கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்மாதிரி
உங்களுக்கு அநியாயம் நடக்கும் போது
தனக்கு அநியாயம் நடந்திருக்கிறது என்று ஆசாப் நினைத்தார். அந்த அநீதி அவருக்குள் இருந்து அவரையே அரித்துக்கொண்டே இருந்தது. அவரது அனுபவங்களும் தேவனது சத்தியமும் ஒன்றுக்கு ஒன்று ஒத்துப் போகாமல் இருந்த போது, இந்த முதிர்ச்சியடைந்த தெய்வீக மனிதன் தன் இதயத்தைக் கர்த்தரிடம் ஊற்றிவிட்டார். அவரது வேதனையும்அதிலிருந்து அவருக்குக் கிடைத்த வெளிப்பாடும் நமக்காக இந்த அற்புதமான சங்கீதத்தில் பாதுகாத்துவைக்கப்பட்டுள்ளது.
ஆசாப் வெளிப்படுத்தியுள்ள சிந்தனைகள் நமக்கு ஒரு மாதிரியாக இருக்கின்றது. நீங்கள் எப்படிப்பட்ட அநீதியைஅனுபவித்திருந்தாலும், இந்த வார்த்தைகளை அந்த குற்றங்களை மனதில் வைத்துக் கொண்டு வாசியுங்கள். வாழ்க்கைஉங்களுக்கு அநியாயத்தை செய்திருப்பதாக நீங்கள் நினைக்கும் போதெல்லாம் அவரது முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். அவர் காட்டும் இந்த குறிப்பிட்ட அடிகளை எடுத்து வையுங்கள்: (1) உங்கள் இதயத்தைக் கர்த்தரிடன் ஊற்றி விடுங்கள்; (2) உங்கள் தேர்ந்தெடுப்புகளைக் கவனமாகச் செய்யுங்கள்; (3) பெரும் சித்திரத்தைப் பாருங்கள்; (4) அவருடனானஉங்கள் உறவை மறு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் உணரும் அநீதியை கண்ணோட்டத்தில் ஏற்படும்மாற்றமானது வல்லமையாக சரி செய்துவிடும்.
இந்த விதி தான் ஆசாபின் சங்கீதத்தில் ஒரு திருப்பத்தைத் தூண்டி விட்டது ஆகும் (வசனங்கள் 16-17). நாம்கர்த்தரின் பிரசன்னத்துக்குள் அவரது சன்னிதானத்தில் நுழையும் போது, அவரது சத்தியம் என்னும் வெளிச்சத்தில் நிற்கும்போது, நாம் அனைத்தையும் நித்தியத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கத் துவங்கிவிடுவோம். ஆசாப் ஏறத்தாழஎல்லாவற்றையும் விட்டுவிடும் ஒரு விளிம்பு நிலைக்குப் போயிருந்தார்—அவர் கால்கள் சறுக்குதலுக்கு சற்றே தப்பிற்று(வசனம் 2)—ஏனென்றால் அந்த நேரத்தில் அவரது சூழ்நிலையை மட்டும் தான் பார்த்தார். தன் இதயத்தை சுத்தமாகவைத்திருப்பதாலும் கர்த்தரைப் பின்பற்றுவதாலும் பயன் ஒன்றுமில்லை என்று அவர் நினைத்திருந்தார். வேறுகண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு அவர் கர்த்தரின் பிரசன்னத்தை உணர வேண்டியதாக இருந்தது. நாம் நமக்கு ஏற்பட்டஅநியாயங்களில் நம் கவனத்தை வைத்துக் கொண்டிருக்கும் போது நாம் குறுகிய கண்ணோட்டம் உள்ளவர்களாகஇருக்கிறோம். நாம் சிறிது பின்னாகத் தள்ளி நின்று கர்த்தர் பெரிய சித்திரத்தை நமக்குக் காட்ட அனுமதிக்கும் போது, நம்பிரச்சனைகள் நித்தியத்தின் பின்னணியில் எத்தனை குறுகிய காலத்துக்கானவைகள் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். நாம் இறுதிக் காலத்தில் நம்மை வைத்துப் பார்த்து, திரும்பிப் பார்க்கும் போது, “நமது இக்காலத்துப்பாடுகள் நம்மில் வெளிப்படப் போகும் இனி வரும் மகிமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே தகுதி இல்லாதவைகள்” (ரோமர்8:18) என்பதை அறிந்து கொள்வோம்.
கர்த்தர் உங்களுக்கு ஏற்பட்ட அநியாயத்தைப் பயன்படுத்தி உங்கள் குணத்தைக் கட்டி எழுப்புவார். உங்கள்வாழ்க்கையை மாற்றுவார், உங்களுக்கு ஒரு சாட்சியைக் கொடுப்பார். மாபெரும் நோக்கத்தை நிறைவேற்றுவார். ஆனால்அவர் நல்ல முடிவைக் கொண்டு வருவார் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் சிறிது பொறுமையுடன் அங்கேயே காத்திருக்கவேண்டும். தற்காலத்தில் உங்களுக்குப் புரியாத சூழ்நிலைகளில் நிலைத்திருக்கும் விசுவாசத்தைக் காத்துக்கொள்வதற்கான ஒரே வழியானது, உங்கள் சூழ்நிலையிலிருந்து உங்கள் கவனத்தை விலக்கி, பெரும் சித்திரத்தின் மீதுகவனத்தை செலுத்துவது தான். அனைத்தும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும் என்று கர்த்தர் நமக்கு வாக்குத்தத்தம்கொடுத்திருக்கிறார் (ரோமர் 8:28). இறுதியில், உங்களுக்கு ஏற்பட்ட அநியாயமானது உண்மையிலேயே நல்லதாகவேமாறியிருக்கிறது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நீங்கள் வேதனைப்படும் போது கர்த்தர் எங்கே இருக்கிறார்? நீங்கள் பிரச்சனையில் இருக்கும் போது அவரை அனுபவிப்பது எப்படி? குழப்பத்தையும் பயத்தையும் அவர் தெளிவாகவும் சமாதானமாகவும் அவர் எப்படி மாற்றுகிறார்? சங்கீதங்களில் பல பிரச்சனைகளில் துவங்கி கர்த்தரின் பிரசன்னம், வல்லமை மற்றும் வழங்கலில் முடிகின்றன. அவற்றின் சத்தியங்களைக் கற்று, அவற்றின் உதாரணங்களைப் பின்பற்றுவதன் மூலம், நமக்கும் அதைப் போன்ற சாட்சிகள் கிடைக்கின்றன. எப்போது அதிகம் தேவையாக இருக்கிறதோ அப்போது கர்த்தரைக் கண்டு கொள்வோம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://livingontheedge.org/