கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்மாதிரி
![கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F22146%2F1280x720.jpg&w=3840&q=75)
நீங்கள் பயத்தால் பிடிக்கப்பட்டிருக்கும் போது
என் வேதாகமத்தில் சங்கீதம் 46 க்கு அருகே ஒரு குறிப்பு, பச்சை நிறத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ட்யூக் மருத்துவ மையம், 19.2.’92. அம்மா இறந்து கொண்டிருக்கிறார். அந்த சூழலில் நான் எத்தனை ஆதரவற்ற நிலையில் இருந்தேன் என்பதுஎன் நினைவில் இருக்கிறது. அந்த சங்கீதத்தின் வசனங்களால் நான் எந்த அளவுக்கு என்னை நிறைத்துக்கொண்டிருந்தேன் என்பது என் நினைவில் இருக்கின்றது. கர்த்தரே என் அடைக்கலமும் என் பலமுமாக, ஆபத்துக்காலத்தின் அனுகூலமான துணையுமாக இருக்க வேண்டிய தேவையில் நான் இருந்தேன். பயத்தின் பிடியில்இருந்து நான் விடுதலையாக வேண்டிய தேவையில் இருந்தேன்.
ஒரு சூறாவளியின் கடும் காற்றினால் ஒரு கடல் தத்தளிப்பதை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். அதன்நீர் நுரைத்து, பேரோசையிடும். அவ்வாறு தான் என் உணர்வுகளும் அன்று இருந்தன. சங்கீதத்தை எழுதியவரும்அப்படிப்பட்ட ஒரு உணர்வைத் தான் எழுதியிருக்கிறார். அது ஒரு அபாயமும் வல்லமையுமான சூழ்நிலை. அவரதுஉள்ளுணர்வு கர்த்தரையே தன் அடைக்கலாம சார்ந்து கொள்ளச் சொல்கிறது. அப்படிப்பட்ட குழப்பமான நிலைகளிலும்கர்த்தர் நம்முடன் அங்கேயே இருக்கிறார்.
நம் வாழ்வின் புயலில் கர்த்தர் எப்படியெல்லாம் நமக்கு உதவுகிறார் என்பதை மூன்று வழிகளில் இந்த சங்கீதம்நமக்குச் சொல்கின்றது: (1) அவர் நமது அடைக்கலம். நம்மைச் சூழ்ந்திருக்கும் வெளிப்புற ஆற்றல்களிடம் இருந்து அவரேபாதுக்காக்கிறார். அவர் எப்போதுமே அந்த ஆற்றல்களை நம்மைவிட்டு நீக்கிப் போடுவதில்லை. ஆனால் அவர் தனதுகரங்களால் நம்மை அணைத்துக் கொள்கிறார். எந்த ஒரு பெரும் அரண்களையும் கோட்டைகளையும் விட பெரும்பாதுகாப்பாக மாறுகிறார். (2) அவர் நமது பெலனாக இருக்கிறார்—இருக்கும் பிரச்சனையை சமாளிப்பதற்கானஉள்ளான வல்லமையாக இருக்கிறார். அவர் தனது வல்லமையை நாளைக்காக சேமித்து வைப்பதில்லை. அவர்இன்றைக்கான கிருபையை நமக்குக் கொடுக்கிறார். நாளை அவர் நாளைக்கானவற்றைக் கொடுப்பார். ஒவ்வொருநாளும் நமக்குத் தேவையான கிருபையை ஒவ்வொரு நாளும் அவர் நமக்குத் தருவார். (3) ஆபத்துக்காலத்தில்அனுகூலமான உதவியாக இருக்கிறார். எத்தனை எதிர்பாராத, மூழ்கடிக்கும் சூழ்நிலையாக இருந்தாலும், அவர்எப்போதும் உதவ ஆயத்தமாக இருக்கிறார்.
சுவிசேஷங்கள் நமக்கு எப்போதும் இருக்கின்ற, பாதுகாக்கின்ற, அடைக்கலமான கர்த்தரைப் பற்றிய ஒருசித்திரத்தைக் கொடுக்கின்றன. கலிலேயாக்கடலில் இயேசுவின் சீடர்களின் மீது ஒரு பெரும் புயல் வீசிய போது, அவர்கள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த போது அவர்கள் இயேசுவை எழுப்பினார்கள். அலைகள் பொங்கிக்கொண்டிருந்த சூழலில் எப்படியோ அவர் உறங்கிக் கொண்டிருந்தார். அவர் புயலை அமைதிப்படுத்தினார். அவர் அந்தபடகில் அவர்களுடன் இருந்தார். அவரது பலத்தையும் பாதுகாப்பையும் வழங்கினார்- அதைப் போலவே அவர்நம்முடனும் இருக்கிறார்.
அவர் உங்களுக்காக இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அவர் உங்கள் அருகில் இருக்கிறார். நீங்கள் உங்கள் வாழ்க்கையைக் குழப்பி அதன் பின்னர் வந்து அதை சரி செய்யலாம்என்று அவர் காத்திருப்பதில்லை. நீங்கள் பயத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் போதும் கூட அவர் இங்கேயே உங்களுக்காகஇருக்கிறார். நீங்கள் எந்த சூழ்நிலையை எதிர்கொண்டாலும் உங்களது ஒரே பாதுகாப்பு அவரே.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F22146%2F1280x720.jpg&w=3840&q=75)
நீங்கள் வேதனைப்படும் போது கர்த்தர் எங்கே இருக்கிறார்? நீங்கள் பிரச்சனையில் இருக்கும் போது அவரை அனுபவிப்பது எப்படி? குழப்பத்தையும் பயத்தையும் அவர் தெளிவாகவும் சமாதானமாகவும் அவர் எப்படி மாற்றுகிறார்? சங்கீதங்களில் பல பிரச்சனைகளில் துவங்கி கர்த்தரின் பிரசன்னம், வல்லமை மற்றும் வழங்கலில் முடிகின்றன. அவற்றின் சத்தியங்களைக் கற்று, அவற்றின் உதாரணங்களைப் பின்பற்றுவதன் மூலம், நமக்கும் அதைப் போன்ற சாட்சிகள் கிடைக்கின்றன. எப்போது அதிகம் தேவையாக இருக்கிறதோ அப்போது கர்த்தரைக் கண்டு கொள்வோம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://livingontheedge.org/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![உண்மைக் கர்த்தர்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F24467%2F320x180.jpg&w=640&q=75)
உண்மைக் கர்த்தர்
![உண்மை ஆன்மீகம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F24465%2F320x180.jpg&w=640&q=75)
உண்மை ஆன்மீகம்
![யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F25110%2F320x180.jpg&w=640&q=75)
யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்
![நம்பிக்கையின் குரல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F23308%2F320x180.jpg&w=640&q=75)
நம்பிக்கையின் குரல்
![நான் புறம்பே தள்ளுவதில்லை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F26850%2F320x180.jpg&w=640&q=75)
நான் புறம்பே தள்ளுவதில்லை
![கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F25512%2F320x180.jpg&w=640&q=75)
கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்
![தேவன் நம்முடன் - அட்வெந்து கால வேதபாடத் திட்டம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F23038%2F320x180.jpg&w=640&q=75)
தேவன் நம்முடன் - அட்வெந்து கால வேதபாடத் திட்டம்
![இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F26874%2F320x180.jpg&w=640&q=75)
இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்
![BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F24541%2F320x180.jpg&w=640&q=75)
BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்
![தாவீதின் சங்கீதங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F24975%2F320x180.jpg&w=640&q=75)