லும் நிலையில் நீங்கள் இருக்கலாம். அநியாயமாக நடத்தப்படும் போது உங்களுக்குள்போராட்டமாக இருக்கலாம். அநியாயம் என்பது நம்மை உள்ளேயே இருந்து தின்னக்கூடியது ஆகும்.
கிறிஸ்துவுக்காக எனது நீண்ட நாள் உறவு ஒன்றை தியாகம் செய்ய வேண்டியது வந்த போது நான் இப்படித் தான்உணர்ந்தேன். கர்த்தர் அதை எனக்குத் திரும்பத் தருவார் என்று நம்பியிருந்தேன். ஆனால் என் முன்னாள் காதலிஇன்னொருவனுடன் சென்றதை நான் என் கண்களால் காண வேண்டியதாக இருந்தது. நான் என் வேதாகமத்தைத்திறந்து, என் அறைக்குள் இருந்து கொண்டு கர்த்தருக்கு ஒரு கெடு கொடுத்தேன். குறிப்பிட்ட நேரத்துக்குள் என்னுடன்பேசும் அல்லது நான் உம்மை விட்டுப் போய்விடப் போகிறேன் என்றேன். நான் அப்போது சங்கீத புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். மூன்று அல்லது நான்கு அதிகாரங்களை மட்டும் வாசித்துப் பார்த்துவிட்டு விட்டுவிடலாம் என்றுநினைத்திருந்தேன். முதல் இரண்டு அதிகாரங்களும் என் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பின்னர் 73 ஆம்சங்கீதம் ஏதோ வித்தியாசமாக இருப்பதை நான் உணர்ந்தேன். அது கர்த்தருடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி என் வாழ்வில்என்றென்றும் ஏற்பட்ட ஒரு மாற்றத்துக்குக் காரணமாக இருந்தது. நான் அந்த சங்கீதத்தை வாய்விட்டு சத்தமாகப்படித்தேன். சங்கீதக்காரனின் குறை சொல்லுதல்களில் எனது சொந்த சொற்களே இருந்ததை என் காதுகளால் கேட்டேன்.
கர்த்தர் சரியானது என்று சொல்வதைச் செய்ய நான் முயற்சி செய்து கொண்டிருந்ததால் என்னைச் சுற்றிலும்கயிறுகள் கட்டப்பட்டு முடிச்சுகள் போடப்பட்டதாக நான் உணர்ந்தேன். ஆனால் அதற்கு முன் இருந்ததை விடகிறிஸ்தவனான பின்னர் தான் என் வாழ்வில் அதிகப் பிரச்சனைகள் ஏற்பட்டதை உணர்ந்தேன். சங்கீதக்காரன்சொன்னது போல, “இவைகளைப் புரிந்து கொள்ள நான் முயற்சித்த போது, அது இன்னும் ஆழமாக என்னை அதுதுன்புறுத்தியது” (வசனம் 16). மேலும் சங்கீதக்காரனைப் போல, தீர்வு என் கண்களுக்கு முன்பாகவே இருந்தது: “நான்கர்த்தரின் சன்னிதிக்குள் நுழைந்தேன்” (வசனம் 17). நித்தியத்தின் கண்ணோட்டத்தில் என் வாழ்க்கையை மீண்டும்பார்க்கத் துவங்கினேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக இருக்கின்ற, தம் மக்களுக்காக பதில் செய்கிற கர்த்தரை ஆராதித்தல் என்பது நமக்குள்இருக்கும் அநீதி என்னும் சிக்கலைத் தீர்த்துவிடுகிறது. அவரது வாக்குத்தத்தங்களும், கண்ணோடங்களும் நம்வேதனையை மாற்றுகின்றன. அநியாயமாகத் தோன்றுகின்றவைகள் இறுதியில் அவரது பிள்ளைகளுக்குநன்மையாகவே முடிகின்றன. நமது இதயம் மென்மையாகிறது, நமது கண்ணோடம் மாறுகிறது, 26 ஆம் வசனம்சொல்வது போல நாம் சங்கீதக்காரனின் சொற்களுடன் கொண்டாடுகிறோம்: “கர்த்தரே என் இதயத்தின் பெலமாகவும்என் பங்காகவும் என்றென்றைக்கும் இருக்கிறார்.”
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நீங்கள் வேதனைப்படும் போது கர்த்தர் எங்கே இருக்கிறார்? நீங்கள் பிரச்சனையில் இருக்கும் போது அவரை அனுபவிப்பது எப்படி? குழப்பத்தையும் பயத்தையும் அவர் தெளிவாகவும் சமாதானமாகவும் அவர் எப்படி மாற்றுகிறார்? சங்கீதங்களில் பல பிரச்சனைகளில் துவங்கி கர்த்தரின் பிரசன்னம், வல்லமை மற்றும் வழங்கலில் முடிகின்றன. அவற்றின் சத்தியங்களைக் கற்று, அவற்றின் உதாரணங்களைப் பின்பற்றுவதன் மூலம், நமக்கும் அதைப் போன்ற சாட்சிகள் கிடைக்கின்றன. எப்போது அதிகம் தேவையாக இருக்கிறதோ அப்போது கர்த்தரைக் கண்டு கொள்வோம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://livingontheedge.org/